சுய இன்பம் காணும் போது பிறப்புறுப்பில் ரத்தக் கசிவா? ஆண்களே உஷார்..!!

By Dinesh TG  |  First Published Dec 22, 2022, 8:27 PM IST

ஆண்கள் பலருக்கு சுய இன்பம் காண்கையில் ரத்தக் கசிவு ஏற்படக்கூடிய பிரச்னைகள் உண்டு. இது சமீபகாலங்களில் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. எதனால் இந்த பிரச்னை ஏற்படுகிறது? இதை எப்படி சரிசெய்யலாம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
 


ஆண்கள் சுய இன்பம் காண்பது ஆரோக்கியமான செயல்பாடு தான். அதற்கென்று திருமணமான ஆண்கள் சுய இன்பத்தில் ஈடுபடுவது கிடையாது என்று இல்லை. திருமணமான ஆண்களும் சுய இன்பம் காணுகின்றனர். அதேபோல திருமணமாகாத ஆண்களும் சுய இன்பத்தில் ஈடுபடுகின்றனர். சீரான பாலியல் உணர்வுகள் ஒருவருடைய உடல் ஆரோக்கியத்துக்கு சான்றாகும். அதனால் சுய இன்பம் காண்பது தவறான அல்லது இயற்கைக்கு மாறானது கிடையாது. ஆனால் அது அளவுக்கு அதிகமாக செல்லும் போது சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். அதனால் எந்த இன்பமாக இருந்தாலும், அது அளவுடனும் பாதுகாப்புடனும் இருந்தால் ஆரோக்கியம் நிலைத்திருக்கும். அந்த வகையில் சுய இன்பம் காணும் ஆண்கள் பலருக்கு பிறப்புறுப்பில் இருந்து ரத்தம் வெளியேறுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது எதனால் ஏற்படுகிறது? வேறு ஏதேனும் உடல்நலப் பாதிப்புக்கான அறிகுறியா? என்பதை தெரிந்துகொள்ளலாம்.

இயல்பானது தான்

Tap to resize

Latest Videos

undefined

சுய இன்பத்தில் ஈடுபடும் போது மட்டுமில்லாமல், சில ஆண்களுக்கு துணையுடன் பாலியல் உறவில் ஈடுபடும் போது கூட ஆணுறுப்பில் இருந்து ரத்தம் வழியும். இது இயல்பான ஒரு செயல்பாடு தான் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அதற்கு காரணம் ஆணுறுப்பின் அடியில் இருக்கும் ஒரு மென்மையான பகுதியாகும். நீங்கள் வேகமாக சுய இன்பத்தில் ஈடுபட்டாலோ அல்லது உறவுகொள்கையில் மிகவும் வேகத்துடன் செயல்பட்டாலோ, அந்த மென்மையான பகுதியில் காயம் ஏற்படக்கூடும். அதனால் உங்களுடைய ஆணுறுப்பில் இருந்து ரத்தம் வரலாம்.

புது ரத்தம்

பெரும்பாலான ஆண்கள் முதன்முறையாக உடலுறவுகொள்ளும் போது இந்த பிரச்னையை எதிர்கொள்வார்கள். அதேசமயத்தில் சிலருக்கு இயல்பாகவே ஆணுறுப்பின் அடிப்பகுதி மிகவும் மெல்லியதாக இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு சுய இன்பம் காணும் போது கூட ரத்தக் கசிவு ஏற்படும். அதனால் பாலியல் செயல்பாடுகளை சற்று அளவுடன் வைத்துக்கொள்வது உடலுக்கு நன்மையை தரும். மேலும் அந்த இடத்தில் ஏற்படும் உராய்வு மூலம் வெளியாகும் ரத்தம் முதல் ரத்தமாகும். அதனால் ரத்தச் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும்.

காயம் ஆறும் வரை கூடாது

ஒருவேளை இந்த இழைப் பகுதியில் காயம் ஏற்பட்டு விந்து வெளியாகும் போது, விந்து தனியாகவும் ரத்தம் தனியாகவும் இருக்கும். ஒருசில சமயங்களில் இவை இரண்டும் கலந்து கூட வரலாம். அதனால் இழையில் ஏற்பட்ட காயம் வரை சுய இன்பமோ அல்லது பாலியல் செயல்பாடுகளோ வேண்டாம். இதை நீங்கள் மீறும் பட்சத்தில் பல்வேறு நோய்த் தொற்று பாதிப்பு அதிகரிக்கலாம். எனினும் இதுதவிர இந்த ரத்தக் கசிவில் வேறு எந்த பிரச்னையும் கிடையாது.

உடலுறவின் போது மனச்சோர்வுக்கு ஏற்படுகிறதா? இதைப்படிங்க முதல்ல..!!

கருஞ்சிவப்பு ரத்தம்

ஒருசிலருக்கு விந்து வெளியாகும் போது, அதனுடன் வரும் ரத்தம் கருஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும். இதை கண்டு பலரும் அச்சமடைவதுண்டு. ஆனால் அதில் பயப்படுவதற்கு ஒன்றுமே கிடையாது. விந்து உருவாகி, அது சேமிக்கப்பட்டு வரக்கூடிய திரவம் கிடையாது. விந்துப்பை, புராஸ்ட்டேட் சுரப்பி மற்றும் செமினல் வெஸிக்கள் சுரப்பி ஆகியவற்றில் இருந்து விந்து வெளிவருகிறது. அப்போது அது புது ரத்தமாக இருக்காது. கருஞ்சிவப்பாக தான் இருக்கும். அதனால் எந்த அச்சமும் அடைய வேண்டாம்.

மருத்துவரை அணுகுவது தான் தீர்வு

ஆணுறுப்பில் இருந்து ரத்தம் வெளியேறுவது தெரிந்தால், உடனடியாக மருத்துவரை அணுகவும். இது அச்சம் தவிர்ப்பதற்காக மட்டுமே சொல்லப்படுகிறது. உங்களுக்கு கவலை இல்லாமல் போய்விட்டாலும், உங்களுடைய மனைவி அல்லது காதலிக்கு இது மிகப்பெரிய அச்சத்தை தரும். அதற்காக உடனடியாக மருத்துவரை அணுகி தீர்வு பெறுவது நல்ல முயற்சியாகும். 

click me!