உடம்பிலுள்ள கொழுப்பை கரைத்து உடம்பை சிக்கென வைக்க சித்தர்கள் பின்பற்றிய வீட்டு மருத்துவம்!

Published : Mar 23, 2023, 09:43 PM IST
உடம்பிலுள்ள கொழுப்பை கரைத்து உடம்பை சிக்கென வைக்க சித்தர்கள் பின்பற்றிய வீட்டு மருத்துவம்!

சுருக்கம்

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் உங்கள் வீட்டு கிச்சனில் உள்ள வெறும் 4 பொருட்களை வைத்து ஒரு பொடியை செய்து அதை தினமும் எடுத்துக் கொண்டால் உங்களது உடல் எடை பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வை பெற முடியும். அவை என்னென்ன பொருட்கள்? எப்படி செய்வது? எப்போது எடுத்துக் கொள்வது போன்ற விஷயங்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

இன்றைய தலைமுறையினர் பலருக்கும் உள்ள ஒரு பெரிய பிரச்னை என்றால் அது அதிக உடல் எடை தான். அதிக உடல் எடையினால் பல்வேறு அசவுரியங்களை சந்தித்து வருகின்றனர். இந்த உடல் எடையை குறைக்க பலரும் பல்வேறு விதமான உடற்பயிற்சி, நடை பயிற்சி , உணவு கட்டுப்பாடு போன்றவை செய்து வருகிறார்கள். 

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் உங்கள் வீட்டு கிச்சனில் உள்ள வெறும் 4 பொருட்களை வைத்து ஒரு பொடியை செய்து அதை தினமும் எடுத்துக் கொண்டால் உங்களது உடல் எடை பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வை பெற முடியும். அவை என்னென்ன பொருட்கள்? எப்படி செய்வது? எப்போது எடுத்துக் கொள்வது போன்ற விஷயங்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 


இந்த பொடி உங்கள் எடையை குறைக்கும் தன்மை பெற்றது. வயிற்றில் தேங்கியிருக்கும் தேவையற்ற கொழுப்புகள் எல்லாவற்றையும் கரைத்து வெளியேற்றும். தவிர மலச்சிக்கல், வாயு பிரச்சனை, செரிமானம் போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு அருமருந்தாக செயல்படுகிறது.
 

அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களின் கழுகுப் பார்வையில் இருந்து விடுபட நிலைவாசலில் இதனை கட்டி விட்டால் போதும்!

நமது கிச்சனில் இருக்கும் பொருட்களை வைத்தே இந்த பொடியை செய்து விடலாம்.எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க!

பொடி செய்வதற்கு தேவையான பொருட்கள்:

சீரகம், ஆளிவிதை, சோம்பு, ஓமம் ஆகியவற்றை சம அளவில் ( அனைத்தும் தலா 2 ஸ்பூன் வீதம் ) எடுத்துக் கொண்டு அதனை கடாயில் சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும். (அதிகமாக வறுக்க கூடாது)

பின் இந்த கலவையை மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். இந்த பொடியை காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.

தேவைப்படும் பொழுது ஒரு க்ளாஸ் சூடான தண்ணீரில் இந்த பொடியை 1/2 ஸ்பூன் சேர்த்து சிறிது உப்பு சேர்த்து நன்றாக கலந்து குடிக்க வேண்டும்.

எப்பொழுது குடிக்க வேண்டும்:

காலை எழுந்தவுடன் டீ ,காபி போன்றவைக்கு மாற்றாக இதனை குடித்து வரலாம். இரவு நேர உணவிற்கு பின் உறங்க செல்வதற்கு முன் குடிக்கலாம்.எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் தொடர்ந்து 1 மாதம் வரை குடித்து வர எந்த வித பக்க விளைவுமின்றி உடல் எடையில் நல்லதொரு மாற்றத்தை காணலாம்.

வாயு பிரச்னை, செரிமான பிரச்னை, மல சிக்கல் பிரச்னை போன்ற தொந்தரவுகள் உள்ளவர்கள் இதனை 3 நாட்கள் உபயோகபடுத்தினால் போதுமானது.

சீரகம்:

இது உடலில் இருக்கும் தளர்வான கொழுப்பு சதைகளை கரைக்கும் தன்மை பெற்றது.

ஆளிவிதை:

இதில் மசிலேஜ் என்ற நார்ச்சத்து உள்ளதால் நீண்ட நேரம் பசியை உண்டாக்காது.

ஓமம்:

வாயு தொல்லை இருப்பவர்களுக்கு ஓமம் மிக சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

சோம்பு:

ஜீரண சக்தியை அதிகபடுத்தவும், வாயுத்தொல்லையை நீக்கவும் சோம்பு உதவுகிற்து.

உடல் எடைக்கு முக்கிய காரணம் சரியான முறையில் செரிமானம் ஆகாமல் கொழுப்பானது நாம உடம்பில் அப்படியே தேங்கி இருப்பதால் நாளடைவில் அது அதிக அளவிலான உடல் எடையை தருகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Pomegranate Benefits : தினமும் தவறாமல் ஒரு கிண்ணம் 'மாதுளை' சாப்பிட்டால் இந்த '5' பிரச்சினைகள் கிட்ட கூட வராது!
Men’s Skincare : 30 வயசு முடிஞ்ச ஆண்கள் முதல்ல 'இதை' செய்ங்க! எப்போதும் இளமையா, ஆரோக்கியமா இருப்பீங்க