தம்பதிகளுக்குள் விவகாரத்து ஏற்படுவதற்கு தூக்கமும் ஒரு காரணம் தான்..!!

By Asianet Tamil  |  First Published Feb 11, 2023, 1:18 PM IST

 உங்கள் துணை உரத்த குறட்டையுடன் தூங்கும்போது அல்லது அதிக நேரம் லைட் எரியாமல் விழித்திருக்கும் போது தம்பதியினர் தனித்தனியாக தூங்க நேரிடுகிறது. இதுபோன்ற நடவடிக்கைகள் விவகாரத்துக்கு வழிவகுக்கிறது.


திருமணத்திற்குப் பிறகு தம்பதிகள் படுக்கையைப் பகிர்ந்துகொள்வது மிகவும் பொதுவானது. இது அவர்களுக்கிடையேயான அன்பை மேலும் வளர்த்தெடுக்கும். மேலும் இதனால் இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளும் வாய்ப்பும் உருவாகிறது. கணவனும் மனைவியும் ஒன்றாக உறங்கினால் ஆரோக்கியமான உடல் உறவு உருவாகும். ஆனால் சில நேரங்களில் தம்பதிகள் தனித்தனியாக தூங்க வேண்டியிருக்கும். உங்கள் துணை உரத்த குறட்டையுடன் தூங்கும்போது அல்லது அதிக நேரம் லைட் எரியாமல் விழித்திருக்கும் போது தம்பதியினர் தனித்தனியாக தூங்க நேரிடுகிறது. இதுபோன்ற நடவடிக்கைகள் விவகாரத்துக்கு வழிவகுக்கிறது.

தூக்க விவகாரம்

Tap to resize

Latest Videos

undefined

குடும்ப நல நீதிமன்றங்களில் விவகாரத்து தொடர்பான வழக்குகள் கையாளும் போது, “Sleep Divorce" என்கிற சொல் பயன்படுத்தப்படுகிறது. அதாவது தம்பதிகளுக்குள் விவகாரத்து ஏற்படுவதற்கு தூக்கமும் ஒரு காரணமாக உள்ளது என்பதை குறிப்பது தான் தூக்க விவகாரத்து. இந்த தற்காலிக பிரச்னைக்கு உரிய தீர்வு காணாமல் போனால், நிச்சயம் அது தம்பதிகளுக்கு இடையில் உறவு சார்ந்த சிக்கலை உருவாக்குகிறது.

தூக்கத்தின் தரம் குறையும்

திருமண முறிவுக்கு தூக்கமும் முக்கிய காரணமாக உள்ளது. இது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் தம்பதிகள் தங்களுடைய தூக்கத்தை எப்படி கையாளுகின்றனர் என்பதும் இங்கே முக்கியத்துவம் பெறூகிறது. ஒருவருடைய தூக்கம் சார்ந்த பழக்கவழக்கங்கள், துணையின் தூக்கத்துக்கு பிரச்னையை ஏற்படுத்தலாம். அதை புரிந்துகொண்டு உடனடியாக நிவர்த்தி காண வேண்டும். அதை விடுத்து சமரசம் செய்துகொள்ளாமல், தொடர்ந்து உங்களுடைய செயல்பாட்டை தொடர்ந்தால் விவகாரத்து பிரச்னையும் தலைதூக்குகிறது.

உறவுகளில் தூரம் உருவாகிறது

தூக்க விவாகரத்து என்பது உங்கள் உறவைப் பாதிக்கும் என்று அர்த்தமல்ல. இருப்பினும், இது தம்பதியருக்கு இடையிலான நேசம், அன்பு போன்றவை விலகும் வாய்ப்பு உள்ளது. ஒருவரையொருவர் உண்மையாக நேசிக்கும் இருவர் இதை நிச்சயம் புரிந்துகொள்வார்கள். எந்த இடையூறும் இல்லாமல் சில மணிநேரம் நல்ல தூக்கத்தைப் பெற நீங்கள் விரும்பும் நேரத்தை வழங்குவதாகும்.

தூக்கம் உறவை பாதிக்காமல் இருக்க என்ன செய்யலாம்?

முந்தைய காலங்களில் தூக்க விவகாரத்து என்பது மேல்தட்டு குடும்பங்களிடம் அதிகம் இருந்தது. ஆனால் தற்போது நடுத்தர குடும்பங்களுக்குள் ஏற்படும் விவகாரத்துக்கு தூக்க பிரச்னை முக்கிய காரணமாக அமைகின்றன. இருப்பினும், தம்பதிகள் ஒருவரையொருவர் புரிந்து கொண்டால் இதைச் செய்வது மிகவும் எளிதாகிவிடும். போதுமான தூக்கம் இல்லாததால் உங்கள் உடல்நலம் எவ்வாறு மோசமடைகிறது என்பதைப் பற்றி இருவரும் பேசலாம். தனி அறை இல்லை என்றால், வசிக்கும் இடத்தில் தற்காலிக படுக்கையை அமைத்து தூங்கலாம்.

பெயரில் தான் இது சின்ன வெங்காயம்- ஆரோக்கியத்தில் இது மிகவும் பெருசு..!!

தூக்க நிலையில் மாற்றங்கள்

தூக்க நிலையில் மாற்றங்கள் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துவதில் நன்மை பயக்கும். தம்பதிகள் தங்கள் தனிப்பட்ட இடத்தைப் பெறுகிறார்கள். தனித்தனி படுக்கைகளில் தூங்குவது சிறந்த தூக்கத்திற்கு வழிவகுக்கிறது. ஆரோக்கியமான உறவுக்கு ஒரே படுக்கையில் தூங்குவது அவசியமில்லை. தம்பதிகள் ஒருவருக்கொருவர் சேர்ந்து தூங்காமல் நெருக்கத்தை உருவாக்க முடியும்.

click me!