நீண்ட நேரம் உட்காரும்போது உங்களுடைய கால்கள் வீங்குகின்றதா? இது பல நேரங்களில் மன உளைச்சலுக்கு வழிவகுக்கும். எழுந்து நடக்கவும் சிரமமாக இருக்கும். அப்படியானால், இதுபோன்ற பிரச்சனைக்கான காரணம் என்ன என்பதைக் உடனடியாக கண்டறிவது நன்மையை தரும்.
தொலைதூர நகரங்களுக்கு பயணம் செய்யும் போது, மணிக்கணக்கில் உட்கார நேரிடும். அப்போது பலருக்கும் கால் வீங்கிவிடும். ரயில், பேருந்து, கார், ஏன் சில சமயங்களில் விமானங்கள் கூட இதற்கு விதிவிலக்கு அல்ல. அதையடுத்து நாம் எழுந்து நடப்பதே சவாலாகி விடும். நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது உங்கள் கால்களை வீக்கத்தை ஏற்படுத்தும் மற்றும் இது பலருக்கும் பொதுவான பிரச்னையாக உள்ளது. முதல்முறையாக இந்த பாதிப்புக்குள்ளானால், சற்று அச்சம் தோன்றும். ஆனால் நாள் போக போக அதை ஏற்றுக்கொள்ள பழகிக்கொள்வார்கள். கால் வீக்கம் பல காரணங்களுக்காக நிகழலாம். ஆனால் நிலைமைகளின் காரணத்தை நீங்கள் அறிந்து கொள்வது அவசியம். ஏனெனில் இந்த பிரச்னைக்கான காரணம் நரம்பியல் முதல் கர்ப்பம் வரை உள்ளது. கர்ப்பிணிப் பெண்களுக்கு இது ஒரு பொதுவான நிலை என்றாலும், இந்த பிரச்னை ஏற்படுவதற்கு வேறு சில காரணங்களும் உள்ளன. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
நரம்பியல்
இந்த நிலையில், பாதங்களில் உள்ள சிறிய நரம்புகள் சரியாக செயல்படாமல், பாதங்களில் வீக்கம் ஏற்படுகிறது. இந்த நிலை சார்பு எடிமாவை ஒத்திருக்கிறது. இதுதவிர, இருதய நோய் அல்லது சிறுநீரக நோய் போன்ற சில சுகாதார நிலைமைகள் உடலில் திரவம் தக்கவைப்பை ஏற்படுத்தும். இந்த திரவங்கள் ஈர்ப்பு விசையால் இழுக்கப்படுகின்றன, இறுதியில் காலில் திரவம் குவிந்து, வீக்கத்தை ஏற்படுத்துகிறது.
புவியீர்ப்பு விசை
நீண்ட நேரம் உட்கார்ந்து கால்கள் வீங்குவதற்கான பொதுவான காரணங்களில் இதுவும் ஒன்று எடிமா. புவியீர்ப்பு விசையின் விளைவாக உங்கள் கால்களில் திரவங்கள் குவியும் நிலை இது. இது எந்த வயதிலும் உருவாகலாம். அதேபோல உங்களது கால் நரம்புகள் புவியீர்ப்பு விசைக்கு எதிராக செயல்பட்டாலும் கால் வீக்கம் பெறும். கால் நரம்புகளுக்குள் வால்வுகள் உள்ளன. இந்த வால்வுகள் செயலிழக்கும்போது, காலில் திரவம் குவிந்து, இறுதியில் வீக்கத்தை ஏற்படுத்தும்.
முகப்பருக்கள் எங்கு வந்தால் என்ன உடல்நல பிரச்னை?- தெரிஞ்சுக்கோங்க..!!
கர்ப்பம்
கர்ப்பம் காலத்தின் போதும் பெண்களுக்கு பொதுவாகவே கால் வீக்கம் இருகும். இது உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக இருக்கலாம். வீங்கி பருத்து வலிக்கிற நரம்புகள் பல பெண்களுக்கு ஏற்படலாம். மேலும், கர்ப்ப காலத்தில் குறைவான இயக்கமும் கால் வீக்கத்தை ஏற்படுத்தும். உடலில் புரதச்சத்து இல்லாமல் போகும் போது, முழு புரதம் தடைசெய்யப்பட்ட உணவை நீண்டகாலமாக உட்கொள்ள நேரிடும். அப்போது கைகள், கால்கள் மற்றும் முகம் வீக்கத்தின் பிரச்சனை ஏற்படுகிறது. அப்போது கால்களும் சேர்ந்து வீங்கும்.
சிறுநீரக செயலிழப்பு
சிறுநீரக நோய்களும் கை மற்றும் கால்களில் வீக்கத்தை ஏற்படுத்துகின்றன. பல நோய்களால் சிறுநீரக செயல்பாடு குறையும் போது, சிறுநீரில் புரதம் கசியும். உடலில் புரதம் இல்லாததால், பாதங்கள் மற்றும் முகம் வீங்க ஆரம்பிக்கும். அதனால் கால்களும் வீங்கும். சில மருந்துகளை உட்கொள்வதாலும் கால் வீக்கம் பிரச்னை ஏற்படுகிறது. மருந்துகளை உட்கொள்வதால், சிறுநீரகங்கள் மற்றும் தமனிகளின் செயல்திறன் குறைகிறது, உடலில் நீர் திரட்சியாக வீக்கம் தோன்றுகிறது. சில சளி, இருமல் மற்றும் கை வலியைப் போக்கப் பயன்படுத்தப்படும் பொதுவான வலி நிவாரணிகள் கூட கால் வீக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.
உடலில் வைட்டமின் குறைப்பாட்டை எச்சரிக்கும் அசாதாரண அறிகுறிகள்..!!
தைராய்டு பிரச்னை
சில வகையான ஒவ்வாமைக்கு கூட கை, கால் வீக்கத்தை ஏற்படுத்துகின்றன. கருத்தடை மாத்திரைகளை எடுத்துக் கொண்ட பிறகும் பெண்கள் கை, கால் வீக்கத்தை உணரலாம். தைராய்டு ஹார்மோன் குறைந்தாலும் உடல் வீக்கமடையும். எனவே, கால் வீக்கமாக இருக்கும் போது, பொதுவான பிரச்சனை என்று நினைத்துக் கொள்ளாமல், மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.