முன்னாள் காதலர் தொந்தரவு செய்கிறாரா? இந்த விஷயத்தில் கவனம் தேவை..!

By Kalai Selvi  |  First Published Apr 27, 2023, 12:17 PM IST

காதல் முறிவுக்கு பின் உங்கள் முன்னால் காதலன் அல்லது காதலி உங்களை தொந்தரவு செய்கிறாரா?  எப்படி? என்று தெரிந்து கொள்ளலாம்.


காதலர்கள் பிரிந்து செல்வது எப்போதும் உண்டு. எல்லா உறவுகளும் வாழ்நாள் உறவுகள் அல்ல. சில நேரங்களில் அது முடிவுக்கு வர வேண்டும். இது ஒரு வேதனையான செயல். சில உறவுகள் சில நேரங்களில் சோகமாக முடியும். தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாக ஒரு உறவுக்கு விடை கொடுக்க வேண்டியதிருக்கும். இருவரும் பேசி, கருத்து வேறுபாடுகளை நேர்மையாகப் பகிர்ந்து கொண்டு ஒரு  உறவை முறித்துக் கொள்வதுதான் சிறந்தது. ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கவில்லை என்று சண்டை போட்டுக்கொண்டு பிரிந்து செல்வதை விட தீவிர மரியாதையுடன் பிரிந்து செல்வது தான்  நல்லது. 

எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு உறவு முறிந்தால் அது ஆழமான வலியை கொடுக்கும். இதனால் பலர் காதல் உறவின் முடிவில் இருந்து மீள நீண்ட நேரம் எடுத்துக்கொள்கிறார்கள். சிலர் இந்த காதல் முறிவின் காரணமாக மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டுகின்றனர். மேலும் சிலர் அந்த காதல் முறிவுக்கு பின்னர் தனது முன்னால் காதலன் காதலியை பழிவாங்க ஏதாவது செய்ய வேண்டும் என்று பெரும்பாலான நினைப்பது உண்டு. அவ்வாறு உங்களது முன்னாள் காதலன் அல்லது காதலி, எவ்வாறெல்லாம் உங்களை பழிவாங்குவார்கள் மற்றும் அதிலிருந்து மீள்வது எப்படி என்று பார்க்கலாம்.

Latest Videos

undefined

தவறான செய்திகளை அனுப்புதல்:

காதல் முறிவுக்கு பின்னர் தனது முன்னால் காதலன் அல்லது காதலிக்கு  தவறான செய்திகளை அனுப்புவதன் மூலம் அவர்களை சித்திரவதை 
செய்கிறார்கள். இவ்வாறு செய்வதன் மூலம் நீங்கள் அவர்கள் மீது குற்றம் சாட்டலாம், கோபப்படலாம், சபிக்கலாம்.  மேலும் கடந்த கால தவறுகளைப் பற்றி பேசி அவர்களுக்கு புரிய வைக்க முயற்ச்சிக்கலாம்.

உங்களைப் பற்றி தவறான கருத்து:

உங்கள்  நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் உங்களுக்குத் தெரிந்த அனைவருக்கும் உங்களைப் பற்றிய மோசமான கருத்துகளை சொல்லலாம். எனவே இதுகுறித்து விழிப்புடன் இருங்கள்.

சமூக ஊடகங்கள்:

மோசமான மனம் அல்லது எதிர்மறை மனப்பான்மை கொண்ட முன்னாள் காதலர்கள் சமூக ஊடகங்களில் தங்கள் வலியை வெளிப்படுத்தும் வாய்ப்பு அதிகம். அவர்கள் தங்கள் கோபம் மற்றும் வலியை பகிரங்கப்படுத்துகிறார்கள். அவர்கள் உங்களை முடிந்தவரை மோசமாக நடத்த முயற்சிப்பார்கள். 

உறவைக் குறைத்தல்:

உங்கள் உறவு ஆரம்பத்திலிருந்தே மோசமான அடித்தளத்தில் இருப்பது வழக்கம். ஆரம்பத்தில் இருந்தே அதில் நம்பிக்கை இல்லை. மேலும் பொய் சொல்லி உறவை கெடுத்துக் கொண்டதாக குற்றம் சாட்டப்படுவீர்கள். அவர்கள் பாதிக்கப்பட்டவர்களாக காட்டிக் கொள்கிறார்கள். தொடக்கத்தில் கவனம் செலுத்தாவிட்டாலும் கடைசியில் வெடிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, எச்சரிக்கை அவசியம். 

இதையும் படிங்க: ஒரே கட்டிலில் 6 மனைவிகள்... இதற்காகவே 20 அடி படுக்கை செய்த மன்மதன்!! எத்தனை லட்சம் செலவு தெரியுமா?

பொய்கள்:

உங்கள் உறவின் முடிவுக்கு உங்களை நீங்களே குற்றம் சாட்டப்படுவீர்கள். அவர்கள் மீது தவறு இருந்தாலும், அவர்கள் உங்கள் மீது குற்றம் சாட்டுவார்கள். அவர்கள் உங்களை ஒரு கெட்டவராக சித்தரிக்கிறார்கள். அவர்கள் உங்களை குற்றவாளியாக உணர வைக்க தூண்டுவார்கள்.

கண்காணிக்கப்படுவீர்:

நீங்கள் உங்கள் காதலரை விட்டு விலகி வேறொரு உறவில் இருந்தால், உங்கள் முன்னாள் காதலன் அல்லது காதலி அதைக் கண்காணிப்பார்கள். மேலும் இது குறித்து எல்லோரிடமும் சொல்லி உங்களைக் குற்றம் சாட்டுவார்கள். எனவே கவனமாக இருக்கவும்.

click me!