உங்கள் துணையிடம் இந்த அறிகுறிகள் இருக்கா? அப்ப அவர் உங்களை மதிக்கவில்லை என்று அர்த்தம்..

By Asianet Tamil  |  First Published Jun 28, 2024, 6:40 PM IST

உங்கள் துணை உங்களை மதிக்கவில்லை என்பதை குறிக்கும் சில அறிகுறிகள் உள்ளன. அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.


அவமரியாதை என்பது உறவுகளில் பிணைப்பை வலுவிழக்க செய்யும். திருமண உறவோ அல்லது காதல் உறவை அதை நீண்ட காலம் உயிர்ப்புடன் வைத்திருக்க பரஸ்பர மரியாதை முக்கியம். தம்பதிகளில் ஒருவர் மற்றவர் தங்களை மதிக்கவில்லை என்று கண்டறிந்தால், அது நிச்சயமாக உறவில் மோதலுக்கு வழிவகுக்கும், உறவை முறித்துக் கொள்ள ஒரு காரணமாகிறது. இருப்பினும் சில நேரங்கள் தங்கள் துணை தங்களை மதிக்கிறாரா இல்லையா என்பதைப் புரிந்து கொள்வதில் சிலருக்கு குழப்பம் ஏற்படலாம். உங்கள் துணை உங்களை மதிக்கவில்லை என்பதை குறிக்கும் சில அறிகுறிகள் உள்ளன. அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

உங்கள் எல்லைகளை புறக்கணிப்பது

Tap to resize

Latest Videos

undefined

எந்த உறவாக இருந்தாலும், ஒருவருக்கொருவர் எல்லைகளை மதிக்க வேண்டியது அவசியம். தங்களின் துணை தனிப்பட்ட இடத்தை ஆக்கிரமித்து, செயல்பட்டால் அது உங்களை மதிப்பதில்லை என்பதை குறிக்கும் அறிகுறியாகும். உங்கள் ஒப்புதல் இல்லாமல் உடலுறவு போன்ற செயல்களில் ஈடுபடுவது இதில் முக்கியமான அறிகுறி. இதன் மூலம் உங்கள் துணை உங்களின் எல்லையை புறக்கணிக்கிறாரா என்பதை அடையாளம் காண முடியும்.

உங்கள் நேரத்திற்கு மதிப்பு இருக்காது

உங்கள் துணைக்கு ஏற்றார் போல, நீங்கள் எப்போதும் உங்கள் திட்டங்களை மாற்றுகிறீர்களா? உங்கள் துணை உங்களுக்கு எது முக்கியம் என்பதில் அக்கறை காட்டவில்லையா? உங்களுக்கு வேறு சில பணிகள் உள்ளன என்று தெரிந்தாலும் அவர்கள் உங்களை அடிக்கடி காத்திருக்க வைக்கிறார்களா? ஆம். எனில், இவை அனைத்தும் அவமரியாதையின் அடையாளங்கள். எனவே நீங்கள் கவனமாக இருப்பது முக்கியம்.

நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் முன் மாறுபட்ட நடத்தை

உங்கள் துணை உங்கள் நண்பர்களையும் குடும்பத்தினரையும் சந்திக்க விரும்பவில்லை என்றால், அவர்கள் உங்களை உண்மையில் மதிக்கவில்லை என்று அர்த்தம். உங்கள் குடும்பத்தினர் அல்லது நண்பர்களுடன் இருக்கும் போது உங்கள் துணையின் நடத்தையில் திடீர் மாற்றம் மற்றும் பாதுகாப்பின்மை இருந்தால் அது முக்கியமான அறிகுறி. அவர்கள் உங்களை மதிக்கவில்லை என்பது தெளிவாகும்.

உங்களுக்கு முன்னுரிமை கொடுக்கமாட்டார்.

உங்கள் துணை வெளியே செல்லும் போதெல்லாம் அவர்களின் அழைப்புகள் மற்றும் மெசேஜ்க்காக நீங்கள் காத்திருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் அல்லது அவர்களின் அழைப்புகாக தொடர்ந்து காத்திருந்தால். அது ஒரு பெரிய சிவப்புக் கொடி. உங்களை உண்மையிலேயே மதிக்கும் ஒருவர், பிஸியாக இருந்தால், உடனடியாக உங்களைத் திரும்ப அழைப்பார் அல்லது உங்களுக்குத் தெரிவிக்கும் செய்தியை அனுப்புவார். எதுவாக இருந்தாலும் அவர்கள் உங்களுக்கு முன்னுரிமை கொடுப்பார்கள்.

உங்களிடம் பொய் சொல்வது

எந்தவொரு உறவிலும் பொய் என்பது சிக்கலையே ஏற்படுத்து. இது மிகவும் அவமரியாதையான நடத்தையாகும். இது உறவின் அழிவுக்கே வழிவகுக்கும். அவர் உங்களுக்கு முன்னுரிமை கொடுக்கவில்லை அல்லது மிகவும் குறைவான முன்னுரிமை கொடுக்கிறார் என்று அர்த்தம். எனவே இந்த அறிகுறிகள் இருந்தால் ஆரம்பத்திலேயே இதுகுறித்து உங்கள் துணையிடம் வெளிப்படையாக பேசிவிடுவது நல்லது. 

click me!