உறவில் வலுவான நிலையை கடைபிடிக்கும் ஆண்கள், பெண்களை தவிர்ப்பது கிடையாது. எப்போதும் பெண்ணுக்குரிய தேவையான உரையாடல்களுக்கு தயாராக இருப்பார்கள்.
அனைவருடைய காதல் வாழ்க்கையும் கொடுமையானது கிடையாது. நெறிமுறைகள், மதிப்புகள் மற்றும் தூய அன்பு ஆகியவற்றுடன் உறவை வலுவாக வைத்திருக்கும் நல்லவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். அவர்களுக்கு இடையில் எந்தவிதமான பிரச்னையும் ஏற்படுவது கிடையாது என்று எண்ணிவிட வேண்டாம். வழக்கமான காதலர்கள் அல்லது தம்பதிகளுக்கு இடையில் வரக்கூடிய அனைத்து பிரச்னைகளும் சச்சரவுகளும் வருவதும் போவதும் உண்டு. என்ன நடந்தாலும் தங்களுக்குள் ஏற்படும் சண்டைகள் மற்றும் வாக்குவாதங்களை பக்குவமாக கையாளுகின்றனர். உறவுசார்ந்த விஷயங்களில் பெண்கள் பெரியளவில் தவறு செய்வது கிடையாது. அதனால் ஆண்களுடைய பங்களிப்பை வைத்து தான் உறவு வலுவாக அமைகிறது. அந்த வகையில் உறவுகளை வலுவாக வைத்திருக்கும் ஆண்களுடைய பங்களிப்பு குறித்து விரிவாக பார்க்கலாம்.
தேவையற்ற விமர்சனம் இருக்காது
ஒரு நல்ல மனிதர் பெண்களுடைய தோற்றத்தை ஒருபோதும் பகடி செய்யமாட்டார். அது காதலியானாலும் சரி, வேறொரு பெண்ணாக இருந்தாலும் சரி. மோசமான கருத்துக்களைச் சொல்லி உங்களுடைய சுயமரியாதையைக் குறைக்க மாட்டார். அப்படிப்பட்ட ஆண்கள், தாங்கள் விரும்பும் பெண்கள் எப்படி இருக்கின்றனரோ அப்படியே ஏற்றுக்கொள்ளக் கூடிய பக்குவம் பெற்றவர்களாக இருப்பார்கள். இதுபோன்ற ஆண்கள் தங்களுடைய பெண்களிடத்தில் தேவையற்ற விமர்சனங்களை முன்வைப்பது கிடையாது.
தனிநபர் சுதந்திரம்
உறவில் கொள்கைகளை கடைப்பிடிக்கும் ஆண்கள், பெண்களின் தனிப்பட்ட சுதந்திரத்திற்குள் நுழைய முயற்சிப்பது கிடையாது. அவர்களிடம் போதுமான நேரம் மற்றும் இடம் வேண்டியளவுக்கு கிடைக்கு. மனைவி தானே என்று போனை பார்ப்பது, காதலி தானே என்று தனிப்பட்ட தகவல்களை படிப்பது போன்ற செயல்களில் ஈடுபடமாட்டார். இதுபோன்ற பரந்த நோக்கம் கொண்ட ஆண்களிடம் பெண்கள் தைரியமாக பழகலாம்.
ஊக்கம், உறுதுணை கிடைக்கும்
பெண்கள் செய்ய விரும்பும் காரியங்களுக்கு ஆண்கள் துணைநிற்க வேண்டும். பெண்களுக்கு எப்போதும் ஊக்கமளிக்க வேண்டும். பெண்கள் எடுக்கும் முடிவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். நீங்கள் துவண்டு போகும் நேரங்கள் அவர்கள் துணை நிற்பார்கள். இதனால் பெண்கள் செய்ய விரும்பும் காரியங்கள் நிச்சயம் வெற்றி அடையும். உறவில் வலுவான நிலையை கடைப்பிடிக்கும் ஆண்கள், தன்னைச் சேர்ந்த பெண்களை உற்சாகப்படுத்திக் கொண்டும் ஊக்கமளித்துக்கொண்டே இருப்பார்கள்.
குளிர்காலத்தில் நிறைய பட்டானி சாப்பிடுங்கள்- அடுத்து நடக்கும் அற்புதம்..!!
எந்த அவசியமும் இருக்காது
பெண்களின் மதிப்பு எவ்வளவு என்பது ஒரு நல்ல ஆணுக்கு தெரியும். அவர்கள் எப்போதும் பெண்கள் தங்களுடைய தகுதியை நிரூபிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கமாட்டார்கள். ஏனென்றால் நீங்கள் யார் என்பதை அவர் ஏற்கனவே அறிந்திருப்பார். ஒருவேளை அந்த ஆணிடம் பெண்கல் தங்களுடைய தகுதியை காட்ட வேண்டும் என்று நிர்பந்தம் எழுந்தால், அந்த உறவை விட்டு வெளியேற பெண்கள் தயாராக இருக்க வேண்டும்.
முன்னுரிமை பெண்களுக்குத் தான்
ஒரு நல்ல மனிதர் அவர் விரும்பும் பெண்ணை இரண்டாம் பட்சமாக உணர மாட்டார். அவரிடம் இருந்து பெண்களுக்கு எப்போதும் சரியான வழியில் முன்னுரிமை கிடைக்கும். அதேசமயத்தில் உறவில் முக்கியத்துவமும் இருக்கும். உறவுசார்ந்த நடைமுறைகளில் பெண்களை முக்கியமற்றவராக உணராமல், அவர்களுடைய தேவை மற்றும் விருப்பங்களை அறிந்து ஆண்கள் நடந்துகொள்வர்.