உறவில் பிரிவுகள் (பிரேக் -அப்) நிகழ்வது வழக்கமான ஒன்றாக இருந்தாலும், அந்த வலியும் அது ஏற்பட்ட காலமும் கடந்து வர கஷ்டமாக இருக்கும். உங்களுக்கு நிபுணரின் வழிகாட்டல் உள்ளே...
நாம் ஒருவருடைய உறவை மறுத்தாலும், மற்றவர்கள் நம் உறவை நிராகரித்தாலும் அதை எவ்வளவு பொறுத்துக்கொள்ள முடியும்? இந்த குறிப்பிட்ட புரிதலையும் பக்குவத்தையும் சிறு வயதிலிருந்தே வளர்த்து கொள்ள வேண்டும் என சிலர் சொல்வார்கள். நாம் விரும்பாதபோது, மற்றவர்களின் கோரிக்கைகளை உறுதியாக மறுக்கும் மனப்பக்குவம் நமக்கு இருக்கிறதா? என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும். மற்றவர்களும் நமக்கு அதையே செய்வார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
ஆதிராவும், அருணும் காதலர்கள். சமீபகாலமாக ஆதிரா, அருணுக்கிடையே பிரச்சனை. இந்த விவகாரத்தில், அருணுடனான உறவை விட்டு விலகி அவருடனான உறவை முறித்துக் கொண்டவர் ஆதிரா. இதனால் ஆத்திரத்தில் அருண், அவளை ஆன்லைனில் தாக்கி பேசினார். ஆதிரா மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார். அதைத் தொடர்ந்து வேறு வழியின்றி அருணும் தற்கொலை செய்து கொண்டார்.
ஒரு ஆண்டுக்கு முன்பு ஆதிரா அவர்களின் உறவை முறித்துக் கொண்டாள். ஆதிராவுக்கு வீட்டில் வரன் பார்த்திருக்கிறார்கள். அப்போது அருண், ஆதிராவுடன் பேசிய பழைய உரையாடல் பதிவுகள், புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு இணைய மிரட்டல் செய்யத் தொடங்கினார். இப்படி தான் பிரச்சனை அதிகமாகியுள்ளது.
விலகி நடத்தல்:
ஒருவர் இந்த உறவு வேண்டாம் 'no' என்று சொல்லிவதை ஏற்றுக் கொள்வதாலும், புரிந்து கொள்வதாலும் மனம் இழப்பதற்கு ஒன்றுமில்லை என்றாகிவிடுகிறது. நாம் விரும்புவதைப் பெறாவிட்டால் அதுவே இந்த உலகின் முடிவு அல்ல. வாழ்க்கையில் நமக்கு நிறைய இனிமையான விஷயங்கள் உள்ளன என்று நாம் இன்னும் நம்புகிறோமா என்பதை மதிப்பீடு செய்ய வேண்டும். இது குழந்தை பருவத்திலேயே தொடங்க வேண்டும். குழந்தைகளை வளர்க்கும் போது, பெற்றோர்களும் இந்த மாற்றங்களைச் செயல்படுத்த வேண்டும்.
ஆதரவு:
குழந்தைகள் தவறு செய்தாலோ, படிப்பில் மதிப்பெண் பெறத் தவறிவிட்டாலோ, அப்போது 'பரவாயில்லை' அடுத்த முறை வென்றுவிடலாம் என அவர்களுக்குத் தொடர்பைக் கொடுக்கிறோமா என்பதைச் சரிபார்க்க வேண்டும். வாழ்க்கையின் பின்னடைவைச் சமாளிக்கும் வகையில் நம் குழந்தைகளை வளர்க்க வேண்டும்.
