ஒரு தவறான உறவில் இருந்து வெளியேறுவதற்கு பலரும் நாட்கணக்கில் அல்ல ஆண்டுக்கணக்கில் நேரம் எடுத்துக்கொள்வதாக ஆய்வுகள் கூறுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
எந்த உறவும் சரியாக இருப்பது கிடையாது. எல்லாவிதமான உறவுகளிலும் சண்டை சச்சரவுகள் இருப்பது இயல்பானது தான். ஆனால் ஒரு உறவு முற்றிலுமாக கெட்டுப்போய், அதைச் சரியாகப் பெறுவதற்கான நோக்கம் முற்றிலுமாக முடிந்துவிட்டால், அதிலிருந்து நாம் வெளியேறுவது தான் சரியான தேர்வாக இருக்க முடியும். ஆனால் ஒரு மோசமான உறவில் இருப்பவர்கள், அதிலிருந்து வெளியேறுவதற்கான முடிவை உடனடியாக எடுப்பது கிடையாது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில், ஒரு மோசமான துணை கொண்டுள்ள நபர் அவரிடம் இருந்து பிரிவை நாடுவதற்கு குறைந்தது 4 ஆண்டுகள் நேரம் எடுத்துக்கொள்வதாக தெரியவந்துள்ளது. நச்சு உறவில் இருந்த பிறகும் மக்கள் ஏன் விரைவில் பிரிவதில்லை என்பதை விரிவாக பார்க்கலாம்.
சமூக அழுத்தம்
திருமணம் அல்லது காதல் உறவில் இருக்கும் 4-ல் ஒருவர் மோசமான சூழ்நிலைக்கு இடையில் வாழுகின்றனர். ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் துணையை விட்டு பிரிய மனமில்லாமல் உள்ளனர். அதற்கு அவர்கள் மீதான காதல் என்பதை விடவும், சமூக அழுத்தம் முக்கிய காரணங்களாக உள்ளன. அதன்படி தனிமையில் வாழ்க்கையை வாழுவதற்கான அச்சம், பிரிவின் காரணமாக குடும்பத்தில் ஏற்படும் பாதிப்பு, துணையின் மீதான பரிதாபம் போன்றவற்றால் துணையுடன் இருந்துவிட முடிவு செய்கின்றனர்.
வாழ்க்கைத் தேர்வு
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பெரும்பாலானோர் சமூக அழுத்ததால் துணையுடன் சேர்ந்து வாழ்வதாக கூறுகின்றனர். எனினும் எதிர்காலத்தில் தங்கள் துணையுடன் தங்களைப் பார்க்க விரும்பவில்லை என்று கூறியுள்ளனர். மூன்றில் ஒரு பகுதியினர் தங்கள் வாழ்க்கையில் மறுபடியும் காதல் ஏற்பட்டால், துணையை பிரிவது குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர். அவர்களில் 20 சதவீதம் பேர் சேர்ந்து வாழ தொடங்கிய 2 ஆண்டுகளில் தங்கள் துணை மீதான காதல் காணாமல்போய்விட்டது என்பதை ஒப்புக்கொண்டுள்ளனர்.
தன்னம்பிக்கை இல்லை
துணையின் மோசமான நடத்தையால் பாதிக்கப்படுவர்கள் பெரும்பாலும் தன்னம்பிக்கை இல்லாதவர்களாக மாறிவிடுகின்றனர். இதன்விளைவாக அவர்களுக்குள் வாழ்க்கை மீதான அவநம்பிக்கை ஏற்பட்டுவிடுகிறது. அதன்காரணமாக மகிழ்ச்சியான இல்லறம் அமையவில்லை என்றாலும், அவர்களை பிரிவதற்கும் வழியில்லாமல் இருந்துவிடுகின்றனர். அத்தகைய உறவை முறித்துக் கொள்வதில் அவர்கள் அவசரப்படுவதைத் தவிர்க்கிறார்கள். ஆனால் அவர்கள் அதை முறித்துக் கொண்டால், இருவரும் விரைவில் மற்றொரு உறவில் உடனடியாக ஈடுபட்டுவிடுகின்றனர்.
தினசரி வெந்நீரில் குளிக்கும் ஆண்களே...!! இனி உஷாரா இருங்க..!!
பிரிவு கடினம் தான்
காதல் வயப்படுவதையும், அதனால் பாதிக்கப்படுவதையும் உலகம் ஏற்றுக்கொள்கிறது. ஆனால் மோசமான உறவில் இருக்கும் போது, அதை விட்டு வெளியேறுவதை உலகம் வேறு கண்ணோட்டத்தில் பார்க்கிறது. இதனால் தம்பதிகள் அல்லது காதலர்கள் பிரிந்து செல்வதில் தயக்கம் உண்டாகிவிடுகிறது. ஆனால் அதேசமயத்தில் இருவருக்குமிடையில் பிரிவு உருவாகிவிட்டால், வேறொரு உறவை சரியாக அமைத்துக்கொள்கின்றனர். அது அவர்களுக்கு திருப்தியாக அமைந்துவிடுகிறது. இதனால் முன்பை விட மகிழ்ச்சியாக வாழுகின்றனர்.
எனவே நீங்களும் நச்சு உறவில் இருந்தால், இந்தப் புத்தாண்டில் அதிலிருந்து வெளியேறுங்கள். இது உங்களுக்கு மன அமைதியை தருவது மட்டுமல்லாமல், உங்களுடைய தன்னம்பிக்கையையும் மீட்டுத் தரும்.