முதலிரவு நடக்கும் போது தான் தெரியும் நமக்கு கூறப்பட்டது எல்லாம் கட்டுக்கதை என்று..!!

By Dinesh TG  |  First Published Dec 31, 2022, 11:42 AM IST

சினிமாக்களில் காட்டப்படுவது போன்று முதலிரவுகள் யாருக்கும் அமைவது கிடையாது. யதார்த்த வாழ்க்கையில் அது முற்றிலும் மாறானது. உணர்வுகளோடு சம்மந்தப்பட்ட ஒரு தருணமாகவே முதலிரவு இருக்க வேண்டும்.
 


ஒவ்வொருவருக்கும் முதலிரவு குறித்து பல கனவுகள் இருக்கும். சினிமா, தொலைக்காட்சி, நிகழ்ச்சிகள் மூலம் திருமணம் முடிந்து நடக்கும் முதலிரவு குறித்து பல கற்பனைகளை கொண்டிருப்போம். திருமண வாழ்க்கையை புதியதாக துவங்கும் தம்பதிகளுக்கு முதலிரவு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதனால் பல்வேறு கட்டுக்கதைகள் முதலிரவு குறித்து சொல்லப்படுவதுண்டு. அதை சினிமாக்கள், டி.வி நிகழ்ச்சிகளிலும் நாம் பார்க்க நேருவதால், இதுவரை முதலிரவு அனுபவம் இல்லாத பலர், அதுதான் முதலிரவு என்று வேறு நம்பி விடுகின்றனர். அந்த வகையில் முதலிரவு குறித்து கட்டிவழிக்கப்பட்டுள்ள கட்டுக்கதைகள் குறித்தும், அதனுடைய உண்மைத் தன்மை குறித்து விரிவாக தெரிந்துகொள்வோம்.

பாலியல் நோய் வராது

Latest Videos

உங்களுக்கு இப்போது ஒரு துணை மட்டுமே இருப்பதால், பாலியல் நோய் ஆபத்து இருக்காது என்று நினைப்பவர்கள் பலர் உண்டு. அதேசமயத்தில் முதலிரவு என்பதால் தம்பதிகள் ஆணுறைகள் அல்லது பிற பாதுகாப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்த தேவையில்லை என்றும் நினைக்கின்றனர். உண்மையில், உங்களுடைய உடலுறவு பாதுகாப்பாக அமையவில்லை என்றால் கண்டிப்பாக பாலியல் நோய் அபாயம் ஏற்படும். உங்களுக்கு ஏதேனும் பாதிப்பு இருக்கும் பட்சத்தில், உங்கள் துணையுடன் நீங்கள் உடலுறவு கொண்டால், அவருக்கும் அந்த ஆபத்து பரவும். இதற்கு பல பார்டனருடன் உடலுறவு கொண்டால் தான் ஆபத்து என்று நினைப்பது முற்றிலும் மூடநம்பிக்கையாகும்.

ரத்தக் கசிவு

முதலிரவில் ஈடுபடும் போது பெண்களுக்கு பிறப்புறுப்பில் இருந்து ரத்தம் வரும். ஆணாக இருக்கும்பட்சத்தில் அவர்களுக்கு முன்தோல் கிழிந்து ரத்தம் வரும் என்கிற கருத்து பலரிடையே நிலவுகிறது. அறிவியல் மிகவும் வளர்ந்துவிட்ட காலக்கட்டத்தில் கூட, இதுபோன்ற தகவல்கள் இன்னும் பலரால் நம்பப்படுகிறது. பெண்ணுறுப்பில் உள்ள ‘ஹைமன்’ என்கிற தசை கிழிந்தால் ரத்தக் கசிவு ஏற்படும் என்பது உண்மை தான். ஆனால் அது பாலியல் உறவு ஏற்படும் போது மட்டும் நடக்காது. தையல் தொழிலாளி, விளையாட்டு வீராங்கனைகள், அதிக உடலுழைப்பு தேவைப்படும் வேலைகளில் ஈடுபடும் பெண்களுக்கு இயற்கையாகவே அந்த தோல் கிழிந்துவிடும். பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் வெளியிட்ட ஒரு ஆய்வின்படி, உலகளவில் குறைந்தது 63% பெண்கள் முதன்முறையாக உடலுறவில் ஈடுபடும்போது ரத்தப்போக்கு ஏற்படுவதில்லை என்று தெரிவித்துள்ளது.

