Married Women : அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், திருமணமான பெண்கள் அதிக அளவில் கூகுளில் எதை தேடுகிறார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பெண்களை பொறுத்தவரை திருமணத்திற்கு பிறகு அவர்களுடைய வாழ்க்கை பெரிய அளவில் மாற்றமடைகிறது என்றே கூறலாம். அந்த புத்தம் புதிய வாழ்க்கைக்கு பெண்கள் தங்களை மாற்றிக்கொள்வதற்கு சிறிது நேரம் ஆகும். இது அனைவருக்கும் தெரியும், ஆனால் புதிதாக மணமான பெண்கள் கூகுளில் எதை அதிகம் தேடுகிறார்கள் தெரியுமா? தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள்.
பதில் கிடைக்காத கேள்வி என்ற ஒன்றே இல்லை என்று சொல்லும் அளவிற்கு, கூகுளில் எல்லாவிதமான கேள்விக்கும் பதில் கிடைக்கிறது. அதனால் தான் "ஓகே கூகுள்" என்று சொல்லி தன் அம்மாவிடம் பேசுவதுபோல பல பெண்கள் பேசுகின்றனர். பெண்கள் கேட்கும் மிகவும் கடினமான கேள்விகளுக்கு மட்டுமின்றி, அவர்களால் கேட்கும் விசித்திரமான கேள்விகளுக்கும் கூகுள் பதிலளிக்கிறது.
சிறந்த காதலனாக யார் இருப்பா? அதுக்கும் தாடிக்கும் ஒரு சம்மந்தம் இருக்கு தெரியுமா?
திருமணத்திற்குப் பிறகு பெண்கள் சிறு சிறு விஷயங்களுக்கு கூட கூகுளின் உதவியை எதிர்பார்ப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சரி அப்படி என்னதான் அவர்கள் அதில் தேடுகிறார்கள்? என்று இப்பொது பார்த்துவிடலாம்.
கணவனை பற்றி
பல பெண்கள் திருமணத்திற்குப் பிறகு கூகுளில் தங்கள் கணவர் தொடர்பான பல விஷயங்களைத் தேடுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இது கேட்க சிரிப்பாக இருந்தாலும், உண்மை அது தான். ஆம், பொதுவாக பெண்கள் தங்கள் கணவரின் விருப்பு வெறுப்புகளை கூகுளில் அதிகம் தேடுவார்கள். இது மிகவும் பொதுவான விஷயம் தான். ஏனென்றால் ஒவ்வொரு பெண்ணும் தன் கணவனுக்கு எது பிடிக்கும், பிடிக்காதது என்று தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் எப்போதும் அதை கணவரிடம் நேரடியாகக் கேட்காமல் கூகுளில் தேடுகிறார்கள்.
கணவனை அடியாமையாக்குவது எப்படி?
கேட்க மீண்டும் வேடிக்கையாக இருந்தாலும், புதிதாக திருமண பெண்கள் கூகுளில் இப்படி தான் அதிகம் தேடுகிறார்களாம். சில பெண்கள் தங்கள் கணவனை அடிமைப்படுத்துவதற்கான வழிகளைக் கண்டறிய கூகுளை நாடுகிறார்கள். மேலும், திருமணத்திற்குப் பிறகு, கணவர் மகிழ்ச்சியாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கிறார். அதனால் தான் கணவன்மார்களை மகிழ்விக்க அவர்களுக்கு பிடித்த உணவுகள் மற்றும் பரிசு பொருட்களை அதிகம் வாங்கிக்கொடுக்கின்றனர்.
குழந்தைகளைப் பெற வேண்டுமா?
திருமணத்திற்குப் பிறகு கூகுளில் அதிகம் தேடப்படும் விஷயங்களில் குழந்தைகளும் ஒன்று. குழந்தை பிறக்க எந்த மாதம் சிறந்தது? எந்த வயதில் குழந்தை பெற்றுக்கொள்வது நல்லது? கருவுற்றபிறகு ஏற்படும் விளைவுகள் என்ன என்பதும் பெண்கள் கூகுளில் அடிக்கடி தேடும் விஷயங்களாம்.