இன்றைய சூழலில் போதுமான அளவில் பாலியல் உறவை பெறுபவர்கள் நிச்சயம் அதிர்ஷ்டசாலிகள் தான். அதனால் விரக்தியை எதிர்கொள்பவர்கள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகின்றனர்.
ஒருவருக்கு போதுமான வகையில் பாலியல் தேவைகள் பூர்த்தி அடையாமல் போகும் போது பாலியல் விரக்தி ஏற்படுகிறது. இது நோய் பாதிப்பு கிடையாது. ஒரு மனநிலை மட்டுமே. உடலுறவின் போது ஏற்படும் வெறுமை அல்லது அதிருபதி உணர்வை பலரும் இப்படி குறிப்பிடுகின்றனர். இயல்பான மற்றும் ஆரோக்கியமான பாலியல் மனப்பான்மையுடன் ஒப்பிடும்போது, பாலியல் விரக்தியானது மனச்சோர்வு, கவலை, கோபம், கிளர்ச்சி
பொறுப்பற்ற தன்மை போன்ற பல்வேறு தவறான வழிகளில் வெளிப்படும். அத்தகைய சூழ்நிலையைச் சமாளிக்க, உங்களுக்கு உதவக்கூடிய 5 வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து படியுங்கள்.
கார்டியோ பயிற்சி
கார்டியோ பயிற்சிகள் உங்கள் மனதை தெளிவுபடுத்தவும், மன அழுத்தத்தை போக்கவும் உதவும். நீங்கள் ஓடும்போது, உங்கள் உடல் எண்டோர்பின்களை வெளியிடுகிறது, இது உங்கள் மனநிலையை மேம்படுத்துகிறது மற்றும் பூர்த்தி செய்யப்படாத பாலியல் தேவைகளால் ஏற்படும் கவலைகளையும் கார்டியோ பயிற்சி கட்டுப்படுத்துகிறது.
உடல் ரீதியாக இணையவும்
பாலியல் விரக்தியைச் சமாளிக்க நீங்கள் உடலுறவைத் தொடங்க வேண்டியதில்லை. கைகளைப் பிடிப்பது, உங்கள் துணையைக் கட்டிப்பிடிப்பது மற்றும் அவர்களின் முகத்தை அன்புடன் அரவணைப்பது ஆகியவை பிரச்னையை முடிவுக்கு கொண்டு வரும். தொடுதல் என்பது உங்களை நன்றாக உணரவைக்கும் மற்றும் துணையுடன் உங்களை மேலும் நெருக்கமாக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன.
பிரச்னையை அடையாளம் காணவும்
பாலியல் விரக்திக்கான காரணத்தைப் பற்றி சிந்தியுங்கள். உடலுறவை எதிர்கொள்ளாமல் இருப்பதற்கு மனநலம் மற்றும் உணர்ச்சிகளும் காரணமாக இருக்கலாம். பெரும்பாலும் தனிமையாக நேரம் செலவிடுபவர்கள் இந்த பிரச்னையை அதிகம் எதிர்கொள்கின்றனர். ஆனால் ஒரு கட்டத்தில் துணையுடன் நீங்கள் வாழ துவங்கிவிட்டால், பிரச்னைக்கான காரணத்தை உடனடியாக கண்டறிய வேண்டும்.
கள்ளஉறவில் இருந்து வெளியேற பலரும் தயங்குவது ஏன்? இதோ 4 காரணங்கள்..!!
சோலோ செக்ஸ்
சோலோ செக்ஸ் என்பது தனிமையில் சுய இன்பம் அனுபவிப்பது மற்றும் உங்களுக்கு பிடித்த தனிப்பட்ட பாலியல் செயல்பாட்டில் ஈடுபடுவது ஆகும். பாலியல் விரக்தி பெரும்பாலும் தற்காலிகமானது, எனவே விரைவாக பிரச்னைக்கு தீர்வு காண்பது தாம்பதியத்தையும் காதலையும் காக்கும். இது எதிர்காலத்தில் சிறந்த பாலுறவுக்கும் வழிவகுக்கும்.
துணையிடம் வெளிப்படை
உங்கள் துணையிடமிருந்து உங்களுக்குத் தேவையான அன்பையும் கவனத்தையும் நீங்கள் பெறவில்லை என்று நீங்கள் உணர்ந்தால், அதைப் பற்றி அவர்களிடம் பேசுங்கள். உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி, உங்களுக்குத் தேவையானதை அவர்களிடம் கேளுங்கள். அது பாலியல் இயல்புடையதாக இருக்க வேண்டும் என்று கிடையாது. இதன்மூலம் பல சிக்கல்கள் மற்றும் பிரச்னைகள் தீர்ந்துபோய்விடும்.