சூடான இட்லிக்கு சுள்ளுன்னு கடப்பா சட்னியை வைத்து சாப்பிட்டால் எத்தனை இட்லி சாப்பிட்டோம் என்று கணக்கே தெரியாது

By Asianet TamilFirst Published Mar 23, 2023, 6:27 AM IST
Highlights

வாருங்கள்! காரசாரமான கடப்பா கார சட்னியை வீட்டில் வெகு விரைவாக எப்படி செய்யலாம் என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்

இன்றைய அவசர உலகத்தில் பெண்கள் கூட வேலைக்கு செல்லும் நிலையில் இருப்பதால் வெகு விரைவாக செய்யக்கூடிய உணவுகளை தான் காலை உணவாக எடுத்துக் கொள்கின்றனர்.

அப்படி விரைவாக செய்யக்கூடிய உணவுகளில் எப்போதும் இட்லி முதலிடம் வகிக்கிறது. இந்த இட்லி விரைவில் செய்ய மட்டுமல்லாமல் சுவையிலும் சரி, ஆரோக்கியத்திலும் சரி முதலிடம் தான் .

இந்த இட்லிக்கு பொதுவாக தக்காளி சட்னி,சாம்பார்,புதினா சட்னி, இஞ்சி சட்னி என்று பல விதமான சட்னிகளை செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். சட்னிகளின் வரிசையில் இன்று நாம் சூப்பரான ,காரசாரமான கடப்பா சட்னியை வீட்டில் செய்து சாப்பிட்டால் அதன் ருசிக்கு தட்டில் எத்தனை இட்லி வைத்து கொடுத்தாலும் அனைத்தும் காலி ஆகி விடும்.

வாருங்கள்! காரசாரமான கடப்பா கார சட்னியை வீட்டில் வெகு விரைவாக எப்படி செய்யலாம் என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

சின்ன வெங்காயம்-15
தக்காளி- 2
பூண்டு-4 பற்கள்
வர மிளகாய்- 7
புளி -லெமன் சைஸ்
கடுகு-1/4 ஸ்பூன்
பெருங்காயத்தூள்-1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை-1 கொத்து
உப்பு-தேவையான அளவு
நல்லெண்ணெய்-தேவையான அளவு

செய்முறை:

முதலி மிக்சி ஜாரில் வெங்காயம்,பூண்டு, மிளகாய் ஆகியவற்றை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து கொரகொரவென அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் அதே மிக்சி ஜாரில் பழுத்த தக்காளியுடன் புளியையும் சேர்த்து அதனை அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் ஒரு சின்ன பான் வைத்து அதில் நல்லெண்ணெய் விட்டு, எண்ணெய் சூடான பிறகு, கடுகு,கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். அடுத்தாக அதில் அரைத்து வைத்துள்ள வெங்காய பேஸ்ட் சேர்த்து அதன் பச்சை வாசனை செல்லும் வரை நன்றாக வதக்கி விட வேண்டும்.

அடுத்தாக அதில் தக்காளி பேஸ்ட் சேர்த்து அதன் பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி விட வேண்டும். சட்னியின் காரத் தன்மை செல்லும் வரை அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.

சட்னியில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க வைத்து விட்டு , பின் அடுப்பில் இருந்து இறக்கினால் சட்னி ரெடி! சுட சுட இட்லிக்கு இந்த கடப்பா சட்னி வைத்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்! சட்னியில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி பக்குவமாக கொதிக்க வைத்து எடுத்தால் 2 ,3 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.

click me!