இந்த காலத்தில் சிலர் தங்கள் காதலன் அல்லது காதலியுடன் சண்டையிடும்போது சமூக வலைத்தளங்களில் டிபிகளை நீக்குகிறார்கள். ஆனால், இது உறவில் எந்த சாதகமான விளைவையும் ஏற்படுத்தாது.
எந்தவொரு உறவிலும் வாக்குவாதம் தவிர்க்க முடியாதது. அதுவும் திருமணம் அல்லது காதல் போன்ற உறவில் அது எளிதான விஷயம் அல்ல. அதைக் கடந்து வெற்றிகரமான உறவுக்கு இருவரும் ஒருவருக்கொருவர் நேரம் ஒதுக்க வேண்டும். ஒருவருக்கொருவர் உணர்வுகளைப் புரிந்துகொள்ள வேண்டும். அப்போது அவர்களுக்குள் சண்டை இருக்காது.
பெரும்பாலும் தவறான புரிதல்கள் தம்பதிகளிடையே சண்டைக்கு வழிவகுக்கும். இதுபோன்ற சூழ்நிலைகளில், சிலர் தங்கள் சமூக வலைத்தளப் பக்கங்களில் இருந்து புகைப்படங்கள் மற்றும் டிபிகளை அகற்றுகிறார்கள். இப்படி புகைப்படங்கள் அல்லது டிபிகளை நீக்குவது உறவை நீண்டகாலம் பாதிக்கக்கூடும் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
இந்த காலத்தில் சிலர் தங்கள் காதலன் அல்லது காதலியுடன் சண்டையிடும்போது சமூக வலைத்தளங்களில் டிபிகளை நீக்குகிறார்கள். ஆனால், இது உறவில் எந்த சாதகமான விளைவையும் ஏற்படுத்தாது. உறவை மீண்டும் இணக்கமாகக் கொண்டு செல்ல விரும்பினால், வேறு வழியில் முயற்சி செய்ய வேண்டும்.
அஜித்துக்கே டஃப் கொடுக்கும் அருண் விஜய்! 30 வருட சினிமா வாழ்க்கையில் சேர்த்த சொத்து இதுதான்!
சண்டை வந்த பிறகு டிபியையும் நீக்கிவது சரியான செயல் அல்ல. அவ்வாறு செய்வது உங்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதத்தை அதிகரிக்கச் செய்யவே வாய்ப்பு உள்ளது. மோதலைத் தீர்க்க விரும்பினால், ஒருவருக்கொருவர் உணர்வுகளைப் புரிந்துகொள்வது அவசியம்.
தகராறைத் தீர்க்க, சர்ச்சைக்கான மூல காரணத்தைக் கண்டறிய முயற்சி செய்ய வேண்டும். காரணத்தைக் கண்டறிந்ததும், அதை சரிசெய்ய ஒரு தீர்வையும் யோசிக்க வேண்டும். இப்படிச் செய்வதால் இதேபோன்ற மனஸ்தாபம் மீண்டும் ஏற்பாடுவதையும் தவிர்க்கலாம்.
நீண்ட நாட்களாக இருவருக்குள்ளும் தகராறு இருந்தால், இருவரும் ஒன்றாக அமர்ந்து சமாதானமாக பேசி தீர்த்துக்கொள்ள முயற்சி எடுக்கலாம். இருவருக்கும் இடையேயான உறவில் மூன்றாவது நபர் தலையிட அனுமதிக்காமல் இருப்பது நல்லது. தவறுகளைத் திருத்திக்கொள்ளும் போது உறவில் பிணைப்பு அதிகரிப்பதையும் உணரலாம்.
கருப்பு கலர் எப்புடி இருக்கு? ஏடாகூடமாக போஸ் கொடுக்கும் கொழுக் மொழுக் நடிகை பூனம் பாஜ்வா!