திருமணம் ஆன முதல் 6 மாசத்துல இப்படி நடக்கலன்னா.. அப்புறம் அந்த கல்யாணமே வேஸ்ட்..!

By Ma Riya  |  First Published Mar 18, 2023, 7:15 PM IST

திருமணம் ஆன புதிதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் ரொம்ப இனிமையாக தான் நாட்கள் நகரும். ஆனால் போக போக தான் இருவரின் சாயமும் வெளுத்து, உண்மையான நிறம் வெளிப்படும். அந்த வகையில் திருமணம் ஆன முதல் 6 மாதங்களில் சண்டைகள் வர வாய்ப்புள்ளது. அது ஏன் தெரியுமா? 


திருமணம் என்பது அழகான உறவு. அதில் சில தம்பதிகள் மிகவும் நெருக்கமாக இருப்பார்கள், சலிக்காமல் அன்பை பொழிவார்கள். ஆனால் அதன் பிறகு தான் விஷயங்கள் மாறுகின்றன. ஆசை 60 நாள், மோகம் 30 நாள் என்பது போல நாள் ஆக ஆக தம்பதிகளுக்குள் எதார்த்தம் புரிய ஆரம்பிக்கும். ஆனால் அப்போது ஏற்படும் சண்டைகளை வைத்து ஒருவருக்கொருவர் மதிப்பிட்டுக் கொள்ளக் கூடாது. 

ஏனெனில் முதல் ஆறு மாதங்கள் வரும் சண்டையை வைத்து எதையும் முடிவு செய்ய முடியாது. திருமணமான முதல் வருடத்தில் தம்பதிகளுக்குள் சண்டையிடும்போது, ​​அவர்கள் முதல்முறையாக புதிய சவால்களை எதிர்கொள்வதால் மன அழுத்தம் ஏற்படுகிறது. அப்படியென்றால் முதல் ஆறு மாதங்கள் கணவன் மனைவி சண்டை போடுவது ஏன்? இங்கே ஒரு சுவாரஸ்யமான உண்மை உள்ளது. 

Tap to resize

Latest Videos

கருத்து வேறுபாடு 

கணவனோ, மனைவியோ தாங்கள் சொல்லாமலேயே விஷயங்களைப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ரொம்ப இருக்கும். ஏனென்றால் இப்போதெல்லாம் திருமணத்திற்கு முன்பே ஆணும் பெண்ணும் பேசி பழகத் தொடங்கி விடுகிறார்கள். இதனால் திருமணத்திற்குப் பிறகு தாங்கள் சொல்லாமலே ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பு ஏற்படுகிறது. பேசாமல் எப்படி புரிந்து கொள்ள முடியும்? மனதால் எல்லாவற்றையும் புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பு தான் சண்டைகளுக்கு காரணமாகிறது. சில விஷயங்களை பேசி பகிர்ந்து கொண்டால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். வாழ்க்கைத் துணை குறித்த எதிர்பார்ப்புகளால் இருவருக்கும் இடையே வேறுபாடு உள்ளது. 

அப்படியே ஏத்துக்கணும்.! 

எல்லாவற்றையும் தனக்கு ஏற்றவாறு மாற்றுவது மனித இயல்பு தான். திருமணத்திற்குப் பிறகு, தங்கள் துணையுடன் அதையே செய்யத் தொடங்குவது தான் பிரச்சனை. இதனால் சண்டைகள் தொடங்கும். நீங்களும் உங்கள் வாழ்க்கை துணையும் இரு உடல்கள். இரு உயிர். இரண்டு வெவ்வேறு நபர்கள் என்பதை மறக்கவேண்டாம். உங்கள் விருப்பங்கள் அவர்களின் விருப்பங்களாக இருக்க வேண்டியதில்லை. கணவர்களே.. உங்கள் மனைவியின் பழக்கவழக்கங்களை நீங்கள் ஏற்றுக்கொண்டால், திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு. சண்டையில்லாமல் சுமுகமாக போகும். 

இதையும் படிங்க: உங்க தாம்பத்திய வாழ்க்கையில் இந்த 1 விஷயம் செய்யுங்க.. உங்க துணை காந்தம் மாதிரி உங்க கிட்ட ஒட்டிப்பாங்க!

சலிப்பு...

மோகம் தீர்ந்த சில நாட்களில், ஒருவருக்கு சலிப்பு ஏற்படுகிறது. அது அப்படியே இருந்தால் வருடங்கள் செல்லச் செல்ல இருவருக்குமான இடைவெளி அதிகமாகிறது. அதனால் ஒவ்வொரு சிறிய விஷயமும் சண்டையாக மாறும். ஒவ்வொரு நாளையும் ரொமான்டிக் ஆக்கிவிட்டால் அந்த பிரச்சனை ஓவர். ஒன்றாக உணவு சாப்பிட வெளியே செல்லுங்கள், கைகள் கோர்த்து நடந்து செல்லுங்கள். கொஞ்சம் கொஞ்சி விளையாடுங்கள். இணைந்து வீட்டில் வேலை செய்யுங்கள். இது இருவருக்குமான பிணைப்பை இன்னும் பலப்படுத்துகிறது. 

திருமண அழுத்தம் 

நீங்கள் திருமணம் செய்து கொண்டீர்கள் என்று ஒவ்வொரு நாளும் உங்கள் மனதுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம். அய்யோ கல்யாணம் ஆகிடுச்சேனு நினைச்சு வருத்தப்பட்டால் மன அழுத்தம் தான் வரும். இதனால் உங்கள் துணையுடன் நேரத்தை செலவிடுவது கடினமாகும். எதையும் கட்டாயப்படுத்த வேண்டாம். அது காதலாக இருந்தாலும் சரி, காமமாக இருந்தாலும் சரி. இருவரும் இணையும் தரமான நேரத்திற்கு எவ்வளவு முன்னுரிமை அளிக்கிறீர்களோ, அந்த அளவுக்கு உறவு வலுவாக இருக்கும். இதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.

ஸ்பெஷல் இடம் 

உறவில் மிகவும் தனித்த இடம் எப்போதும் முக்கியமானது. அது இல்லாமல் போனால் உறவு விஷமாகிறது. உங்கள் துணை உறவை தலைவலி போல நினைப்பார். உங்களுடைய துணைக்கு ஸ்பெஷலான இடத்தை நீங்கள் கொடுத்திருக்கிறீர்கள் என்பதை உணர்த்தாவிட்டால் உங்களுக்குள் சண்டைகள் ஏற்படலாம். எப்போதும் அவர் உங்களுக்கு தனிப்பட்ட வகையில் முக்கியமானவர் என்பதை புரிய வையுங்கள். பிறகு சண்டையே வராது. ஜாலியோ ஜிம்கானா தான்!! 

இதையும் படிங்க: ஆணுறுப்பு சைஸ் பத்தி கவலையா? அதை உடனே பெரிதாக்க 1 சூப்பர் வழி இருக்கு

click me!