தற்கொலை
உங்களுக்கு ஒரு பிரச்சனை ஏற்பட்டால் அதை கையாளாமல் ஏன் தற்கொலை செய்ய நினைக்கிறீர்கள்? எல்லோரும் அப்படி தான் நினைக்கிறார்களா? அல்லது சில தனிநபர்கள் மட்டும் அப்படி நினைக்கிறார்களா? என்பதை ஆராய்ந்து பாருங்கள். நாம் கூர்ந்து கவனித்தால், "இம்புள்ஸிவ் பெர்சனாலிட்டி" (Impulsive personality) அல்லது மனக்கிளர்ச்சியான நடத்தை வகையை சேர்ந்த நபர்கள் தான் வாழ்க்கையை முடித்து கொள்கிறார்கள். ஒரு பிரச்சனை வரும்போது, அதைச் சமாளிக்கும் முன்பே அவர்கள் தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்கிறார்கள். இந்த எண்ணத்தை குணப்படுத்தவே முடியாது.
பிரச்சனைகளைச் சமாளிப்பது தங்களின் திறமைக்கு அப்பாற்பட்டது என்ற நம்பிக்கையில் சிலர் தற்கொலையை நாடுகிறார்கள். அவர்களை நாம் குறை கூற முடியாது. பல வாழ்க்கை நிகழ்வுகளின் விளைவாக அவர்கள் இந்த ஆளுமையாக பரிணமித்திருக்கலாம். அவர்களின் குடும்ப சூழ்நிலைகள், அவர்கள் எப்படி வளர்க்கப்பட்டனர், சமூகத்தில் அவர்கள் சந்தித்த பல சவால்கள் மற்றும் பள்ளி மற்றும் கல்லூரி அனுபவங்கள் போன்றவற்றின் காரணமாக தங்கள் பிரச்சினைகளை தீர்க்கும் திறன் அவர்களுக்கு இல்லை. அவர்களின் எண்ணங்கள் நம்பமுடியாத அளவிற்கு மனச்சோர்வடையலாம். அதிக பிரச்சனைகள் வாழ்க்கையின் முடிவைக் குறிக்கும் என்று நம்பியிருக்கலாம். சிந்திக்க அவர்களுக்கு நேரம் கொடுக்கப்படவில்லை.
இந்த "விரக்தி சகிப்புத்தன்மை" நம் அனைவரிடமும் நம் குழந்தைகளிடமும் வளர்க்கப்பட வேண்டும். கடினமான சூழல்களில் அவசரப்படுவதைத் தவிர்க்கவும்; அதற்கு பதிலாக, ஓய்வெடுக்க சிறிது நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது இடைநிறுத்துவோம். வேறொன்றில் கவனம் செலுத்துவதன் மூலம் மனதை 'அமைதியாக்க' முயற்சி செய்யுங்கள்.
எல்லைக்குட்பட்ட ஆளுமை:
நாம் தற்கொலை பற்றி விவாதிக்கும்போது எல்லைக்குட்பட்ட ஆளுமைக் கோளாறு பற்றி விவாதிக்க வேண்டும். எல்லைக்குட்பட்ட ஆளுமை கோளாறு இளைஞர்கள் அவசியம் தெரிந்து கொள்ளவேண்டும். இளமைப் பருவத்தில் இது அங்கீகரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படாவிட்டால், காலப்போக்கில் அது ஏற்படுத்தக்கூடிய சிக்கல்கள் மிகப்பெரியவை.
தனிப்பட்ட உறவுகளில் உள்ளவர்களுடன் தொடர்புகொள்வதில் உள்ள சிரமத்தால் எல்லைக்குட்பட்ட ஆளுமைக் கோளாறு (Borderline personality disorder) வகைப்படுத்தப்படுகிறது. இவர்கள் பயங்கர உணர்வு (sensitive) மிக்கவர்களாக இருப்பார்கள். சில சமயங்களில் மற்றவர்கள் தங்களுக்கு எதிரானவர்கள் என்று கூட நினைக்கிறார்கள். எல்லைக்குட்பட்ட ஆளுமைக் கோளாறு சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் தற்கொலை அச்சுறுத்தல் உள்ளது.
