
முகப்பரு:
பருவால் முகத்தில் கருமை நிறம், சிறிய பள்ளம் ஏற்படும்.
வியர்வை நாளங்களில் அடைப்பு, எண்ணெய் சுரப்பிகள் அடைபடுவது, அதிகளவில் இனிப்பு சாப்பிடுவது, மலச்சிக்கல், வியர்வை தடைபடுவது போன்றவற்றால் முகப்பரு ஏற்படும்.
தீர்வுகள்:
முகப்பரு பிரச்னைகளுக்கு கற்பூரவல்லி, திருநீற்று பச்சை, வெள்ளை சாரணை ஆகியவை மருந்தாகிறது.
1.. திருநீற்று பச்சை
துளசி இனத்தை சார்ந்தது. திருநீற்று பச்சையில் அற்புதமான மருத்துவ குணங்கள் உள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தி உடையது. இதன் சாறு ஒரு சொட்டு விடுவதால் காது வலி சரியாகும்.
முகப்பருக்கு மருந்தாக விளங்கும் கற்பூர வல்லி, ஓமத்தின் மணத்தை உடையது.
சளியை வெளியேற்றும் தன்மை கொண்டது.
வெள்ளை சாரணை முகப்பருவை போக்குகிறது.
இதன் விதைகள் சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சலை போக்குகிறது.
இலைகள் தோல் நோயை போக்க கூடியது.
முகப்பருவுக்கு இதன் சாறு அற்புதமான மருந்தாகிறது.
2.. கற்பூரவல்லி
இதன் இலைகளை நசுக்கி சாறு பிழிந்து சந்தன பொடியுடன் சேர்த்து நன்றாக கலந்து பருக்களின் மீது பூசி வர முகப்பரு மறையும்.
முகப்பருவின் வீக்கம், வலி வற்றிப்போகும். ஒவ்வொரு இல்லத்திலும் இருக்க வேண்டிய அற்புதமான மூலிகை கற்பூரவல்லி.
வயிற்று கோளாறுகளை போக்கும். இருமல், சளி, காய்ச்சலை சரி செய்யும்.
3.. வெள்ளை சாரணை
வெள்ளை சாரணையின் வேர் பொடி சிறிது எடுக்கவும். முகத்தில் எரிச்சலை ஏற்படுத்தும் என்பதால் சிறிதளவு மட்டுமே மஞ்சள் பொடி சேர்க்கவும். இதனுடன் பால் சேர்த்து நன்றாக கலக்கவும். இதை முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீர் கொண்டு கழுவிவர பருக்கள் மறையும். வடு தெரியாமல் மறைந்து முகத்தில் பொலிவு, மென்மை ஏற்படும்.