தங்கள் துணையின் மாதவிடாய் காலத்தில் சிலர் உடலுறவு கொள்ள விரும்புகிறார்கள். அதை மிகவும் ரசிக்கிறார்கள். மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்வதால், உடலில் நீங்கள் நம்ப முடியாத மாற்றங்கள் நடக்கும்.
மாதவிடாய் பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் நிகழும். இந்த நேரத்தில் வெறும் ரத்தப்போக்கு மட்டுமில்லாமல் வயிற்று வலி, வயிற்று பிடிப்புகள், பலவீனம், மனநிலை மாற்றங்கள் ஆகியவை ஏற்படும். சானிட்டரி நாப்கின்கள் இரத்தப்போக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தினாலும், சில பெண்களுக்கும், ஆண்களுக்கும் மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்ள ஆசை இருக்கும். இப்படி பீரியட் செக்ஸ் விரும்புபவர்கள் வெகுசிலரே. மாதவிடாய் காலங்களில் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களும் இந்த அனுபவத்தை சுவாரஸ்யமாக்குகின்றன. தற்போது மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.
வலி நிவாரணி..
மாதவிடாயின் போது உறவு வைத்தால் எந்த செயற்கை உயவூட்டலும் (லூபிரிகேஷன்) தேவையில்லை. ஏனெனில் இந்த நேரத்தில் பெண்களின் உடலில் இருந்து யோனி வழியாக வெளியேறும் ரத்தமே லூப்ரிகேஷனாக செயல்படுகிறது. இது உடலுறவின் போது உங்களுக்கு வசதியாக இருக்கும். உடலுறவு பொசிஷன்கள் உடற்பயிற்சி போல செயல்பட்டு அடிவயிற்றில் உள்ள தசைப்பிடிப்பை நீக்குகிறது.
மன அழுத்தம் நீங்கும்
மாதவிடாய் தொடங்கும் போது பலர் மன அழுத்தத்தையும் கவலையையும் உணர்கிறார்கள். மனநிலை மாற்றங்கள் (anxiety) அடிக்கடி நிகழும். இந்த நேரத்தில் உடலுறவு கொள்வது உடலில் உள்ள மகிழ்ச்சி ஹார்மோன் ஆக்ஸிடாஸின் அளவை அதிகரிக்கிறது. அது மூளைக்குச் சென்று நமது பச்சாதாப உணர்வை அதிகரிக்கிறது. இது மன அழுத்தத்தை நீக்கும்.
அதிக பாலுணர்வு
மாதவிடாய் காலத்தில் உடலில் பாலுணர்வு அதிகமாக இருக்கும். உடலில் உள்ள ஹார்மோன்கள் சமநிலை மாறும். பெண்களின் இனப்பெருக்க ஹார்மோன் புரோஜெஸ்ட்டிரோன் அளவு குறைந்துவிடும். டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் அளவில் மாற்றம் ஏற்படுகிறது. பீரியட்ஸ் சமயத்தில் பெண்களுக்கு எல்லாம் குளறுபடியாகவே இருக்கிறது என்கின்றனர் நிபுணர்கள். இந்த ஹார்மோன் மாற்றங்கள் உடலுறவு ஆசையை அதிகரிக்கச் செய்கின்றன.
கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்பு
மாதவிடாய் உடலுறவின் போது கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகள் ரொம்ப குறைவு. அதனால்தான் மாதவிடாய் காலத்தில் பலர் உடலுறவு கொள்கிறார்கள். அதே சமயம் நீங்கள் நான்காவது அல்லது ஐந்தாம் நாளில் உடலுறவு கொண்டால் கவனமாக இருங்கள். உண்மையில், ஒரு பெண்ணின் உடலில் விந்தணுக்கள் 72 மணி நேரம் வாழ முடியும். பாதுகாப்பற்ற உடலுறவு கர்ப்பத்திற்கு வழிவகுக்கும்.
இதையும் படிங்க: செக்ஸ் வெச்சிக்கிறப்ப முனங்கினால்... இப்படியெல்லாம் காரணம் சொல்றாங்க! அடபாவிகளா..
மாதவிடாய் சமயம் உடலுறவு டிப்ஸ்
இதையும் படிங்க: வாய்வழி செக்ஸ் ரொம்ப ஆபத்தானதா? அதனால் வரும் பாதிப்புகள் தெரியுமா?