
உடல் ஆரோக்கியத்திற்கு பழங்கள், காய்கறிகள் மட்டுமல்லாமல் அதையும் தாண்டி சில உணவுப் பொருட்கள் உதவி புரிகிறது. அதில் ஒன்று தான் கடலில் கிடைக்கும் கடற்பாசிகள். உண்மையில், கட்றபாசிகளில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால், பல நன்மைகளை நாம் பெறுவது உறுதி. கடற்பாசிகள் எந்த வகையான உப்பு நீர் மற்றும் நன்னீரிலும் நன்றாக வளரக் கூடியது. இது அதிகளவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த நன்மை பயக்கும் தாவரமாகும்.
கடற்பாசியில் உள்ள சத்துக்கள்
வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள், ஃபோலேட், வைட்டமின் பி 12 மற்றும் பி6 தவிர, வைட்டமின்கள் ஏ, சி, ஈ மற்றும் கே போன்றவையும் அதிகம் உள்ளது. கடற்பாசிகள் உடலுக்கு பல்வேறு வகையான நன்மைகளைத் தர வல்லது. இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது இன்னும் பல நன்மைகளைத் தரும் என்பது மறுக்க முடியாத உண்மை. அவ்வகையில் கடற்பாசியில் இருந்து கிடைக்கும் சில அற்புதமான நன்மைகள் என்னென்ன என்பதை இங்கு காண்போம்.
Banana: தினந்தோறும் வாழைப்பழத்தை சாப்பிடுபவரா நீங்கள்? இந்த எச்சரிக்கை உங்களுக்கு தான்!
கடற்பாசியின் நன்மைகள்
கடற்பாசிகளை உணவில் சேர்த்துக் கொண்டால், எலும்புகளை மிக ஆரோக்கியமாகவும், வலுவாகவும் வைத்திருக்க உதவும். மேலும், எலும்புகளின் அடர்த்தியை அதிகரித்து, எலும்பு தேய்மானத்தை குறைக்கிறது.
கடற்பாசியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதனால், ஹைபர் தைராய்டு மற்றும் ஹைப்போ தைராய்டு ஆகிய இரண்டும் கட்டுக்குள் வந்துவிடும்.
கடற்பாசியில் நார்ச்சத்துக்கள் மிக அதிகமாக உள்ளது. இதனை நம்முடைய தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளும் போது, தேவையில்லாத கொழுப்புகள் குறைவதோடு, இதயமும் ஆரோக்கியாக இருக்கும்.
கடற்பாசியை வழக்கமான உணவோடு சேர்த்துக் கொண்டு, தினந்தோறும் சிறிதளவு எடுத்துக் கொண்டால், நார்ச்சத்துக்கள் நிறைந்த மிகச் சிறந்த டயட்டாக மாறிவிடும். இதனால் நம் உடலில் தேங்கியுள்ள கழிவுகள் வெளியேற்றப்பட்டு, உடல் எடை வெகு விரைவாக குறையத் தொடங்கும்.
வயிற்றில் இருக்கும் என்சைம்களை சரியான முறையில் தூண்டி, வயிற்றில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்கிறது இந்த கடற்பாசி. அதோடு, தீமை செய்யும் கெட்ட பாக்டீரியாக்களையும் அழித்து, நமது வயிறை மிக ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.
நீரிழிவுப் பிரச்சனை இருப்பவர்கள், கடற்பாசியை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் கொண்டு வந்து, நீரிழிவு நோயையும் கட்டுப்படுத்துகிறது.
கடற்பாசியை உணவில் சேர்த்து சாப்பிடுவதால், உடலில் ஆக்சிடேட்டிவ் சேதத்தால் உண்டாகும் பிரச்சனைகளைச் முழுமையாக சரிசெய்து, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது.