உங்களுக்குத் தெரியுமா? சீரகம் செரிமானப் பிரச்சனையை முற்றிலும் போக்கும்

First Published Apr 5, 2017, 1:16 PM IST
Highlights
Did you know Cumin and digestive problems out completely


செரிமான பிரச்சனை, நோயெதிர்ப்பு சக்தி குறைவு, ஆஸ்துமா, சளி, இரத்த சோகை, தூக்கமின்மை, பைல்ஸ் போன்றவற்றை குணப்படுத்தும் ஒரு அற்புத மருந்துதான் “சீரகம்”.

அதுமட்டுமின்றி, சீரகம், அசிடிட்டி பிரச்சனைக்கும், இரைப்பையில் அதிகப்படியான அமில உற்பத்தியினால், ஏற்படும் நெஞ்செரிச்சலைத் தடுக்கும்.

சீரகத்தில் உள்ள சத்துக்கள்

சீரகத்தில் புரோட்டீன், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் டி, வைட்டமின் பி6, வைட்டமின் பி12, கால்சியம், இரும்புச்சத்து, மக்னீசியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளது.

பயன்கள்:

1.. செரிமானம்:

சீரகம் இயற்கையாகவே சீரகத்திற்கு உணவுகளை எளிதில் செரிக்கும் திறன் உள்ளது. உங்களுக்கு செரிமான பிரச்சனை இருந்தால், சீரகத்தை மருத்துவர் பரிந்துரைத்த படி பின்பற்றி வர வேண்டும். இதனால் செரிமான பிரச்சனைகள் நீக்கிவிடும்.

சீரகமானது கணையத்தில் செரிமான நொதிகளைத் தூண்டி, செரிமானம் சீராக நடைபெறுவதற்கு வழிவகுத்து, அசிடிட்டியை கட்டுப்பாட்டுடன் வைக்கும். ஆகவே எந்த ஒரு வயிற்று பிரச்சனைக்கும் சீரகத்தை எடுத்து வந்தால் நல்ல தீர்வு கிடைக்கும்.

2.. அசிடிட்டி

அசிடிட்டி பிரச்சனையால் அவஸ்தைப்படுபவர்கள், தினமும் சிறிது சீரகத்தை வாயில் போட்டு நன்கு மென்று தண்ணீர் குடித்து, 1/2 மணிநேரத்தில் அசிடிட்டியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

3.. சீரகத் தண்ணீர்

சீரகத்தை மென்று சாப்பிட பிடிக்காதர்கள், அதனை நீரில் போட்டு காய்ச்சி வடிகட்டி, அந்த நீரை தினமும் குடித்து வரலாம். இதனால் அசிடிட்டி பிரச்சனை நீங்குவதோடு, உடல் வெப்பமும் தணியும்.

click me!