எட்டு மனைவிகளுடன் டாட்டூ போடும் கலைஞர் ஒரே வீட்டில் மகிழ்ச்சியாக வாழுகிறார்.. இந்த இல்லற வாழ்க்கையின் ரகசியம்...அவரே பகிர்ந்து கொள்கிறார்.
வீட்டில் ஒரு மனைவி வைத்திருப்பவர்களே, சமாளிக்க முடியாமல் திணருவதாக கூறி வரும் காலத்தில், எட்டு மனைவிகளுடன் டாட்டூ கலைஞர் (tattoo artist) ஒரே வீட்டில் மகிழ்ச்சியாக வாழும் கதை கேட்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தாய்லாந்தை சேர்ந்த டாட்டூ கலைஞர் ஓங் டாம் சோரோட். இவர் பிரபல தாய்லாந்து நகைச்சுவை நடிகருடனான நேர்காணலின் மூலம் கவனம் ஈர்க்கப்பட்டார்.
அதில் இவர், எட்டு இளம் பெண்களை திருமணம் செய்து மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்தி வருவதாக பகிர்ந்திருப்பார். தன்னுடைய மனைவிகளை சமமாக நேசிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதெப்படி சார் நடக்கும்? நிச்சயமா நடக்கும் என அதன் ரகசியங்களை பகிர்ந்து கொள்கிறார், ஓங் டாம் சோரோட்.
காதலில் விழுந்த கணம்
இவர் தன்னுடைய மனைவிகளை நண்பர்கள், பார்ட்டிகள், சமூக வலைதளங்கள் உள்பட வெவ்வேறு வழிகளில் சந்தித்துள்ளார். இவர்களும் அவரைப் பற்றி தெரிந்து கொண்டு அதன் பின்னர் அவரை விரும்பி திருமணம் செய்து கொண்டுள்ளனர். நகோம் பத்தம் மகாணாத்தில் வசிக்கும் ஓங் டாம் சோரோட்டிற்கு 1 குழந்தை உள்ளார். இவர் தன்னுடைய மனைவிகளை பாகுபாடின்றி நேசிக்கிறார். அதனாலே குடும்பத்தில் சண்டைகளே வருவதில்லையாம். தன்னுடைய யூடியூப் சேனலில் 8 மனைவிகளையும் அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். அந்த வீடியோ 3 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.
காதல் டூ கல்யாணம்
தங்களுடைய கணவரை எட்டு பேரும் விட்டுக் கொடுக்காமல் பேசுகின்றனர். ஓங் டாம் சோரோட் அழகானவர் மட்டுமில்லை, அன்பானவரும் அக்கறையானவரும் கூட என மனைவிகள் புகழாரம் சூட்டியுள்ளனர். ஓங் டாம் சோரோட் தன்னுடைய முதல் மனைவி நோங் ஸ்ப்ரைட் என்பவரை நண்பரின் திருமணத்தில் சந்தித்துள்ளார். பார்த்த கணமே காதலில் விழுந்துவிட்டாராம்.
இரண்டாவது மனைவியை மார்க்கெட்டிலும், மூன்றாவது மனைவியை மருத்துவமனையிலும் சந்தித்துள்ளார். நான்காவது, ஐந்தாவது, ஆறாவது மனைவிகளை சோசியல் மீடியாவில் கண்டு பழகியுள்ளார். 7ஆவது மனைவியை கோயிலுக்கு செல்லும்போதும், 8ஆவது மனைவியை மற்ற மனைவிகளுடன் விடுமுறையை கழிக்க செல்லும்போதும் சந்தித்துள்ளார். ஒவ்வொரு மனைவியையும் பார்த்ததும் காதல் வந்தாலும், பேசி பழகி திருமணம் செய்துள்ளார்.
படுக்கையறை ரகசியம்
சோரோட்டின் இரண்டு மனைவிகள் தற்போது கர்ப்பமாக இருக்கின்றனர். முதல் மனைவிக்கும் இவருக்கும் ஒரு மகன் இருக்கிறார். ஒவ்வொருவரும் தங்கள் கணவருடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்ள தங்கள் முறை எப்போது வரும் என பொறுமையாக காத்திருக்கிறார்கள். ஒரு அறையில் இரண்டு பேர் வீதம் எட்டு மனைவிகளும் நான்கு படுக்கையறைகளில் தூங்குகிறார்கள். கணவரோடு ஒவ்வொரு நாளும் ஒருவர் படுக்கையை பகிர்ந்து கொள்கின்றனர். இதனால் ஒருவருக்கொருவர் எந்த பிரச்சனையும் இதுவரை இல்லை என ஓங் கூறுகிறார்.
குடும்ப செலவு..
சோசியல் மீடியாவில் பிரபலமாக இருக்கும் ஓங் டாம், யூடியூப் கணக்குகளில் அவ்வப்போது தகவல்களை வெளியிடுவார். அதில் தன்னை பணக்காரர் என மக்கள் நினைக்கிறார்கள் என்றும் ஆனால் அது உண்மையில்லை என்றும் கூறியுள்ளார். தன்னுடைய குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரும் வெவ்வேறு வேலைகளை செய்து பணம் ஈட்டுகின்றனர். வீட்டு வேலைகள் செய்வது, கைவினை பொருள்கள் தயாரிப்பது, அழகுசாதனப் பொருட்கள் விற்பது போன்றவற்றின் அவருடைய மனைவிகள் மூலம் பணத்தை சம்பாதிக்கிறார்கள். அதில் தான் குடும்பம் பராமரிக்கப்படுகிறது என்கிறார் ஓங் டாம். கொண்டாட்டமான வாழ்க்கைக்கு கணவனும், மனைவியும் புரிந்து கொண்டால் போதும்!
இதையும் படிங்க: சொல்லவே கூச்சப்படுற செக்ஸ் கனவுகள்... உங்களுக்கு வரும் அந்தக் கனவுகளுக்கு அர்த்தம் தெரியுமா?
இதையும் படிங்க: இனிக்க இனிக்க தாம்பத்தியம்! கொஞ்சம் தேன் போதும்.. இப்படி செய்தால் பகல்ல கூட உங்க ஞாபகம் இருக்கும்!!