ஒரு எல்லைக்குட்பட்ட ஆளுமைக் கோளாறு பாதித்தவர்களுக்கு (Borderline personality disorder) எப்போதாவது மருந்து தேவைப்படலாம். மருத்துவரிடம் ஆலோசியுங்கள். மிகவும் அவநம்பிக்கையாகவோ அல்லது சுழ்நிலை தங்கள் கட்டுப்பாட்டை மீறும் போதும் தங்களைக் காப்பாற்ற யாரும் இல்லை என்ற எண்ணம் அவர்கள் மனதில் வளர்கிறது.
எல்லைக்குட்பட்ட ஆளுமைகளின் வாழ்க்கையை கவனித்தால், பெரும்பாலான சூழ்நிலைகளில் துக்கம், வேதனை, ஒதுக்கல், தனிமை, உதவியின்மை, வீட்டில் நடக்கும் பிரச்சனைகள், பழி ஆகியவற்றால் நிரம்பியுள்ளது என்பது தெளிவாகிறது. டயலெக்டல் பிஹேவியர் தெரபி (DBT) என்பது எல்லைக்குட்பட்ட ஆளுமைக் கோளாறுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு சிகிச்சையாகும். இந்த சிகிச்சையில், பாதிப்புக்குள்ளான நபர்களிடம் அவர்கள் மதிப்புக்குரியவர்கள் என்பதை நம்ப வலியுறுத்தப்படுகிறது. அவர்கள் மதிப்புக்குரியவர் என்றும், யார் அவர்களை ஆதரித்தாலும் அல்லது யாரும் இல்லாமல் தனிமையில் இருந்தாலும் அவர்கள் வாழ்வது அவசியம். அவர்களுக்காக வாழ்வதும், அவர்களை அவர்களே நேசிப்பதும் முக்கியம் என நம்ப வைக்கப்படுகிறது. இந்த சிகிச்சைக்கு பிறகு வாழ்க்கை அவர்களுக்கு வேறு மாதிரி தெரியலாம்.
அருண், அதிரா விஷயத்தில் அவர்கள் இருவரும் தங்கள் வாழ்க்கை இத்துடன் முடிந்துவிடாது அல்லது தங்களுக்கு அழகான வாழ்க்கை இருக்கிறது என்று நினைத்திருந்தால் இப்படி நடந்திருக்காது.
நச்சு உறவு
ஒரு உறவு பிரேக் அப் ஆக பல காரணங்கள் இருக்கலாம். சில சமயம் குடும்பம் சம்மதிக்காததால் பிரியலாம். சில சமயங்களில் இரண்டு பேருக்கும் ஒத்து வராமல் போயிருக்கும். இதையெல்லாம் விட மோசமாகச் சொல்லக்கூடிய இன்னொரு காரணம் 'சந்தேகம்'.
உங்கள் துணையை சந்தேகிப்பது நிச்சயமாக ஒரு ஆபத்தான மனநிலை. உங்கள் துணை யாரையாவது அழைக்கிறாரா அல்லது செய்தி அனுப்புகிறாரா என்பது போன்ற பல சந்தேகங்கள் அதிகமாக இருக்கலாம். அதிக பொசசிவ் ஆக இருப்பது பெரும்பாலும் அன்பின் காரணமாக என்று மக்கள் நினைக்கின்றனர். ஆனால் விஷயம் அப்படியல்ல. அது பிரச்சனையில் கொண்டுபோய் விடும்.
இந்த துணையை விட்டுவிலகுவது சவாலானது. அவர்கள் விரைவாக கோபமடைகிறார்கள். ஆனால் இதைப் பற்றிய தெளிவான விழிப்புணர்வு இருந்தால் மட்டுமே பல பிரச்சனைகளில் இருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். உறவில் இருவரும் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். ஒருபக்க சார்பு கொண்ட எந்த உறவானாலும் உடைவது நிச்சயம். கவனமாக இருங்கள்.
கட்டுரை மூலம்- பிரியா வர்கீஸ் (மருத்துவ உளவியலாளர்)