சத்தம் போடக்கூடாது

முதன்முறையாக உடலுறவில் ஈடுபடும் போது பிறப்புறுப்பில் வலி ஏற்படும். அது முற்றிலும் சரியானது மற்றும் இயற்கையானது. மேலும் முதன்முறையாக கிடைக்கும் அனுபவம் என்பதால், அது உங்களுக்கு சங்கடத்தைக் கூட தரலாம். அப்போது முனகுவது, சினுங்குவது போன்றவை இயற்கையானது தான். அதற்காக நீங்கள் சத்தம் போட வேண்டும் என்பது கிடையாது. ஏதேனும் படங்களை பார்த்துவிட்டு முதலிரவில் ஈடுபடும் போது, இயல்பாக வரும் உணர்வுகளை விடுத்து செயற்கையான உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டாம். நீங்கள் நினைக்கும் அளவுக்கு முதன்முதலாக ஏற்படும் உடலுறவு அனுபவம் அவ்வளவு ஃபேண்டசியானது கிடையாது. மிகவும் உணர்வுபூர்வமானது.

உடலுறவில் ஈடுபடும் போது வலி ஏற்படுகிறதா? அலட்சியம் வேண்டாம்..!!

சுத்தம் வேண்டும்.

திருமணத்திற்கு முன்பு மணமக்கள் எப்போதும் மிகுந்த அழுத்தத்தில் இருப்பார்கள். அதனால் தங்களுடைய அந்தரங்க உறுப்புகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். முதன்முறையாக ஒருவரையொருவர் நிர்வாணமாக பார்க்கும் போது, அது ஒரு அழகான தருணமாக இருக்க வேண்டும் என்கிற எண்ணம் பலருக்கும் இருக்கும். அதனால் முதலிரவுக்கான காரணத்தை கருதி ஆணும் பெண்ணும் தங்களுடைய உடலையும் அந்தரங்க பகுதிகளை சுத்தம் செய்திடுங்கள். இந்த பழக்கம் அப்போது மட்டுமில்லாமல், எப்போதும் இருப்பதுபோல பழக்கமாக்கிடுங்கள். அப்போது தான் தாம்பத்தியம் என்றும் இளமையாகவும் செழிப்பாகவும் இருக்கும். இந்த தகவலை எந்த படங்களும் டிவி நிகழ்ச்சிகளும் உங்களுக்கு சொல்லி தராது. இதுதான் முற்றிலும் எதார்த்தமான நிலைபாடாகும்.

யதார்த்த வாழ்க்கை இதுதான்

திரைப்படங்கள் அல்லது வீடியோக்களை பார்த்து முதலிரவு சார்ந்த எதிர்பார்ப்புகளை உருவாக்குவது மிகவும் அபத்தமானது, ஏனெனில் அவை யதார்த்தத்திலிருந்து மிகவும் வெகு தொலைவில் உள்ளன. மேலும் அதற்காக எடுக்கப்படும் காட்சிகள் மிகவும் மிகவும் மென்மையாகவும், மகிழ்ச்சியாகவும், பார்வைக்கு ஈர்க்கும் வகையிலும் காட்டப்படுகிறது. ஆனால் உண்மையில் அதற்கு எதிராக தான் இருக்கும். நீங்கள் திரைப்படங்களில் பார்ப்பது போன்று உறுப்புகள் இல்லாமல் போகலாம், மாறாக விகாரமாக தெரியலாம். அதேபோன்று உடலுறவு ஏற்படும் போது, தோலில் உருவாகும் உராய்வு மிகவும் இயல்பானது. அதை நினைத்து எந்தவிதமான விசித்திரமான மனநிலையை அடைய வேண்டாம்.
 

click me!