இந்தியாவில் ஒவ்வொரு 4 நிமிடங்களுக்கும் ஒரு பெண் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது
மார்பகப் புற்றுநோய் என்பது பெண்களின் மார்பகங்களை பாதிக்கும் ஒரு வகையான புற்றுநோயாகும். இது உலகளவில் பெண்களில் மிகவும் பொதுவான புற்றுநோயாக கருதப்படுகிறது. மார்பக புற்றுநோய்க்கான காரணம் முழுமையாக அறியப்படவில்லை, ஆனால் பல்வேறு சுற்றுச்சூழல் மற்றும் வாழ்க்கை முறை காரணிகளை இதற்கு காரணமாக இருக்கலாம் என்று ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது.
வயது முதிர்வு, மரபியல் பிரச்சனை, உடல் பருமன், புகைபிடித்தல், மது அருந்துதல் மற்றும் குழந்தை பெற்றுக்கொள்ளாதது ஆகியவை இதற்கு காரணமாக இருக்கலாம் அடங்கும். மார்பில் கட்டி, மார்பகத்தின் அளவு அல்லது வடிவத்தில் மாற்றம், மார்பகம் அல்லது அக்குள் பகுதியில் வலி, ஆகியவை மார்பக புற்றுநோயின் அறிகுறிகளாகும். ஆரம்பத்திலேயே நோயவை கண்டறிவது வெற்றிகரமான சிகிச்சைக்கு மிகவும் முக்கியம்; 40 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பெண்களுக்கும் மேமோகிராம் சோதனை பரிந்துரைக்கப்படுகிறது. மார்பக புற்றுநோய்க்கான சிகிச்சை விருப்பங்களில் அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை, கீமோதெரபி மற்றும் ஹார்மோன் சிகிச்சை ஆகியவை அடங்கும். மார்பகப் புற்றுநோய்க்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் உயிருக்கே ஆபத்தாக முடியும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
அது என்ன டபுள் கார்டியாக் அரெஸ்ட்? இது ஏன் ஆபத்தானது? என்ன சிகிச்சை?
இந்த நிலையில், இந்தியாவில் ஒவ்வொரு 4 நிமிடங்களுக்கும் ஒரு பெண் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.Globocan 2020 ஆய்வை மேற்கோள் காட்டி கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகத்தின் நாளமில்லா அறுவை சிகிச்சை துறை பேராசிரியர் ஆனந்த் மிஸ்ரா இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
இதுகுறித்து பேசிய அவர் "இந்தியாவில் மார்பக புற்றுநோயின் இந்த அதிகரிப்பு, இந்த நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க தகுதியான மார்பக அறுவை சிகிச்சை நிபுணர்களின் தேவையை வியத்தகு முறையில் அதிகரித்துள்ளது.” என்று தெரிவித்தார்.
மேலும் “ 'இன்று தொடங்க உள்ள KGMU Breast Update 2023 இரண்டு நாள் மாநாட்டில், ஆரம்பகால மார்பக புற்றுநோயைக் கண்டறிதல் மற்றும் 'ஆன்கோபிளாஸ்டி செய்வோம்' என்ற கருப்பொருளின் கீழ் ஆன்கோபிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நுட்பங்கள் குறித்து கவனம் செலுத்தும் என்று நிகழ்வின் ஏற்பாட்டின் தலைவர் பேராசிரியர் மிஸ்ரா கூறினார்.
இந்த மாநாட்டின் அமைப்புச் செயலர் டாக்டர் குல் ரஞ்சன் சிங் கூறுகையில், “ புதிய தொழில்நுட்பங்கள் மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதை மாற்றியுள்ளன, மேலும் சிகிச்சையானது தீவிர அறுவை சிகிச்சையிலிருந்து மார்பகப் பாதுகாப்பு அறுவை சிகிச்சையாக மாறியுள்ளது. ஆன்கோபிளாஸ்டிக் மார்பக அறுவை சிகிச்சையானது புதிய அறுவை சிகிச்சை நுட்பங்களை உள்ளடக்கியது, இது புற்றுநோய் அறுவை சிகிச்சையின் கொள்கைகளை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையின் கொள்கைகளுடன் இணைத்து, மார்பகத்தின் வடிவம் மற்றும் சமச்சீர்நிலையை பராமரிக்கும் போது புற்றுநோய் சிகிச்சையை மேம்படுத்துகிறது.” என்று தெரிவித்தார்.
மூத்த மகளிர் மருத்துவ நிபுணர் டாக்டர் அமிதா சுக்லா கூறினார் இதுகுறித்து பேசிய போது 'இந்தியாவில் பெண்கள் பொதுவாக நோய் தொடர்பான அறிகுறிகளை கவனிப்பதில்லை. தாமதமாக நோயை கண்டறியும் காரணங்களில் இதுவும் ஒன்று, இரண்டாவதாக, அவர்களுக்குத் தொந்தரவு ஏற்படும் வரை அவர்கள் சிகிச்சையைத் தவிர்க்கிறார்கள்' என்று தெரிவித்தார்.