2 கோடி ரூபாய்க்கு வீடு, 3 கோடி ரூபாய்க்கு கரும்புத் தோட்டம், 2 சொகுசு கார்... இவ்வளவையும் தன்னுடைய மருமகள் பிரீத்தாவுக்காகப் பரிசாகக் கொடுத்திருக்கிறார் மாமனார் ராஜா.
2 கோடி ரூபாய்க்கு வீடு, 3 கோடி ரூபாய்க்கு கரும்புத் தோட்டம், 2 சொகுசு கார்... இவ்வளவையும் தன்னுடைய மருமகளுக்காக மாமனார் பரிசாகக் கொடுத்திருக்கிறார் என்றால் நம்பமுடியுதா? தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய இந்த மாமனாரும் மருமகளும் இப்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகியுள்ளனர்.
மாமனார் மருமகள் உறவு குறித்து தனியார் தொலைகாட்சி ஒன்று சமீபத்தில் ஒரு விவாத நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய ஒரு மருமகள் தன்னுடைய மாமனார் எனக்காக 2 கோடி ரூபாய்க்கு வீடு வாங்கிக் கொடுத்திருக்கிறார், 2 கார் வாங்கித் தந்திருக்கிறார் என்று கூறினார்.
அவரது பேச்சு, அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் இப்படியும் ஒரு மாமனார் இருக்காரா என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. டிவியில் ஒளிபரப்பானவுடன் இந்தப் பெண்ணின் பேச்சு வைரலாகிவிட்டது. உடனே ஒரு யூடியூப் சேனல் அந்த மாமனார் மருமகளைத் தேடிக் கண்டுபிடித்து பேட்டி எடுத்துள்ளது.
ஒரு வாட்ச்க்கு இத்தனை கோடியா! வாயைப் பிளக்க வைக்கும் ஆனந்த் அம்பானியின் காஸ்ட்லி வாட்ச்!
அதில், மாமனார் ராஜாவும் அவரது மருமகள் பிரீத்தாவும் தங்கள் குடும்பத்தைப் பற்றி வெளிப்படையாகப் பேசியுள்ளனர். "என்னைப் பெண் பார்க்க வரும்போதே 10-15 பவுன் நகை போட்டிருப்பாங்க. கல்யாணம் ஆனதுக்கு அப்பறம் ஒரு வீடு, ஒரு தோட்டம், ஒரு வீட்டு மனை, கார், நகைகள், பேங்க் அக்கவுண்ட்ல பணம் போடுறது எல்லாமே செஞ்சுருக்காங்க" என்று பெரிய லிஸ்டே போடுகிறார் மருமகள் பிரீத்தா.
"நாம படுபட்டு சம்பாதிக்கிறது எல்லாம் பசங்களுக்கும், பேரம் பேத்திகளுக்கும் தானே. அதை நாம வெச்சுக்கிட்டு என்ன பண்ணப் போறோம்" என்று இயல்பாகச் சொல்கிறார் மாமனார் ராஜா. மாமனாராக இருந்தாலும் அப்பா பிரீத்தா அவரை அன்போடு அப்பா என்றுதான் கூப்பிடுகிறார். "ஏன்னா அப்படி பாத்துக்குறாங்க..." என்று க்யூட்டாக சொல்கிறார்.
"மகன் மகளுக்குச் செய்வது சாதாரண விஷயம். ஆனால் மருமகளுக்குச் செய்றது அப்படி இல்லையே... எனக்காக ஒவ்வொண்ணும் பார்த்து பார்த்து செய்வாங்க. என் முகத்தைப் பார்த்தே எனக்கு என்ன தேவைன்னு புரிஞ்சுக்குவாங்க" என்று தங்களுக்குள் இருக்கும் பாசப் பிணைப்பைப் பகிர்ந்துகொள்கிறார் பிரீத்தா.
சமூக ஆர்வலர் மேதா பட்கருக்கு 5 மாதங்கள் சிறை தண்டனை; டெல்லி ஆளுநர் தொடர்ந்து வழக்கில் தீர்ப்பு!