சிறந்த காதலனாக யார் இருப்பா? அதுக்கும் தாடிக்கும் ஒரு சம்மந்தம் இருக்கு தெரியுமா?

By Ansgar R  |  First Published Jul 25, 2024, 9:01 PM IST

Who is Best in Relationship : ஒரு ஆணும் பெண்ணும் காதல்வயப்படுவது பல்வேறு காரணிகளால் நிர்ணயிக்கப்படுகிறது. அதில் ஒரு விஷயம் குறித்து தான் இந்த பதிவில் காணவுள்ளோம்.


இளம் வயதில் இருவரிடையே காதல் மலர்வதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம், ஒரு ஆணிடம் அல்லது ஒரு பெண்ணிடம் உள்ள ஆளுமை குணமுமோ, இரக்க குணமோ, அல்லது அவர்கள் பிறரோடும், நம்மோடும் பழகும் விதமோ, நமக்கு பிடித்துப்போய்விட, அது அவர்கள் மீதான ஈர்ப்பை அதிகப்படுத்த பெரிய அளவில் உதவுகிறது. 

இந்நிலையில் ஒரு பெண் தனக்கான துணையை தேர்ந்தெடுக்கும் பொழுது, தாடி வைக்காத, கிளீன் ஷேவ் செய்த ஆண்களை விட, அதிக அளவில் தாடி வைத்த ஆண்களை தான் தேர்தெடுகிறார்கள். அதேபோல தாடி வைத்த ஆண்கள் தான் நிலையாக ஒரு உறவில் இருக்கின்றார் என்று அண்மையில் வெளியான ஒரு ஆய்வின் முடிவு கூறுகின்றது. 

Tap to resize

Latest Videos

நீங்களும் தனித்தனியாக உறங்கும் தம்பதியா? இனி அந்த தவறை செய்யாதீங்க.. பல பிரச்சனைகள் வரலாம்..

தாடி வைத்த ஆண்களை விட, கிளீன் ஷேவ் செய்த ஆண்கள் தான் அடிக்கடி தங்கள் துணையை மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள் என்றும் கூறியிருக்கிறது அந்த ஆய்வு. Archives of Sexual Behavior என்ற பெயரில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு முடிவுகள், என்ன கூறுகிறது என்பதை பின்வருமாறு இந்த பதிவில் நாம் இப்பொது காணலாம். 

ஒரு தாடி வைத்த ஆண் மகன் தனக்கான துணையை தேர்ந்தெடுக்கும் பொழுது, அவரை முழு மனதாக ஏற்றுக் கொண்டு வேறு ஒரு பெண்ணின் மீது காதல் கொள்ளாமல் அல்லது ஏற்கனவே தான் சந்தித்து பழகி வரும் பெண்ணிடம் இருந்து விலகிச் செல்லாமல் இருப்பாராம். அதே வேலையில் கிளீன் ஷேவிங் செய்த ஆண்கள் அடிக்கடி தங்கள் காதல் துணையை மாற்றிக் கொண்டே இருப்பார்கள் என்று ஆய்வின் முடிவுகள் கூறுகின்றது. 

சரி தாடிக்கும் உறவுக்கும் என்ன சம்பந்தம்? 

தாடி வளர்ப்பது என்பது பலரிடம் இயல்பாக இருக்கும் ஒரு விஷயம் தான். ஆனால் அதை சரிவர பராமரிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு வளர்ப்பவர்கள் தனி ராகம். தினமும் அந்த தாடிக்காக கொஞ்ச நேரத்தை அவர்கள் செலவிடுவார்கள். அப்படி தான் தாடி வைத்தவர்கள், தங்கள் உறவுகளையும், குறிப்பாக தங்கள் காதல் துணையை பெரிய அளவில் நேசித்து பழகுவார்கள் என்கிறது அந்த ஆய்வு. 

அதே நேரம் தாடியை பேணிப்பாதுகாக்க நேரம் இல்லாமல் தட்டிக்கழித்து கிளீன் ஷேவ் செய்பவர்கள், தங்கள் உறவுகள் மீதும் பெரிய அளவில் நெருக்கம் காட்டாமல், காதல் துணையையும் அடிக்கடி மாற்றுவார்கள் என்று அந்த ஆய்வு கூறுகின்றனர். 

Relationship Tips: மழைக்காலத்தில் மனதோடு நெருக்கம்; உறவோடு நெருப்பு விளையாட்டு; ரொமான்ஸ் டிப்ஸ்!!

click me!