வாழ்நாள் முழுவதும் தனியாகவே வாழ்ந்துவிடலாம் என்று நீங்கள் முடிவு செய்துள்ளீர்களா. அப்போது கீழே வழங்கப்பட்டுள்ள தகவல்களை விடாமல் படியுங்கள். அது உங்களை ஆச்சரியப்படுத்தலாம்.
யாரையும் காதலிக்காமல், யாருடனும் திருமண உறவில் ஈடுபடாமல் தனியாகவே வாழ்நாள் முழுக்க இருந்துவிடலாம் என்று நீங்கள் முடிவு செய்திருந்தால், கீழே வழங்கப்பட்டுள்ள தகவல்களை தொடர்ந்து படியுங்கள். பல ஆண்டுகளாக சிங்களாகவே இருந்து, யாருடனும் வாழ்க்கையை பகிர்ந்துகொள்ளாமல் வாழ்பவர்கள் பல்வேறு உளவியல் பிரச்னையை எதிர்கொள்கின்றனர். ஒருசிலருக்கு சிங்களாக இருப்பது, அவர்களுடைய உயிருக்கும் ஆபத்தாக அமைவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
மற்றவர் குறித்த எண்ணமே இருக்காது
தனியாகவே வாழ்பவர்கள் சமூகத்துடன் இணக்கமாக இருக்கமாட்டார்கள். மற்றவர்களுடன் நெருங்கிப் பழகமாட்டார்கள். தனது உற்றார் உறவினர் குடும்பத்தினரிடம் கூட மாற்றத்தான் தாய் மனப்பான்மையுடன் இருப்பார்கள். மேலும், அவர்களிடம் மனிதநேயம் குறைந்து காணப்படும். இதனால் அவர்களிடம் மற்றவர்களுக்கு உதவும் எண்ணமும் இருக்காது.
உணர்ச்சியே இருக்காது
யாருடைய துணையுமில்லாமல் வாழ்பவர்களுக்கு காலப்போக்கில் உணர்வுகளே இருக்காது. எந்த காரியத்திலும் பற்றுதல் இருக்காது, எதையும் செய்யவும் மாட்டார்கள், அவர்களால் எந்த பயனும் இருக்காது. கடைசிவரை தனக்காவே இருந்து, தானாகவே இறந்துபோய்விடுவார்கள். கஷ்டப்படுபவர்களை பார்க்கும் போது அவர்களுக்கு இறக்கம் வராது.
தன்னலம் மட்டுமே முக்கியம்
தான் சேர்ந்த, தன்னுடைய நலனை மட்டுமே கருத்தில் கொண்டு வாழ்வார்கள். நெடுநாட்கள் தனியாகவே இருந்துவிடுவதால் ஏற்படும் விளைவு தான் இது. பிறருடைய நலன் மற்றும் விருப்பு வெறுப்புகளை கருத்தில் கூட வைக்கமாட்டார்கள். தன் நலனில் மிகவும் அக்கறை செலுத்தி வாழ்வதால், சமூகத்திலும் இவர்களுக்கு என்று பற்றுதலே இருக்காது. அதேபோன்று இவர்களால் சமூகத்துக்கு எந்த பயனும் இருக்காது.
Dry Lips: பனிக்காலத்தில் உதடுகள் வறட்சியா? இதோ உங்களுக்கான சூப்பரான டிப்ஸ்!
தனி மனித சுதந்திரம்
தனியாக வாழ்பவர்களுக்கு கட்டுப்பாடற்ற சுதந்திரம் இருக்கும். அதனால் தங்களுடைய சுதந்திரம் பரிபோய்விடக் கூடும் என்கிற எண்ணத்தில் யாருடனும் பேசவும் மாட்டார்கள் பழகவும் மாட்டார்கள். அதேநேரத்தில் தங்களுடைய சுதந்திரம் மற்றவரை பாதித்தாலும் பரவாயில்லை என்கிற எண்ணத்தில் செயல்படுவார்கள். இதனால் அவர்களை பெரும்பாலானோருக்கு பிடிக்காது.
தன்னம்பிக்கை இருக்காது
சிங்குளாக வாழ்பவர்களிடம் ஒத்துழைப்பு இருக்காது. அதேபோன்று தகவல் பரிமாற்றம், உடனடி உதவி தேவை போன்ற பிரச்னைகளை அடிக்கடி சந்திப்பார்கள். தன்னம்பிக்கை அவர்களிடம் இருக்காது. மிகவும் தாழ்வு மனப்பான்மையுடன் சுற்றம், நட்பு, சமூகம் ஆகியவற்றில் இருந்து விலகி இருப்பார்கள். அவர்களால் எதையும் தைரியத்துடன் பேச முடியாது.