கணவரோடு உடலுறவில் திருப்தி அடையாத பெண்கள் இப்படி செய்வார்களா? அட கொடுமையே...

By Ma Riya  |  First Published Jan 28, 2023, 3:19 PM IST

உணவு, உறக்கம் போன்றே உடலுறவும் பொதுவானது. அப்படியிருக்க, கணவனால் பாலியல் திருப்தி கிடைக்காத இந்த பெண்கள் என்ன செய்வார்கள் தெரியுமா?.. இதை படியுங்கள். 


திருமணம் ஆகும்போது எதுவும் தெரியாது. ஆனால் பல விஷயங்கள் திருமணத்திற்கு பிறகுதான் தெரியும். மிக முக்கியமாக, உங்கள் துணை எப்படி உடலுறவு கொள்கிறார்? என்பது நாளடைவில் தான் தெரிய வரும். சிலர் உடலுறவில் ஆர்வம் காட்டுவார்கள், சிலர் ஆர்வம் காட்டுவதில்லை. இப்படி கணவரால் பாலுறவில் திருப்தி அடையாத பெண்கள் என்ன செய்வார்கள்? நீண்ட காலமாக பாலியல் ஆசைகளை அடக்குவது கடினம். ஆனால் சிலர் எப்படியாவது உடலுறவைக் கட்டுப்படுத்தியிருக்கலாம், கணவருக்கு உடலுறவில் ஆர்வம் இல்லாவிட்டாலும் பெண்கள் நட்பாக இருந்தால் போதும் என அறிவுரை கூறுகிறார்கள். இது அவரவர் அனுபவத்தை பொறுத்தது.  

நாம் இங்கு தெரிந்து கொள்வது மீனாவின் கதையை, அவர் மும்பையை சேர்ந்தவர். மீனாவின் கணவன் தன்பால் ஈர்ப்பாளர் (gay). குடும்பத்திற்காக மீனாவின் கணவர் திருமணம் செய்திருப்பார் போல, மீனாவுடன் உடலுறவில் ஈடுபடுவதில் ஒருபோதும் அவர் ஆர்வம் காட்டவில்லை. மீனாவின் கணவர் மிகவும் அழகானவராம். சரி மீனாவின் கதையை மீனாவே சொல்வார், நான் இதோடு நிறுத்தி கொள்கிறேன். 

Tap to resize

Latest Videos

undefined

"என் கணவரின் அழகை கண்டு என்னுடைய நண்பர்கள் அனைவரும் பொறாமைப்பட்டனர். ஆனால் உடலுறவு என்று வரும்போது, அவருக்கு என் மீது ஆர்வமே இல்லை. எப்போது நான் நெருங்கினாலும் அவர் உடலுறவை விட்டு ஓடுவதற்கான வழிகளைத் தேடிக்கொண்டிருந்தார். ஒரு நாள் வேலை முடிந்து சீக்கிரம் வீட்டுக்கு வந்தேன். என்னிடம் இருந்த சாவியைப் பயன்படுத்தி உள்ளே நுழைந்தால், என் கணவர் இன்னொரு ஆணுடன் உறவில் இருந்தார். இதை கண்டு என் மனம் சுக்குநூறானது. 

அவர் இன்னொரு ஆணுடன் படுக்கையறையில் இருந்ததை பார்த்தாக அவரிடம் நான் காட்டிக் கொள்ளவில்லை. என் கணவரிடம் இதை சொல்லி அவரின் நிம்மதியையும் தொந்தரவு செய்ய விரும்பவில்லை" என்கிறார் மீனா. அதன் பிறகு மீனா என்ன ஆனார், அவருடைய பாலியல் ஆசைகள் என்ன ஆனது? மீனா, தன் கணவனின் உறவுக்கு எந்த தடையும் விதிக்கவில்லை. மீனாவின் பாலியல் உணர்வுகளை சமாளித்துக் கொள்ள வேறு வழிகளை தேர்வு செய்து கொண்டார். தன் கணவருக்கு நல்ல நண்பராகவும் துணையாகவும் இருந்தார். மீனாவின் கதையை இங்கு முடித்து கொள்ளலாம். 

