எந்தெந்த நேரத்தில் எல்லாம் உடலுறவில் ஈடுபடக் கூடாது? தெரியுமா உங்களுக்கு??

By Dinesh TG  |  First Published Dec 25, 2022, 1:02 PM IST

உடலுறவு கொள்வது ஆண், பெண் இருவரையும் உற்சாகப்படுத்த வேண்டும். ஆனால் அதேசமயத்தில் உடலுறவு கொள்வதை சில நேரங்களில் தள்ளிவைக்க வேண்டும். அந்த வகையில் எதுபோன்ற சூழ்நிலைகளில் உடலுறவில் ஈடுபடாமல் இருப்பது நல்லது என்பது குறித்து விரிவாக தெரிந்துகொள்ளலாம்.
 


உயிர்கள் வாழ்வதற்கு சிற்றின்பம் என்பது மிகவும் முக்கியம். ஆனால் அதற்காக அதுவே கதி என்று இருக்கவும் கூடாது. அந்த வகையில் எப்போது எல்லாம் நாம் பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்க்கலாம் என்று தெரிந்துகொள்ளலாம்.

உடலுறவு கொள்வது ஆண், பெண் இருவரையும் உற்சாகப்படுத்த வேண்டும். ஆனால் அதேசமயத்தில் உடலுறவு கொள்வதை சில நேரங்களில் தள்ளிவைக்க வேண்டும். அந்த வகையில் எதுபோன்ற சூழ்நிலைகளில் உடலுறவில் ஈடுபடாமல் இருப்பது நல்லது என்பது குறித்து விரிவாக தெரிந்துகொள்ளலாம்.

Latest Videos

மோதல்

தம்பதிகள் அல்லது காதலர்களுக்கிடையே மோதல் ஏற்படும் போது, அதை தொடர்ந்து நடக்கும் விவாதத்தை தவிர்க்க பலரும் உடலுறவில் ஈடுபடுகிறார்கள். அமைதி காக்க உடலுறவு கொள்வதும், துணையை மகிழ்விக்க கலவியில் ஈடுபடுவது என்பதும் தவறான செயலாகும். இது உங்கள் இருவருக்குமிடையேயான மோதல் மீதான விரக்தியின் வெளிப்பாடு மட்டுமே. 

மது மயக்கம்

ஆணும் பெண்ணும் குடிபோதையில் இருந்தால், உடலுறவு கொள்ளாமல் இருப்பது மிகவும் நல்லது. ஒருசிலர் மது மயக்கத்தில் சுய கட்டுப்பாட்டு இல்லாமல் நடந்துகொள்கின்றனர். அவர்களைப் போன்றோருக்கு இதுபோன்ற சூழ்நிலை மிகவும் அபாயத்தை ஏற்படுத்தக்கூடியதாகவும். ஒருவேளை உங்களுக்கு விருப்பம் இருந்து, நீங்கள் விரும்பும் நபர் அதற்கு உடன்பாடாமல் இருந்தால், அது வேறுமாதிரியான பிரச்னை. இதுபோன்ற சூழ்நிலையில் நீங்கள் கட்டுப்பாட்டை மீறி நடந்துவிட்டால், உங்களுடைய எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும்.

சுய இன்பம் காணும் போது பிறப்புறுப்பில் ரத்தக் கசிவா? ஆண்களே உஷார்..!!

மருத்துவ பரிசோதனை

கருப்பை குழாய் உள்ளிட்ட பிறப்புறுப்பு தொடர்பான பிரச்னைக்காக சிகிச்சை பெறக்கூடியவர்கள், பரிசோதனைக்கு முன்பு பாலியல் உறவில் ஈடுபடுவதை தவிர்ப்பது மிகவும் நல்லது. அது நோய் பாதிப்புக்கான முடிவுகளை குழப்புவதற்கு அதிக வாய்ப்புள்ளது. அதற்காக ஆணுறையுடன் கொண்டு உறவுக்கொள்ளலாம் என்று நினைத்துவிடக்கூடாது. இதுதொடர்பாக கருத்து தெரிவிக்கும் நிபுணர்கள், பரிசோதனைக்கு தேவைப்படும் ஸ்வாப்களில் விந்து தலையிடலாம் என்று கூறுகின்றனர். எனவே உங்களுடைய பரிசோதனைக்கு 48 மணிநேரத்துக்கு முன்பிருந்து உடலுறவில் ஈடுபடுவதை தவிர்த்துவிடுவது நல்லது.

ஆணுறை இல்லாமல்

இதுவொரு சாதாரண விஷயம் என்று நீங்கள் நினைக்கக்கூடும். ஆனால் பாதுகாப்பற்ற உடலுறவால் பல்வேறு குழப்பங்கள் ஏற்படக்கூடும் என்பது மட்டுமே உண்மை. ஆணுறையில்லாமல் உறவில் ஈடுபடுவதன் மூலம், உங்களுடைய பெண் துணைக்கு நீங்கள் ஏதேனும் பாலியல் நோயை பரப்பக்கூடும். அதுதொடர்பான பாதிப்பு உடலில் இருப்பது உங்களுக்கே தெரியாது என்பது தான் விசித்திரமான உண்மை. அதுமட்டுமின்றி திட்டமிடப்படாத கர்ப்பம் கூட ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே நீங்கள் ஒரு குழந்தையைத் திட்டமிடவில்லை என்றால், ஆணுறை இல்லாமல் உடலுறவு கொள்வதை தவிர்ப்பது மிகவும் நல்லது மற்றும் எளிய வழியும் கூட.
 

click me!