Liver Cleanse : கல்லீரலில் தேங்கும் கொழுப்பை நீக்கும் நெல்லிக்காய்! இப்படி யூஸ் பண்ணா 3 நாளில் கரையும்

Published : Aug 27, 2025, 12:49 PM IST
liver health

சுருக்கம்

நெல்லிக்காயுடன் இரண்டு பொருளை சேர்த்து ஜூஸ் போட்டு குடித்து வந்தால் கல்லீரல் சுத்தமாகும். அதை தயாரிப்பது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

நம் உடலில் இருக்கும் உறுப்புகள் நல்லபடியாக இயங்க வேண்டுமானால் கல்லீரல் ஆரோக்கியமாக இருப்பது மிகவும் அவசியம். ஆனால் இந்த காலகட்டத்தில் கொழுப்பு கல்லீரல் பிரச்சனையால் (fatty liver) பலரும் பாதிக்கப்படுகின்றன. இது ஒரு பொதுவான பிரச்சனையாகவும் மாறிவிட்டது.

இத்தகைய சூழ்நிலையில், கொழுப்பு கல்லீரல் பிரச்சனையில் இருந்து நிவாரணம் அளிக்க நெல்லிக்காய் உதவும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? உண்மையில் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க நெல்லிக்காய் மிகவும் நன்மை பயக்கும்.

கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கவும், கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் நெல்லிக்காய் கொண்டு டீடாக்ஸ் ட்ரிங்க்ஸ் பெரிதும் உதவும். அதை தயாரிப்பது எப்படி என்று இப்போது இந்த பதிவில் பார்க்கலாம்.

கல்லீரலை சுத்தப்படுத்தும் நெல்லிக்காய் டீடாக்ஸ் ட்ரிங்க்ஸ் தயாரிப்பத்து எப்படி?

தேவையான பொருட்கள் :

நெல்லிக்காய் - 4 (கொட்டை நீக்கியது) 

கற்றாழை ஜெல் - 3-4 ஸ்பூன் 

கொத்தமல்லி - கை கொத்து 

மஞ்சள் தூள் - கால் ஸ்பூன் 

உப்பு - 1 சிட்டிகை 

தண்ணீர் - 100 மி.லி

செய்முறை:

ஒரு மிக்ஸி ஜாரில் கொட்டை நீக்கிய நெல்லிக்காயை சிறியதாக நறுக்கி போடவும். அதனுடன் கற்றாழை ஜெல் கொத்தமல்லி மற்றும் தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டவும். பிறகு அதில் ஒப்பு மற்றும் மஞ்சள் சேர்த்து கலக்கவும். அவ்வளவுதான் கல்லீரலை சுத்தப்படுத்தும் நெல்லிக்காய் டீடாக்ஸ் ட்ரிங்க்ஸ் தாயார்.

எப்போது குடிக்கணும்?

தினமும் காலை உணவு சாப்பிடுவதற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன்பும் அல்லது உணவு சாப்பிட்ட பிறகு சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகும் இதை குடிக்கலாம். இந்த பானம் குடித்த பிறகு ஒரு மணி நேரத்திற்கும் எதுவும் சாப்பிடக்கூடாது. இந்த பானத்தை தொடர்ந்து மூன்று நாட்கள் குடித்து வந்தால் நல்ல பலன்களை காண்பீர்கள். முக்கியமாக இந்த பானம் குடிக்கும் நாளில் ஆல்கஹால், சிகரெட் மற்றும் அதிக எண்ணெய் உணவுகள் எடுத்துக் கொள்ளக் கூடாது.

நன்மைகள் :

- நெல்லிக்காய் கல்லீரலில் படிந்திருக்கும் நச்சுக்கள் மற்றும் ஆங்காங்கே தேங்கியுள்ள கொழுப்புகளை வெளியேற்றும்.

- கற்றலையில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளதால் அவை கல்லீரலை ஆரோக்கியமாக வைக்க பெரிதும் உதவுகிறது.

- கொத்தமல்லி இலையானது செரிமானத்தை மேம்படுத்தவும், இரத்தக்குழாய்களில் கொழுப்புகள் படிவதையும் தடுக்கிறது.

- மஞ்சள் நிற்கும் குறுகுமின் கல்லீரலில் உள்ள கொழுப்புகளை வெளியேற்றி சுத்தமாக வைக்கும்.

குறிப்பு : மருத்துவரிடம் ஆலோசிக்காமல் எந்தவொரு புதிய முயற்சியிலும் ஈடுபட வேண்டாம்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Foods for Hair Loss : இந்த '5' உணவுகள் முடி கொட்டுறத அதிகரிக்கும் இனிமேல் குறைச்சுக்கோங்க
Heart Healthy Exercises : ஆயுசுக்கும் இதயம் ஆரோக்கியமாக இருக்க '5' பயிற்சிகள் போதும்! தினமும் செய்ங்க