பொதுவான தளத்தில் பாலியல் மீதான இன்பம் குறைவது சாதாரண பிரச்னையாக தோன்றலாம். ஆனால் மருத்துவத் துறையில் இதை ஹைப்ரோ ஆக்டிவ் செக்ஸுவல் டிசையர் பாதிப்பு என்று குறிப்பிடப்படுகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடலுறவு மீது எந்த விருப்பமும் இருக்காது.
பொதுவான தளத்தில் பாலியல் மீதான இன்பம் குறைவது சாதாரண பிரச்னையாக தோன்றலாம். ஆனால் மருத்துவத் துறையில் இதை ஹைப்ரோ ஆக்டிவ் செக்ஸுவல் டிசையர் பாதிப்பு என்று குறிப்பிடப்படுகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடலுறவு மீது எந்த விருப்பமும் இருக்காது. இதை கவனிக்காமல் விட்டுவிட்டால் வாழ்நாள் முழுவதும் இது தொடரலாம். அதனால் அந்த நபரின் மனம் மற்றும் உடல் நலன் பாதிக்கப்படும். பொதுவாக இந்த பிரச்னை பெண்களிடையே அதிகம் காணப்படுகிறது.
பெண்களுக்கான உடலுறவுத் தேவை என்பது உடல் மற்றும் உணர்ச்சியுடன் தொடர்புக் கொண்டது. இரண்டும் பொதுவான அளவில் திருப்தி அடையும் போது, பாலியல் மீதான ஆசை தொடரும். ஒருவேளை மாதவிடாய் சுழற்சிகள், ஹார்மோன் கருத்தடை மருந்துகள், பிரசவத்திற்குப் பிறகான நிலைகள், பாலூட்டுதல், ஓஃபோரெக்டோமி, கருப்பை நீக்கம், மாதவிடாய் நின்ற நிலைகள் உள்ளிட்ட காரணங்களால் பெண்களுக்குரிய பாலியல் உந்துதல் பாதிக்கின்றன.
undefined
இதுதொடர்பான தரவுகளை ஆராயும் போது, பத்தில் ஒரு பெண்ணுக்கு பாலியல் உடலுறவு மீதான விருப்பம் குறைவது தெரியவந்துள்ளது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த பிரச்னை குறித்த விழிப்புணர்வு பலரிடையே இல்லை. பெண்களும் தங்கள் பாலியல் ஆர்வத்தைப் பற்றி வெளியில் பேச மறுக்கின்றனர். மேலும் பல வீடுகளில் உடலுறவு மற்றும் நெருக்கம் ஆகியவை ஆண் ஆதிக்கச் செயலாகவே பார்க்கப்படுகின்றன.
இருப்பினும், ஆணின் ஆரோக்கியத்தைப் போலவே ஒரு பெண்ணின் ஆரோக்கியத்திற்கும் உடலுறவு மிகவும் அவசியம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். ஒரு பெண்ணுக்கு ஏற்படும் சிறப்பான செக்ஸ் டிரைவ் காரணமாக, உடல்நலம் மேலும் மேம்படும் என்பதே உண்மை. பெண்களில் பாலியல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதற்கான முக்கியமான காரணம் மன அழுத்தம். தொழில்முறை மன அழுத்தம், உறவுகளில் பிரச்சினைகள், குடும்பத்தில் பிரச்சினைகள் மற்றும் பணப் பிரச்சினைகள் போன்ற வடிவங்கள் பெண்களை தான் அதிகம் பாதிக்கிறது.
உடலுறவின் போது மனச்சோர்வுக்கு ஏற்படுகிறதா? இதைப்படிங்க முதல்ல..!!
ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக பல பெண்கள் குறைந்த செக்ஸ் டிரைவை எதிர்கொள்கின்றனர். துத்தநாகம், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் டி, வைட்டமின் பி12 மற்றும் மெக்னீசியம் போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்களின் குறைபாடு பெண்களில் லிபிடோவை பாதிப்பதும் சற்று கவனிக்க வேண்டியதாகும். மனநிலைப் பாதிப்புகளும் பாலியல் தூண்டுதலை தடுக்கின்றன.
மனச்சோர்வு ஏற்படும் போது உரிய தீர்வை காண வேண்டும். மனத்திற்குள் நேர்மறையான எண்ணங்களை வளர்த்திட வேண்டும். உடலை ஆரோக்கியமாகவும் இயக்கத்துடனும் வைத்திருப்பது மிகவும் முக்கியம். மேலும் உங்கள் துணையுடன் எப்போதும் இணைந்திருப்பது மற்றும் வெளிப்படையான உறவை கடைப்பிடிப்பது போன்றவை பாலியல் நெருக்கத்தை அதிகரிக்கும்.