ஆணுறுப்பை வளைக்கச் செய்யும் பெய்ரோனி என்கிற பாதிப்பால் பல ஆண்கள் அவதிப்படுகின்றனர். இது ஆண்குறியை வளைத்துவிடும் மற்றும் விறைப்புத்தன்மைக்கு வழிவகுக்கிறது.
வெகுசிலர் மட்டுமே தங்களுடைய பாலியல் வாழ்க்கை குறித்து வெளிப்படையாக பேசுகின்றனர். அப்படி தகவல்கள் ஏதாவது, வெளியேவந்தாலும் சம்மந்தப்பட்ட ஆணை தவறாக பார்க்கும் எண்ணம் பலரிடையே நிலவுகிறது. ஆனால் இதுபோன்ற விஷயங்களை பேசாமல் இருப்பதும் மற்றும் பேசுவதை தவறு என்று சுட்டிக்காட்டுவதும் பல்வேறு உடல்நலன் சார்ந்த பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது. இன்றையகாலத்தில் பல அரிதான நோய்களால் பாதிக்கப்படும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதை பார்க்க முடிகிறது. இதனால் அவர்களுடைய உடல்நலன் மட்டுமின்றி, மனநலனும் பாதிக்கப்படுகிறது. அப்படிப்பட்ட நோய்களில் ஒன்றுதான் பெய்ரோனி. இதுகுறித்து விரிவான தகவல்களை அறிந்துகொள்வோம்.
பெய்ரோனி நோய் என்றால் என்ன?
பெய்ரோனி நோய் ஆண்குறியில் வளரும் நார்ச்சத்து வடு திசுக்களால் ஏற்படுகிறது. இது பிளேக் என்றும் அழைக்கப்படுகிறது. இந்நோயை ஏற்படுத்தும் கிருமி, ஆண்குறியிலேயே வளரும் தன்மை கொண்டது. இதனால் ஆண்குறி வளைந்துகொண்டே வரும். மேலும் இதனால் ஆண்குறி விறைப்புத்தன்மை அடைவது பிரச்னையாகும். இது ஆண்களுக்கு ஏற்படும் அரிதான பாதிப்பாக கண்டறியப்பட்டுள்ளது.
யாரெல்லாம் பாதிக்கப்படுவார்கள்?
இதுதொடர்பாக அமெரிக்காவில் ஒரு விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி பதின் பருவத்தைச் சேர்ந்த 8 முதல் 10 சதவீத ஆண்களும், 40 வயதுக்குட்பட்ட ஆண்களில் 0.5 சதவீதத்தினரும் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த அரிய நோய் பல வழிகளில் ஆண்களை கவலையடையச் செய்கிறது. பெய்ரோனியின் நோயாளிகளில் பாதி பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தற்கொலைகளும் அதிகரித்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.
நோயின் அறிகுறிகள் என்ன?
பெய்ரோனி நோயால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு ஆண்குறியின் முன்பக்கம் வளையத் தொடங்கும். அதை தவிர,ஆண்குறி தோலின் கீழ் வடு திசு உருவாக்கம், விறைப்புத்தன்மை, ஆண்குறி சுருக்கம், ஆண்குறி வலி போன்றவற்றில் வேதனை உருவாகும். இந்நோயால் பாதிக்கப்பட்ட ஆண்கள் உடலுறவில் ஈடுபடும் போது வலி ஏற்படும். அடிக்கடி செக்ஸில் ஈடுபடுவது, தடகள விளையாட்டுக்களில் ஈடுபடுவது மற்றும் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள் போன்றவற்றால் ஆண்குறி சேதமடைந்து, இதுபோன்ற பிரச்னை ஏற்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
முப்பது வயதை கடந்தவர்கள் அடிக்கடி சாப்பிட வேண்டிய உணவுகள்..!!
இதை எப்படி கண்டறியலாம்?
ஆணுகுறியில் ஏதேனும் காயம் ஏற்பட்டால், அதை கவனிக்காமல் விட்டுவிடும் போது பெய்ரோனி தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. பரம்பரை பின்னணியும் இந்நோய்க்கு முக்கிய காரணியாக உள்ளது. அதாவது உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் இருந்தால்.. உங்களுக்கும் வர வாய்ப்பு உள்ளது. இணைப்பு திசு கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்களும் இந்த நோயால் பாதிக்கப்படலாம்.
இதற்கான சிகிச்சை முறைகள் எப்படி?
பெய்ரோனி நோயின் அறிகுறிகள் தோன்றினால், உடனடியாக மருத்துவரை அணுகவும். மேலும், உடலுறவில் ஈடுபடும் போது வலி, விறைப்புத்தன்மை குறைபாடு, பாலியல் செயல்திறன் பற்றிய கவலை, மன அழுத்தம், கருவுறுதல் பிரச்சனைகள் அல்லது ஆண்குறி வலி போன்ற பிரச்சனைகளை நீங்கள் சந்தித்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. ஆரம்பத்தில் இது சாதாரணமாக தோன்றினாலும், முடிவில் மன அழுத்தம் சார்ந்த பிரச்னை ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.