உத்தப்பிரதேசத்தில் குடும்ப சண்டைக்கு நடுவே கோவத்தில் கணவனின் நாக்கை, பெண் ஒருவர் கடித்து துண்டாக்கிய சம்பவம் பீதியை கிளப்பியுள்ளது.
திருமணம் இன்பமும், துன்பமும் கலந்தது. சில சமயம் தம்பதிகளுக்குள் வாய்ச்சண்டை வரும், சில சமயம் புன்னகையுடன் கைகுலுக்குவார்கள். ஆனால் பல சமயங்களில் பொருட்களை தூக்கி எறிவதில் சண்டை சூடுபிடிக்கிறது. ஆனால் இதையெல்லாம் தாண்டி இங்கு குடும்ப சண்டை ஒருவரின் நாக்கை துண்டித்துள்ளது. இந்த வினோத சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ளது. லக்னோவில் அமைந்துள்ள தாகுர்கஞ்ச் பகுதியில் வசிக்கும் சல்மா, வெள்ளிக்கிழமை தன் கணவர் முன்னாவுடன் நடந்த சண்டையில் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளார்.
முன்னாவுக்கும், சல்மாவுக்கும் இடையே நீண்ட காலமாகவே தகராறு இருந்தாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சல்மா தன் பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். ஆனால் முன்னா தன் மனைவியை தன்னோடு வந்துவிடும்படி கட்டாயப்படுத்தியுள்ளார். நேற்று (ஜன.27) வெள்ளிக்கிழமை மனைவியின் பெற்றோர் வீட்டுக்கு சென்ற முன்னா, தன் வீட்டிற்கு வந்துவிடுமாறு சல்மாவை கேட்டு கொண்டார். ஒருகட்டத்தில் அது சண்டையாக மாறியுள்ளது.
சண்டை முற்றியபோது மனைவி கணவனின் நாக்கைக் கடித்துவிட்டார் என கூறப்படுகிறது. சல்மா தன் கணவரின் நாக்கை கொடூரமாக பற்களால் கடித்ததில், அது துண்டு துண்டாக தரையில் விழுந்தது. பலத்த காயம் அடைந்த முன்னாவும் மயங்கி விழுந்தார். அவரை போலீசார் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சல்மா தற்போது போலீஸ் காவலில் உள்ளார். சல்மா ஏன் அவ்வாறு நடந்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
இதையும் படிங்க: விராட் கோலி மட்டுமில்ல ரன்பீரும் அப்படித்தான்! பிரபலங்கள் ஏன் சோசியல் மீடியால குழந்தைங்க முகத்தை மறைக்கிறாங்க?
இது குறித்து ஏடிசிபி சிரஞ்சீவ் நாத் சிங்க,"இந்த தம்பதிக்கு இடையே பல ஆண்டுகளாக சண்டை நடந்து வருகிறது. மனைவி, கணவனை விட்டு பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். வெள்ளிக்கிழமையன்று கணவர் தனது பிள்ளைகளை சந்திப்பதற்காக இங்கு வந்த போது இந்த அசாம்பாவிதம் நடந்துள்ளது. தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த வழக்கின் பின்னணியில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது"என்றார்.
இதையும் படிங்க: கணவரோடு உடலுறவில் திருப்தி அடையாத பெண்கள் இப்படி செய்வார்களா? அட கொடுமையே...