நிதி நெருக்கடியை விரட்டும்; தாம்பத்தியத்தை சிறக்கவைக்கும் குங்குமப்பூ..!!

By Dinesh TG  |  First Published Dec 29, 2022, 4:31 PM IST

ஒரு காலத்தில் குங்குமப்பூ பணம் வைத்தவர்களின் சொத்தாக இருந்தது. இப்போது சாமானியர்களுக்கும் சாதாரணமாக குங்குமப்பூ கிடைக்கிறது. ஜோதிட சாஸ்திரத்தில் குங்கமப்பூ செல்வத்தின் ஆதாரமாக கூறப்படுகிறது.
 


உடல் ஆரோக்கியத்துக்கு குங்கமப்பூ வலு சேர்க்கும் பொருளாக உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் உட்கொள்ளப்படும் குங்குமப்பூ, ஆயுர்வேத  மருத்துவ முறைகளிலும் பெரியளவில் பயன்படுத்தப்படுகிறது. அதேசமயத்தில் ஜோதிட சாஸ்திரத்திலும் இதனுடைய பயன்பாடு முதன்மையாக குறிப்பிடப்பட்டுள்ளன.

குறிப்பாக, குங்குமப்பூவின் மகிரந்தம் ஜோதிடத்துடன் தொடர்புடையது. வீட்டின் அமைதி மற்றும் வாழ்க்கை முன்னேற்றத்திற்கான பல வகையான பரிகாரங்களுக்கு குங்குமப்பூ பயன்படுத்தப்படுகிறது. பாரம்பரியமாகவே பலரும் இதை மங்களகரமானதாக கருதுகின்றனர். குங்குமப்பூவின் உதவியால் வியாழ பகவானின் அருளைப் பெறலாம். மேலும் பல கிரஹ தோஷங்களிலிருந்தும் விடுபடலாம். நல்ல பலனைத் தரும் குங்குமப்பூவின் அனைத்து குறிப்புகள் குறித்து தெரிந்துகொள்ளலாம்.

Latest Videos

வியாழன் வலிமையுறும்

ஒருவருக்கு வியாழன் கிரகம் வலிமையாக இருப்பது முக்கியம். அது பலவீனமாக இருந்தால் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். ஒருவேளை உங்களுக்கு வியாழன் பலவீனமாக இருந்தால் குங்குமப்பூவை வைத்து வழிபாடு நடத்தலாம். வியாழக்கிழமைகளில் மட்டும் பாயாசத்தில் குங்குமப்பூவை கலந்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

தாம்பத்திய மகிழ்ச்சி

திருமண வாழ்வில் பிரச்னை ஏற்பட்டால், கணவன்-மனைவிக்குள் விரிசல் நடந்தால் குங்குமப்பூவை வைத்து வழிபாடு நடத்த வேண்டும். மூன்று மாதங்கள் கணவனும் மனைவியும் சிவனுக்கு குங்குமம் கலந்த பாலில் அபிஷேகம் செய்ய வேண்டும். இதனால் தாம்பத்தியத்தில் காதல் அதிகரிக்கிறது.

நிதி நிலைமை மேம்படும்

உங்களுக்கு பணக்கஷ்டம் ஏற்படுகையில் அல்லது பண நெருக்கடி நேருகையில் குங்குமப்பூவை வைத்து பரிகாரம் செய்யலாம். அதற்கு 7 வெள்ளைத் துண்டுகளுக்கு குங்குமப்பூ சாயம் பூச வேண்டும். அதை ஒன்றாக ஒரு சிவப்பு துணையில் கட்டி பர்ஸில் வைத்துக் கொள்ளலாம் அல்லது பணத்தை சேமித்து வைக்கும் பெட்டக்கத்தில் வைக்கலாம். இதன்மூலம் நிதிச்சிக்கல் நீங்கும். 

அதிர்ஷ்டத்தை முன்கூட்டியே குறிக்கும் 14 அறிகுறிகள்- விபரம் உள்ளே..!!

பித்ரு தோஷம் நீங்கும்

உங்களுக்கோ அல்லது உங்களுடைய குடும்பத்துக்கோ பித்ரு தோஷம் இருந்தால் சதுர்த்தசி மற்றும் அமாவாசை தினங்களில் குங்குமப்பூவை வீட்டின் தென்மேற்கு திசையில் தேய்த்துவிட வேண்டும். இதனால் பித்ரு தோஷம் குறைந்துபோகும். அதேபோன்று சுக்ரன் அருள் பெறுவதற்கு அலங்காரம் மற்றும் திருமணப் பொருட்களுடன் குங்குமப்பூவை தானம் செய்ய வேண்டும். இதனால் சுக்ர தோஷம்.

மகிழ்ச்சி செழிக்க

தங்கள் வீட்டில் எப்போதும் மகிழ்ச்சி மற்றும் செழிப்பு இருக்க விரும்புவோர் கடவுளின் ஆசீர்வாதத்தைப் பெற வேண்டும். கடவுளை மகிழ்விக்க சிவன், விஷ்ணு, பிள்ளையார் மற்றும் லட்சுமி உள்ளிட்ட கடவுள்களுக்கு குங்குமத் திலகத்தைத் தவறாமல் தடவ வேண்டும். இப்படி செய்தால் உங்களுடைய ஆசை நிறைவேறும்.
 

click me!