பெரும்பாலான பெண்களுக்கு பிறப்புறுப்பில் பருக்கள் உண்டாவது இயல்பானது தான். சீழ் பிடித்து, ஊதா நிறத்தில் பருக்கள் தோன்றுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதுகுறித்து ஒவ்வொன்றாக பார்க்கலாம்
பாக்டீரியாத் தொற்று, அந்த பகுதியில் நீடிக்கும் வெப்பம், பி.எச். அளவில் ஏற்படும் மாறுபாடு, ஹார்மோன் பிரச்னைகள் உள்ளிட்டவற்றால் பெண்களுக்கு பிறப்புறுப்பில் பருக்கள் தோன்றும். சில சமயங்களில் இறுக்கமான உள்ளாடைகள் அணிவதன் காரணமாகவும் பருக்கள் தோன்றுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இவ்வாறு தோன்றும் பருக்களால் ஏற்படும் பிரச்னைகள் என்ன? அதை சரிசெய்வதற்கு ஏதாவது வழிவகை உள்ளதா? என்பது குறித்து விரிவாக தெரிந்துகொள்வோம்.
சீழ் நிறைந்த பரு
பிறப்புறுப்பை சுற்றியுள்ள பகுதியை எப்போதும் சுத்தம்வாக வைத்திருக்க வேண்டும். ஒருவேளை ஈரப்படாலும், காய்ந்த பின் தான் ஆடைகளை அணிய வேண்டும். நீங்கள் அப்பகுதியை சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டால், சுற்றியுள்ள மயிர்க்கால்களில் சீழ் நிறைந்த பருக்கள் உண்டாகும். இதை ஃபோலிகுலிடிஸ் என்று கூறுவார்கள். சிறு சிறு புள்ளிகளாக முதலில் தோன்ற ஆர்ம்பித்து, சீழ் கொண்ட கொப்பளங்களாக மாறிவிடும். இதை நீங்கள் முறையாக கவனிக்காமல் விட்டுவிட்டால், அரிப்பு மற்றும் எரிச்சல் போன்ற பிரச்னைஅக்ள் ஏற்பட்டுவிடும்.
டிரிம்மர் பயன்படுத்துவதில் ஆபத்து
பிறப்புறுப்பு பகுதியில் இருக்கும் முடியை எப்போதும் வெட்டி நீக்க வேண்டும். டிரிம்மர் கொண்டு நீக்குவது அல்லது சோப்பு கொண்டு ஷேவ் செய்து போன்றவை ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். அரிப்பு, புள்ளிகள், கொப்பளங்கள் போன்ற பாதிப்புகள் அடுத்தடுத்து ஏற்படலாம். ஒருவேளை நன்றாக வளர்ந்த முடிகளை நீக்கும் போதும் வீக்கம் ஏற்பட்டு, ஒவ்வாமை வரக்கூடும். அது நாளிடைவில் உடைந்து சீழ் வரலாம்.
உடலுறவினால் ஏற்படும் ஆபத்து
பெண்களின் பிறப்புறுப்பு பகுதியில் தோன்றும் பருக்கள் அல்லது புள்ளிகளில் அவ்வப்போது வலி ஏற்படுவது அல்லது சுறு சுறு என்று இருப்பது அல்லது கொப்பளங்களில் இருந்து திரவ நீர் வழிவது போன்ற பிரச்னைகள் உருவாகும் ஆபத்து உள்ளது. உங்களுக்கு இந்த பாதிப்பு இருக்கும் போது, நீங்கள் உங்கள் துணையுடன் உறவுகொள்ளக் கூடாது. அதனால் உராய்வு ஏற்பட்டு, கொப்பளம் உடைந்து திரவநீர் வெளியே கசிந்துவிடும். இதன்காரணமாகவும் உங்களுக்கு கூடுதல் பிரச்னைகள் வரலாம். குறிப்பாக உங்களுடைய துணைக்கும் பாதிப்பு ஏற்படலாம்.
பாலியல் நோய்த் தொற்றுகள்
பாலியல் ரீதியாக பரவும் நோய் காரணமாகக் கூட பெண்களின் பிறப்புறுப்புகளில் கொப்பளங்கள் வரக்கூடும். பொதுவாக ஹெர்பெஸ் என்கிற வைரஸ் தொற்று காரணமாக இந்த கொப்பளங்கள் வருகின்றன. அதை நீங்கள் கவனிக்காமல் போனால் புண்கள், காய்ச்சல், அரிப்பு மற்றும் தோலுரிதல் போன்ற பாதிப்புகள் வரும். இதுபோன்ற பிரச்னையை உடனடியாக மருத்துவரின் கவனத்துக்கு கொண்டு செல்வது முக்கியம்.
பெண்கள் என்றும் சமரசம் செய்யக்கூடாது 5 விஷயங்கள்..!!
பிறப்புறுப்பில் பருக்கள் வந்தால் செய்ய வேண்டியவை
பெண்களின் பிறப்புறுப்பில் பருக்கள் வந்தால், துணையுடன் உடலுறவில் ஈடுபடக்கூடாது. அதனால் உராய்வு, எரிச்சல் போன்ற பிரச்னைகள் வரலாம். அந்த நேரத்தில் உங்களுடைய பருக்கள் உடைந்து, அதன்மூலம் வெளிவரக்கூடிய திரவத்தால் உங்களது துணைக்கும் பருக்கள் பரவலாம். மேலும் பருக்கள் இருக்கும் போது, இறுக்கமான உள்ளாடைகள் அல்லது ஆடைகளை அணியக் கூடாது. அதேபோன்று மாதவிடாய் ஏற்படும் சமயங்களில் அவ்வப்போது உடலை சுத்தப்படுவது மிகவும் முக்கியம்.