ஆரோக்கியமான உணவு மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு வகைகளைத் தேர்ந்தெடுத்து உண்பது உங்கள் உடல் நலனை காக்கும் அதே போல, அது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். ஆனால் தூங்கும் போது உங்கள் துணையை கட்டிப்பிடித்துக்கொண்டு தூங்கினால், அது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, மனநலத்திற்கும் நன்மைகளைத் தருகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?..
கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து கொண்டு உறங்குவதால் ஏற்படும் நன்மைகளை பற்றி பல ஆய்வின் முடிவுகள் நிரூபித்துள்ளன. சரி இப்படி கட்டிப்பிடித்துக்கொண்டு தூங்கினால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதை இந்த பதிவில் காணலாம்.
உடலில் லவ் ஹார்மோன் அதிகரிக்கும்
கடந்த 2005ம் ஆண்டில், நார்த் கரோலினா பல்கலைக்கழகத்தின் உளவியல் துறையால் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அதில், அடிக்கடி கட்டிப்பிடித்துக்கொண்டு உறங்குவதால், உங்கள் உடலில் ஆக்ஸிடாஸின் அளவு அதிகமாக இருக்கும் என்பதை ஆய்வு நிரூபித்துள்ளது. ஆக்ஸிடாசின் என்பது மகிழ்ச்சி அல்லது லவ் ஹார்மோன் என்று கூறப்படுகிறது. இந்த பழக்கம் மாதவிடாய் நின்ற பெண்களின் இரத்த அழுத்தத்தைக் குறைத்து இதயத் துடிப்பை சமன் செய்யும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
பியூட்டி பார்லர் சென்ற பெண்... கொத்து கொத்தாக கொட்டிய முடி: என்ன நடந்தது?
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
கிளீவ்லேண்ட் பகுதியை சேர்ந்த உளவியலாளர் ஜோ ராக் கூறுகையில், கட்டிப்பிடிப்பது என்பதே பலருக்கு ஒரு சிகிச்சையாக இருந்துவருகின்றது என்றார். கட்டிப்பிடித்துக்கொண்டு நீங்கள் உறங்கும்போது, அது உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது என்றார் அவர். கட்டிப்பிடிப்பது, உடலில் உள்ள கார்டிசோலின் வெளியீட்டை குறைகிறது. அது மன அழுத்த ஹார்மோன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தன்னம்பிக்கையை அதிகரிக்கும்
அரவணைப்புடன் செய்யப்படும் எந்தஒரு செயலுக்கும் ஒரு எதிர்வினை உள்ளது, அது போல, கட்டிப்பிடிப்பது ஒரு நபரை நேசிக்க மற்றும் அவரை நாம் சிறப்பு வாய்ந்தவராக உணர வைக்கிறது. உண்மையில், கட்டிப்பிடிப்பது என்பது ஒரு குடும்பத்திற்குள் அல்லது நண்பர்களுக்கு மத்தியில் நடக்கும் ஒரு மாபெரும் நற்செயலாகும். இது ஒரு மனிதனுக்கு தன்னம்பிக்கையை வளர்க்கும் திறன்கொண்டதாக மாறுகின்றது.
இறுகிய தசைகளை தளர்த்த உதவுகிறது
காலையில் இருந்து மாலை வரை பல்வேறு பணிகளை முடித்த பிறகு, நிச்சயமாக நமது தசைகள் இறுக்கமாக உணரத்துவங்கும். ஆகவே நிச்சயம் அதற்கு ஒரு தளர்வு தேவை, ஆகவே குடும்ப நல நிபுணரான வர்ஜீனியா சடிரின் கூற்றுப்படி, ஒரு நாளைக்கு நான்கு முறை கட்டிப்பிடிப்பது உங்கள் இறுகிய தசைகளை தளர்த்த உதவுகிறது.
இளநரை இருக்கா? கவலையை விடுங்க.. இந்த 7 உணவுகளை மட்டும் உணவில் சேர்த்துக்கோங்க..!!