உறவு, பணி, உணர்வு உள்ளிட்ட விஷயங்களில் ஆண்களுக்கும் பாதுகாப்பின்மை சார்ந்த பிரச்னைகள் ஏற்படுகின்றன. ஆனால் அதை வெளியுலகத்துக்கு அவர்கள் காட்டிக்கொள்ள விரும்புவது இல்லை.
பாதுகாப்பின்மையால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் மட்டுமல்ல. அவர்களை போல ஆண்களிடமும் தங்களுடைய வேலை, எதிர்கால வாழ்க்கை குறித்து பாதுகாப்பின்மை நிலவுகிறது. பெண்களின் உணர்வுகள் அவர்களுக்குள் இருக்கும் பாதுகாப்பின்மை சார்ந்த உணர்வுகளை வெளிப்படுத்தி விடுவார்கள். ஆண்கள் அப்படிப்பட்ட உணர்வுகளை வெளிப்படுத்த முடியாத சூழ்நிலைக்கு ஆளாகிறார்கள். இது கடுமையான சுயமரியாதை மற்றும் நம்பிக்கை சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்று அவர்கள் எண்ணுகின்றனர். எனவே, ஆண்களுக்கு இருக்கும் சில பொதுவான பாதுகாப்பின்மை சார்ந்த பிரச்னைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. தொடர்ந்து பார்க்கலாம்.
உறவுகள்
துரோகம் ஒரு மனிதனின் வாழ்க்கை மற்றும் உறவின் ஒரு பகுதியாக இருந்தால், பிறர் மீது நம்பிக்கையை உருவாக்கிக்கொள்வது ஆண்களுக்கு தலைவலியாக அமைந்துவிடுகிறது. குறிப்பாக அந்த துரோகத்தை செய்தவர் தன்னுடைய குடும்பத்தினர், மனைவி அல்லது நண்பர்களாக இருந்தால், நம்பிக்கை சிக்கல்களைச் சமாளிப்பது அவர்களுக்கு கடினமாகி விடுகிறது. இதனால் அவர்களுக்குள் பாதுகாப்பின்மை உணர்வு எழுகிறது. இது சில நேரம் ஆண்களுக்கு தகாத பழக்கவழக்கங்கள் ஏற்படவும் காரணமாக அமைகிறது.
உடல் தோற்றம்
ஆண்கள் பல உடல் உருவ பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். ஒரு ஆண் உடல் பருமனாக இருந்துவிட்டால், அவன் இன்னும் கொஞ்ச நாட்களில் செத்துவிடுவான் என்கிற அளவில் பார்க்கப்படுகின்றனர். இதனால் தங்களைச் சுற்றியிருக்கும் ஆண்களின் தோற்றம், உருவம் மற்றும் உடலமைப்பு ஆகியவற்றுடன் அதிகம் ஒப்பிடப்படுகின்றனர். இது எல்லா நேரங்களிலும் தங்களை அழகாகக் காட்ட வேண்டும் என்கிற அழுத்தத்தை அவர்களிடையே உருவாக்கிறது. இதுபோன்ற தாழ்வு மனப்பான்மை, ஆண்களிடம் பாதுகாப்புமின்மை உருவாக்கிறது.
வேலை பாதுகாப்பு
நிறுவனங்கள் மிகவும் எதிர்பாராத வகையில் ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் இந்த போட்டி யுகத்தில் ஆண்கள் தங்கள் வேலையைப் பற்றி மிகவும் கவலைப்படுகிறார்கள். வேலை பாதுகாப்பு என்பது ஒரு மனிதனின் வாழ்க்கையின் மிக முக்கியமான அம்சமாகும், ஏனெனில் ஒரு மனிதனின் அடையாளம் பெரும்பாலும் அவனது வேலை மற்றும் வாழ்க்கையுடன் தொடர்புப்படுத்தி பார்க்கப்படுகிறது. நாம் தொடர்ந்து வேலையில் நீடிக்க வேண்டும் என்கிற் அழுத்தத்தால் ஆண்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர். இது அவர்களுக்குள் பாதுகாப்பின்மையை ஏற்படுத்திவிடுகிறது.
முன்னாள் காதலர் அடிக்கடி உங்கள் கனவுகளில் வருகிறாரா..? காரணம் இதுதான்..!!
உணர்வுகளை வெளிகாட்டுதல்
பல ஆண்கள் தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்துவதில் நிறைய சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இப்படியொரு பிரச்னையால் தான் அவதிப்படுவதாக தெரிந்துகொள்ளாத ஆண்கள் குற்ற உணர்ச்சிக்கு ஆளாக நேரிடுகிறது. மேலும் உணர்வு சார்ந்த பிரச்னையை எப்படி தீர்ப்பது என்று தெரியாமல், உணர்ச்சி நெருக்கம் புதிராக சில ஆண்களுக்கு மாறிவிடுகிறது. ஆனால் எதுவாக இருந்தாலும், அவர்கள் தங்கள் உணர்ச்சிகளைத் தீர்க்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் என்பது முக்கியம்.
எதிர்பார்ப்பு சார்ந்த போராட்டம்
தங்களைச் சுற்றியுள்ள உறவுகளின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய ஆண்கள் பெரியளவில் போராட வேண்டியதாக உள்ளது. ஒருவேளை அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாமல் போனால், அது அவர்களின் மனசாட்சிக்கு பாரமாக மாறிவிடுகிறது. மேலும் வேண்டியவர்களுடைய எதிர்பார்ப்பில், தங்களுடைய தகுதியும் அடங்கியுள்ளதால் உள்ளமைந்த எண்ணம் ஆண்களுக்கு உள்ளது.