அடுத்ததாக பெயர் வெளியிட விரும்பாத மற்றொரு பெண்ணின் கதையை காணலாம். இது உங்களுக்கு அதிர்ச்சி அளிக்கலாம். அந்த பெண் கூறியது பின்வருமாறு: "என் கணவர் வெளிநாட்டில் இருந்தார். நான் என் குழந்தையுடன் மூன்று மாதங்கள் தனியாக இருந்தேன். அப்போது ஸ்கைப்பில் 19 முதல் 20 வயதுள்ள ஒரு பையனை பார்த்தேன். ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்பதால் இருவரும் சந்தித்தோம். திருப்தியான உறவு. என் கணவர் வெளிநாட்டில் இருந்து வீடு திரும்புவதற்கு 2-3 நாட்களுக்கு முன்பு நாங்கள் எங்கள் உறவை முடித்துக் கொண்டோம்"என்று கூறினார்.  

இதையும் படிங்க: விராட் கோலி மட்டுமில்ல ரன்பீரும் அப்படித்தான்! பிரபலங்கள் ஏன் சோசியல் மீடியால குழந்தைங்க முகத்தை மறைக்கிறாங்க?

சுசு என்ற பெண்ணின் கதை கொஞ்சம் வித்தியாசமானது. சுசுவும் கணவரிடம் திருப்தி அடையவில்லை, அதனால் அவருக்குத் தெரியாமல் வேறொருவருடன் உறவு வைத்துக் கொண்டார். சுசு கூறியதாவது:"நான் என் கணவரை ஏமாற்றுவேன் என்று கனவிலும் நினைத்துக்கூட பார்க்கவில்லை. எனது நீண்டகால சிறந்த நண்பருடன் மெல்ல நான் உறவை வளர்த்துக் கொண்டேன். மேலும் இந்த விஷயத்தை மூடிமறைக்க நினைத்தேன். ஆனால் இந்தச் சம்பவம் நடந்து சில மாதங்களுக்குப் பிறகு என் குற்ற உணர்வு என்னைத் துரத்தத் தொடங்கியது. நான் என் கணவரிடம் மனம் திறந்து பேசினேன். அவர் அதிர்ச்சியடைந்தார். அது மட்டுமின்றி பொறாமையால் அவர் என் பாலியல் விருப்பங்களை அந்த இரவில் நான் நினைத்தபடியே செய்தார். பொறாமை வேலை செய்தது. அந்த சம்பவம் நடந்து ஒரு வருடம் ஆகிறது, நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம்"என்கிறார் சுசு. கணவனால் பாலியல் உறவு திருப்தி கிடைக்காத இந்த பெண்கள் செய்த விஷயம் படிக்கும்போது அதிர்ச்சியும், அயற்சியும் அளிக்கிறது. 

பாலியல் விருப்பங்கள் நிறைவேற்றப்படாமல் இருப்பது மனதளவிலும், உடல் அளவிலும் பெண்களையும் ஆண்களையும் பாதிக்கும். திருப்தி இல்லாத உறவில் முதலில் கணவரோ/ மனைவியோ தங்கள் துணையிடம் அது குறித்து பேச வேண்டும். ஒருவரையொருவர் புரிந்து கொள்தல் ரொம்ப முக்கியம். எந்த உறவாகினும் அடிப்படையான விஷயம் நேர்மையாக இருப்பதுதான். நாம் விதைப்பதை தான் அறுப்போம். 

இதையும் படிங்க: சாக்லேட்டில் நெத்திச்சுட்டி, நெக்லஸ்.. சாக்லேட் நகைகளுடன் வினோத ஹேர்ஸ்டைல் செய்த மணமகளின் வைரல் வீடியோ!

click me!