மாதிவிடாய் நேரத்தில் வலி தெரியாமல் இருக்க இதைச் சாப்பிட்டால் போதும்..!!

By Dinesh TG  |  First Published Jan 28, 2023, 9:22 PM IST

ஒரு பெண் கர்ப்பம அடைந்தாலோ அல்லது குழந்தைக்கு பால் கொடுத்தாலோ, அவர்களுடைய உடலில் இயற்கையான மாற்றங்கள் ஏற்படுகின்றன. அதேபோன்று மற்ற காலங்களில் வழக்கமான மற்றும் கணிக்கக்கூடிய சுழற்சிகள் கொண்டிருப்பது முக்கியம்.
 


மாதவிடாய் சுழற்சி என்பது பெண்களின் வாழ்நாள் முழுவதும் நடக்கும் செயல்முறையாகும். பெண்கள் பருவமடையும் போது, ​​அவர்களின் கருப்பைகள் ஹார்மோன்களை உற்பத்தி செய்ய ஆரம்பிக்கின்றன. இந்த ஹார்மோன்கள் கருப்பையின் உட்புறத்தில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. இதனால் இரத்தப்போக்கு ஏற்படுகிறது. இதுதான் மாதவிடாய் என்று குறிப்பிடப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தேதியில் சுழற்சி முறையுடன் மாதவிடாய் தொடர வேண்டும். மன அழுத்தம் மற்றும் உடல்நலப் பிரச்சனைகள் இருந்தால், மாதவிடாய் சுழற்சி  தாமதப்படுத்தும். ஊட்டச்சத்து குறைபாடு, இரத்த சோகை, தைராய்டு பிரச்சனைகள் மற்றும் ஹார்மோன் சமநிலையின்மை ஆகியவை மாதவிடாய் தாமதமாவதற்கான காரணங்களாகும்.
இந்த பதிவில் பெண்களிடையே பொதுவாக நீடிக்கும் மாதவிடாய் பிரச்னைகளை குணப்படுத்துவதற்கான வழிமுறைகளை குறித்து விரிவாக பார்க்கலாம்.

மாதவிடாய் காலத்து பிரச்னைகள்

Tap to resize

Latest Videos

undefined

மாதவிடாய் காலத்தில் உடல்நலன் முதல் மனநலன் வரை பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஒருசிலருக்கு உடலின் பல்வேறு பகுதிகளில் வலி, தூக்கமின்மை, உடல் சோர்வு போன்ற பிரச்னைகள் இருக்கும். இன்னும் சில பெண்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் பயங்கரமாக பசிக்கும். அதேபோன்று ஒருசில பெண்களுக்கு 3 முதல் 7 நாட்கள் வரை கூட மாதவிடாய் பிரச்னைகள் இருக்கும். இதை வீட்டு வைத்தியம் மூலம் சரிசெய்ய முடியும். இதற்கு பெண்கள் தங்களுடைய உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பது முக்கியமாகும்.

வயிற்று பிடிப்புக்கான மருந்து

பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படும் போது வயிற்று பிடிப்பு பிரச்னை இருக்கும். அதனால் அவர்களுடைய அன்றாட வேலைகள் முதல் மனநலன் வரை பாதிக்கப்படும். இன்னும் ஒருசிலருக்கு வயிற்றுப் பிடிப்பு ஏற்படும் போது, தாங்க முடியாத வலி இருக்கும். இதற்கு பெருஞ்சீரக தேநீர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒரு கப் தண்ணீரில் இஞ்சி சாறு, சக்கரை, பால், பெருஞ்சீரகம், ஏலக்காய் சேர்த்து தேநீர் போட்டு குடிக்கலாம். கொஞ்சம் நெய் கூட இதில் சேர்க்கலாம். இதை குடித்தவுடன் வயிற்றுப் பிடிப்பு குணமாகும்.

வயிறு வீக்கத்துக்கான மருந்து

பெண்களுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி ஏற்படுகையில், வயிறு வீக்கப் பிரச்னை உருவாகும். இதை சரிசெய்ய சீரகத் தண்ணீர் சிறந்த தீர்வாகும். சீரகத்தை ஒரு கிளாஸ் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். அதை அடுத்தநாள் மதிய உணவுக்கு பிறகு குடிப்பதன் மூலம் வயிறு வீக்கப் பிரச்னை குணமடையும். இதனால் கருப்பை சுருக்கம் அடையாமல், முறையான மாதவிடாய் சுழற்சிக்கு வழிவகுக்கும்.

தூக்கமின்மையை துரத்திவிடலாம்

பல பெண்கள் மாதவிடாய் காலத்தில் நிம்மதியான தூக்கம் வராமல் தவிக்கின்றனர். இதற்கு வீட்டு வைத்திய முறையில் சாமந்திப் பூ பரிந்துரைக்கப்படுகிறது. அடுப்பில் தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து, சீமை சாமந்திப் பூவை போட்டு மூடி வைக்கவும். குறைந்தது 5 நிமிடங்கள் கழித்து அதை வடிகட்டி குடிக்கவும். ஒருவேளை சுவை பிடிக்கவில்லை என்றால் தேன் அல்லது நாட்டுச் சக்கரையை சேர்த்துக்கொள்ளலாம். இதில் கூடுதலாக எலுமிச்சைச் சாறு சேர்த்து பருவது நல்ல பலனை வழங்கும். சாமந்திப் பூ தேநீர் குடிப்பதால் மன அழுத்தம் குறைந்து, இரவில் நன்றாக தூக்கம் கிடைக்கும்.

மலச்சிக்கல் வரவே வராது

மாதவிடாய் நாட்களில் பல பெண்களுக்கு மலச்சிக்கல் பிரச்னை உள்ளது. இதை வெளியே சொல்ல தயக்கப்பட்டுக் கொண்டு, அவதி அடையும் பெண்கள் நிறையவுள்ளனர். அவர்களுக்கு குறிப்பிட்ட இந்த வீட்டு வைத்திய முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மாதவிடாய் ஏற்படும் நாட்களில் நார்ச்சத்து மிகுந்த காய்கறிகள், பழங்களை சாப்பிடுவது, அதிலும் அவற்றை சாலட் செய்து சாப்பிடுவது இன்னும் சிறப்பு. மற்றொரு எண்ணெய்க்கு பதிலாக நெய் போட்டு சமைத்து சாப்பிடுவது. இதன்மூலம் மலச்சிக்கல் பிரச்னை உடனடியாக குணமடைந்து நிவாரணம் கிடைக்கும்.

click me!