ஆண்களின் இந்த மோசமான பழக்கங்களால் குழந்தை பிறக்க வாய்ப்பு கம்மி!!

By Asianet Tamil  |  First Published Feb 15, 2024, 10:00 PM IST

இந்த மோசமான பழக்கங்களைத் தவிர்ப்பதன் மூலம் ஆண்கள் தங்கள் கருவுறுதல் பிரச்சனையை சுலபமாக சரி செய்து கொள்ளலாம். அது என்னென்ன பழக்கங்கள் தெரியுமா?


ஆரோக்கியம் என்று நாம் பின்பற்றும் பல பழக்கவழக்கங்கள் நம் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அது நமது உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி, செக்ஸ் வாழ்க்கையும் ரொம்பவே பாதிக்கப்படும். ஆண்களுக்கு வரும்போது அவர்களின் பல மோசமான நடைமுறைகள் இதற்கு காரணமாகின்றன. உட்கார்ந்த வாழ்க்கை முறையும் பாலியல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். தற்போது இத்தொகுப்பில், ஆண்களின் விந்தணுக்களின் தரம் குறைவதற்கும், ஆண்களின் கருவுறுதல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் சில மோசமான பழக்கங்களைப் பற்றி விவாதிப்போம்...

உட்கார்ந்த வாழ்க்கை முறை:
நல்ல உடலுறவு வாழ்வதற்கு ஆண்கள் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்று ஆராய்ச்சி கூறுகிறது. இது மனதிற்கு புதிய உற்சாகத்தை தருவதோடு மட்டுமல்லாமல், பாலுணர்வையும், ஆர்வத்தையும், ஆற்றலையும் அதிகரிக்க பெரிதும் உதவுகிறது. ஆனால், உட்கார்ந்த வாழ்க்கை முறை கொண்ட ஆண்களுக்கு விறைப்புத் திறன் குறைபாடு ஏற்படுவது பொதுவானது.

Tap to resize

Latest Videos

undefined

புகைபிடிக்கும் பழக்கம்:
புகைபிடித்தல் உடல் நலத்திற்கு கேடு என்று கூறப்படுகிறது. ஒரு ஆய்வில், புகைபிடிக்கும் பல ஆண்கள் விறைப்புத்தன்மையை எதிர்கொள்கிறார்கள் என்று கூறுகிறது. மேலும் அந்த ஆய்வில், புகைப்பிடிக்காத ஆண்களை விட, புகைப்பிடிக்கும் ஆண்களுக்குதான் அதிக பாலியல் பிரச்சனைகள் இருப்பது தெரிய வந்துள்ளது.

தூக்கமின்மை பிரச்சனை:
ஆண்கள் சரியாக தூங்கவில்லை என்றால், டெஸ்டோஸ்டிரோன், செக்ஸ் ஹார்மோன் அளவு குறையும். இது உடலின் தசைகள் மற்றும் எலும்புகளின் அடர்த்தியைக் குறைத்து, சோர்வை ஏற்படுத்துகிறது. இது இயற்கையாகவே ஆண்குறியின் ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

குறைவாக உடலுறவு கொள்வது:
நிபுணர்கள் கூற்றுப்படி, வெவ்வேறு தம்பதிகளுக்கு செக்ஸ் வேறுபட்டது. சிலர் வாரத்திற்கு ஒரு முறைக்கு மேல் உடலுறவில் ஈடுபடுவார்கள். மற்றவர்கள் வாரத்திற்கு ஒரு முறை கூட ஈடுபட மாட்டார்கள்.
இதுபோன்ற சந்தர்ப்பங்களில், ஆண்கள் பெரும்பாலும் விறைப்புத்தன்மையை அனுபவிக்கிறார்கள். எனவே, இதைப் போக்க, வாரத்திற்கு மூன்று முறையாவது உடலுறவில் ஈடுபட வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

தர்பூசணி சாப்பிடுங்கள்:
தர்பூசணி பழத்தை ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. குறிப்பாக ஆண்களுக்கு, பாலியல் ஆரோக்கியத்தில் இதன் பங்கு மிக அதிகம் என்றே சொல்லலாம். தர்பூசணியில் சிட்ருலின் அர்ஜினைன் உள்ளது. இது நமது இரத்த நாளங்களை விரிவுபடுத்துகிறது. மேலும் இது ஆண்குறி உட்பட உடலின் அனைத்து பகுதிகளுக்கும் சிறந்த இரத்த ஓட்டத்திற்கு வழிவகுக்கிறது.

டிரான்ஸ் கொழுப்பு உணவுகளை சாப்பிட வேண்டாம்:
இது, ஆண்களின் விந்தணுக்களின் தரம் மற்றும் எண்ணிக்கை குறைவதற்கு வழிவகுக்கும் மற்றும்  பாலியல் வாழ்க்கையை மோசமாக்கும். ஆரோக்யமான விந்தணுவைப் பெற ஆண்கள் முடிந்தவரை இதுபோன்ற உணவுகளை  சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

டிஜிட்டல் ஸ்கிரீன் அதிகமாக பார்க்க வேண்டாம்: 
இப்போதெல்லாம் மக்கள் உட்கார்ந்த வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பதால் டிஜிட்டல் திரைகளில் அதிக நேரம் செலவிடுகிறார்கள். வாரத்தில் 20 மணி நேரத்திற்கும் மேலாக மொபைல் மற்றும் லேப்டாப் டிவி பார்க்கும் ஆண்களுக்கு குழந்தை பிறக்கும் வாய்ப்பு குறைவு என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, அப்படிப்பட்ட ஆண்களில் 44% பேருக்கு விந்தணுக் குறைபாடு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

click me!