உடலுறவுக்குப் பிறகு கர்ப்பத்தைத் தடுக்க மாத்திரைகள் தேவையில்லாத முற்றிலும் பயனுள்ள இயற்கை வழிகள் கொண்டு, குழந்தை பிறப்பை தடுக்கலாம்.
திருமணத்திற்குப் பிறகு குழந்தைப் பெற விரும்பாதவர்கள் ஆணுறை அல்லது கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்துகிறார்கள். இருப்பினும், இத்தகைய முறைகளைப் பின்பற்றுவது பின்நாளில் பாலியல் உறவில் பாதிப்பை ஏற்படுத்தலாம். அத்துடன் எதிர்காலத்தில் வேறு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், உரிய சிகிச்சை பெறுவதில் சிக்கலை உருவாக்கலாம். இதுபோன்ற பக்கவிளைவுகள் இல்லாமல் முற்றிலும் இயற்கையான முறையில் கருத்தடை செய்ய வழிகள் உள்ளன. இது ஆணுறை, கருத்தடை மாத்திரைகளை விடவும் பயனளிக்கும் முறையாகும்.
ஏன் இயற்கையான கருத்தடை முறை அவசியம்?
பலர் உடலுறவுக்கு முன்னும் பின்னும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து, திட்டமிடப்படாத கர்ப்பத்தைத் தவிர்க்கிறார்கள். சிலர் ஆணுறைகளைப் பயன்படுத்துவார்கள் அல்லது கருத்தடை மாத்திரைகளை உட்கொள்வார்கள். மாத்திரைகளை அடிக்கடி சாப்பிடுவது பெண்களின் உடல்நலனை பெரியளவில் பாதிக்கும். குறிப்பாக ஹார்மோன் மாற்றங்களால் பெண்களுக்கு பல உடல் பிரச்சனைகள் உருவாக வாய்ப்பு அதிகம். ஆனால் அதற்கு மாறாக கருத்தடைக்கு சில இயற்கையான வழிகளும் பயன்பாட்டில் உள்ளன.
விந்தணுக்கள்
விந்து வெளியேறும் முன் ஆண்குறியை துணையின் பிறப்புறுப்பில் இருந்து அகற்றுவது என்பது பலரால் பின்பற்றப்பட்டு வரும் முறையாகும். இவ்வாறு ஆணுறுப்பை விரைவாக வெளியே இழுக்க முடிந்தால், பெண் உடலுக்குள் விந்தணுக்கள் செல்வதை தடுக்க முடியும். இதனால் விந்தணு கருமுட்டையை அடையாது. அதனால் கர்ப்பம் ஏற்படாது. எல்லா ஆண்களாலும் இதை செய்ய முடியாது. சிலருக்கு பெண்ணின் பிறப்புறுப்பில் நுழையும் போது கூட விந்துவின் நிலை தெரியும். சிலருக்கு விந்தணு எப்போது வருகிறது என்று கூட சரியாகப் புரிந்து கொள்ள முடிவதில்லை. எனவே, இதுபோன்ற பிரச்னைகளை சந்திக்கும் ஆண்கள், இந்த வழியை பின்பற்ற வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேப்ப எண்ணெய்
கரு உருவாகாமல் இருப்பதற்கு வேப்ப இலைகள் மற்றும் வேப்ப எண்ணெயைப் பயன்படுத்துவது முற்றிலும் இயற்கையான மற்றும் பயனுள்ள வழியாகும். கருத்தடை மாத்திரைகளை விட வேம்பு விந்தணுக்களை மிகவும் திறம்பட கொல்லும். உடலுறவுக்குப் பிறகு வேப்ப எண்ணெயைப் பயன்படுத்தினால், அது துணையின் உடலில் நுழைந்த விந்தணுவை வெறும் 30 வினாடிகளில் அழித்துவிடும். மேலும், 5 மணி நேரம் சுறுசுறுப்பாக செயல்படுவதால், இடையில் உடலுறவு ஏற்பட்டாலும், உடலுக்குள் செல்லும் விந்தணுக்கள் இறந்துபோகும். வேப்ப எண்ணெயை நேரடியாக பிறப்புறுப்பு வழியாக ஊற்ற வேண்டாம். தண்ணீருடன் 10% மட்டுமே வேப்ப எண்ணெய்யை கலந்துகொள்ள வேண்டும். அதை உடலுறவுக்கு முன் பெண்ணுறுப்பில் தடவ வேண்டும். அதேபோல், உடலுறவுக்குப் பிறகும் இதைப் பயன்படுத்துங்கள். அதனால் கர்ப்பம் தவிர்க்கப்படும்.
பப்பாளி
கர்ப்பத்தைத் தடுப்பதற்கு பழங்காலம் முதல் பப்பாளி பழங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு பழுத்த பப்பாளியை பயன்படுத்த வேண்டாம். பச்சை பப்பாளியைப் பயன்படுத்துவது இன்னும் பயனுள்ளதாக இருக்கும். உடலுறவு முடிந்ததும் பெண்கள் பச்சை பப்பாளியை கூழாக்கி சாப்பிட்டு வரவேண்டும். அடிக்கடி சாப்பிடுவது மிகவும் பயனை தரும். அதன்மூலம் உடலுக்குள் செல்லும் விந்தணுக்களை அழிக்கும் ஆற்றல் ஏற்படும். ஆண்கள் பப்பாளி கூழ் சாப்பிடுவது அவர்களின் விந்தணு எண்ணிக்கையை தற்காலிகமாக குறைக்கும். அதனால் ஏற்கனவே விந்தணு குறைப்பாட்டை கொண்ட ஆண்கள் பப்பாளி காய் மற்றும் பப்பாளி பழத்தை சாப்பிடாமல் தவிர்ப்பது மிகவும் நல்லது.
Condoms Facts : ஆணுறைகள்- அறிந்ததும்... அறியாததும்..!!
தேதி
தேதியை கடைபிடித்து உடலுறவில் ஈடுபடுவது கர்ப்பத்தை ஓரளவிற்கு தடுக்க உதவும் ஒரு முறை. மாதவிடாய் தொடங்கிய 8 முதல் 19 நாட்கள் மிகவும் வளமான நாட்கள். எனவே இந்த நாட்களில் முடிந்தவரை உடலுறவை தவிர்ப்பது நல்லது. ஆனால் 26 முதல் 32 நாட்கள் பிரச்சனை இல்லாத நாட்கள். அதேபோல, கருமுட்டை வெளிப்படுவதற்கு ஏழு நாட்களுக்கு முன்பும், கருமுட்டை வெளியாவதற்கு இரண்டு நாட்களுக்குப் பிறகும் உடலுறவில் ஈடுபடுவது கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கிறது. எனவே, இந்த நாட்களை ஒரு காலெண்டரில் குறிப்பிட வேண்டும். அதற்குப் பின் வரும் நாட்களில் மட்டும் உடல் உறவில் ஈடுபடுவது நல்லது. இது மிகவும் பயனுள்ள முறையாகும்.