தொடர்ந்து உடலுறவில் ஈடுபவதில் ஆபத்து உள்ளதா?

By Dinesh TG  |  First Published Dec 31, 2022, 9:49 PM IST

அதிகப்படியான உடலுறவு ஆண்களுக்கு கடுமையான உடல் வலி மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும். விந்து உற்பத்தி மற்றும் பிறப்புறுப்பு செயல்பாட்டில் பிரச்னை உள்ளிட்ட சங்கடங்கள் தோன்றும் என நிபுணர்கள் கூறுகின்றனர். 
 


செக்ஸ் என்பது பாலியல் இன்பம் மட்டுமல்ல, உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியம் தரும் செயல்பாடாகவும் உள்ளது. அளவுக்கு மீறினால் அமிர்தமும் விஷம் என்பது போல, அதிகப்படியாக உடலுறவில் ஈடுபடுவது ஆபத்தானது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான அளவில் தீங்கு விளைவிக்கும் என அவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

ஒரு ஆணும் பெண்ணும் மகிழ்ச்சியாகவும் வசதியாகவும் உணரும் வரை உடல் நெருக்கம் சிறந்த நல்வாழ்வை வழங்கும். ஆனால் அது அளவை மீறும்போது பல்வேறு உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட காரணமாக அமைந்துவிடுகிறது. விந்து உற்பத்தி குறைபாடு,  விறைப்புத்தன்மை பிரச்னை உள்ளிட்ட பிரச்னைகளால் ஆண்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். இதுதொடர்பாக கின்ஸே இன்ஸ்டியூட் நடத்திய ஆய்வில், 18-29 வயதுடையவர்கள் ஆண்டுக்கு 112 முறை உடலுறவு கொள்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 30-39 வயதுடையவர்களின் சராசரி எண்ணிக்கை 86. அதேசமயம், 40-49 வயதுக்குட்பட்டவர்களுக்கு இது 69 ஆகக் குறைகிறது தெரியவந்துள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

உடலுறவு கொள்ளும் பெண்களுக்கு பிறப்புறுப்பு வறட்சி ஏற்படும் என்று அறிக்கைகள் கூறுகின்றன. அதிகப்படியான உடலுறவின் விளைவாக சோர்வு ஏற்படுகிறது. ஆரோக்கியமான உடலுறவு என்பது தற்காலிகமாக சோர்வாக இருந்தாலும் உடலுக்கு உற்சாகம் தரும் ஒன்று. ஆனால் அதிகப்படியான உடலுறவு உடலுக்கு நிரந்தர சோர்வை ஏற்படுத்தும்.

சுய இன்பம் காணும் போது பிறப்புறுப்பில் ரத்தக் கசிவா? ஆண்களே உஷார்..!!

உடலுறவு அதிகமாக இருக்கும்போது, கார்டிசோல் மற்றும் அட்ரினலின் போன்ற ஹார்மோன்கள் இரத்தத்தில் நுழைகின்றன. இது இரத்த அழுத்தம், இதய துடிப்பு மற்றும் இரத்த குளுக்கோஸ் அளவை அதிகரிக்கிறது. இவை அனைத்தும் உடலை பலவீனப்படுத்தும் ஹார்மோன்களாகவும் உள்ளன. அடிக்கடி உடலுறவு கொள்வது ஆண்களுக்கும் பெண்களுக்கும் அந்தரங்க பகுதிகளில் தோல் புண்களை ஏற்படுத்தும். குறிப்பாக பெண்களுக்கு அந்தரங்க உறுப்புகளில் வீக்கத்தை தரும். இதற்கு பெண்களுடைய பிறப்புறுப்பில் ஏற்படும் அழுத்தமே காரணம்.

அதிகப்படியான உடலுறவு ஆண்களுக்கு கடுமையான உடல் வலி மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும். வெள்ளி முதல் ஞாயிறு வரை மக்கள் வார இறுதியில் 8 முதல் 10 முறை விந்து வெளியேறும் போது வலி மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தை தருகிறது. ஒருசிலருக்கு விந்து உற்பத்தி, விந்து வெளியேற்றம், சிறுநீரகத்தில் வலி போன்ற பிரச்னைகளையும் உருவாக்குகிறது. அதிகப்படியான உடலுறவு குறைந்தபட்சம் சிலருக்கு பாலுறவில் ஆர்வம் குறைகிறது. அதிக உடலுறவு ஆண்களுக்கும் பெண்களுக்கும் முதுகுவலி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்
 

click me!