தான் அழகாக இருப்பதால் தனக்கு 7 ஆயிரம் ஆண் நண்பர்கள் உள்ளதாக இளம்பெண் பகிர்ந்துள்ளார். அது பற்றிய கூடுதல் தகவல்கள் இதோ...
நம்முடைய சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ள வாழ்க்கையில் ஒரு துணை வேண்டும் என நினைப்போம். அதனால் தான் காதலி/ காதலன், கணவன் - மனைவி உறவு, குடும்ப அமைப்பு இன்றும் நடைமுறையில் இருக்கிறது. திருமணம் என்ற உறவுக்கு வரும் முன் காதல், டேட்டிங் எல்லாம் இப்போது சாதாரணமாகி வருகிறது. சிலர் ஒரு பெண் தோழி! ஆண் தோழருக்கே வழியில்லை என்று சமூக வலைதளங்களில் புலம்பி வரும் நிலையில், இங்கு ஒரு பெண் தனக்கு 7 ஆயிரம் ஆண் நண்பர்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதெப்படி? இது கேட்க ஆச்சர்யமாக இருந்தாலும் உண்மைதான்.
அமெரிக்கா நாட்டின் கலிபோர்னியாவை சேர்ந்த நலா ரே (25) (Nala Ray) என்பவர் தனக்கு ஆன்லைனில் 7 ஆயிரம் ஆண் நண்பர்கள் இருப்பதாகவும், அவர்களுடனான தனது உறவு நிஜ வாழ்க்கையில் டேட்டிங் செய்வதை விட சிறந்தது என்றும் சொல்லியுள்ளார். இவர் நாள்தோறும் அவர்களுக்கு மெசேஜ் செய்வாராம். காலையில் எழுந்ததும் மகிழ்ச்சியான விஷயங்களை நண்பர்களுக்கு அனுப்பி வைப்பாராம். அவர்களில் சிலர் பதில் சொல்வார்கள். அப்படியே வாழக்கையைக் குறித்தும் பேசி கொள்வார்கள். அவர்களின் நாள் எப்படி இருந்தது என்பதை அறிந்து உரையாடும்போது அந்த நாள் இன்னும் சிறப்பாகிவிடுகிறது என்கிறார் நலா ரே.
இப்போது இப்படி மகிழ்ச்சி ததும்ப ஆன்லைனில் மெசேஜ் செய்யும் நலா ரே, பல மாதங்கள் ஆஃப்லைனில் இருந்தார். அவரது முந்தைய உறவுகள் மோசமாக இருந்துள்ளது. அந்த மன உளைச்சலில் அவர் யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். ''மோசமான உறவின் வலியைப் போக்க புதிய நண்பர்களைத் தேட ஆரம்பித்தேன். நண்பர்கள் இல்லாமல் வாழ்வது கடினம் என தோன்றியது. என்னுடைய வாழ்க்கையை இவர்கள் மிகவும் வேடிக்கையாக மாற்றியுள்ளனர்'' என்கிறார் நலா ரே.
இதையும் படிங்க: நண்பர்களாக இருப்பவர்கள் திருமணம் செய்து கொண்டால் என்னாகும் தெரியுமா?
தன்னை புரிந்து கொள்ளும், தன் அழகை ரசிக்கும் ஆண் நண்பர்களுடன் டேட்டிங் செய்கிறாராம். நலா ரே தான் பழகும் நபர்களுடைய மனதையும் விரைவில் புரிந்துகொள்வாராம். ஆகவே அவருக்கு நிறைய ஆண் நண்பர்கள் இருப்பதாக தெரிவிக்கிறார். இன்னும் கூட அவருக்கு நிறைய ஆண் நண்பர்கள் இருந்தார்களாம். ஆனால் அவர்கள் ரொம்ப பொசசிவ் ஆக இருக்கவும் நலா அவர்களிடமிருந்து விலகிவிட்டாராம். இப்போது ஏழாயிரம் பேர் மட்டுமே தான் அவர் வாழ்க்கையில் நண்பர்களாக இருக்கின்றனர் என கூறுகிறார். தன்னிடம் உள்ள அழகையோ, பணத்தையோ பார்க்காமல் திருமணம் செய்துகொள்ள தயாராக இருக்கும் ஒருவரை தேடி கொண்டிருப்பதாகவும், அப்படிப்பட்டவர்களைக் கண்டுபிடிப்பது கடினம் என்றும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: சந்திர கிரகணம் 2023: இந்த 4 ராசிக்காரர்கள் ரொம்ப கவனமாக இருக்கணும்!! ஏன் அப்படி சொல்றாங்க தெரியுமா?