ஐயர் வீட்டு மாங்காய் சாதம் எப்படி செய்யனும் தெரியுமா? ரெசிபி இதோ!

Published : Aug 31, 2024, 02:12 PM IST
ஐயர் வீட்டு மாங்காய் சாதம் எப்படி செய்யனும் தெரியுமா? ரெசிபி இதோ!

சுருக்கம்

Mango Rice Recipe : இந்த பதிவில் ஐயர் வீட்டு ஸ்டைலில் மாங்காய் சாதம் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாகவே மாங்காயில் ஊறுகாய், வற்றல் போன்றவை செய்வோம் அதுமட்டுமின்றி, இதை நாம் சாம்பார், புளி குழம்பு, மீன் குழம்பு போன்றவற்றிலும் சேர்ப்பது வழக்கம். சில சமயங்களில், இதை குழம்பாக கூட சில வீடுகளில் செய்து சாப்பிடுவார்கள். ஆனால், மாங்காயில் அதிகமாக சாதம் செய்ய மாட்டோம். 

எனவே, இன்றைய கட்டுரையில், வெறும் பத்தே நிமிடத்தில் மாங்காய் சாதம் செய்வது எப்படி என்று தான் நாம் பார்க்க போகிறோம். ஆனால், இது எப்போதும் போல் அல்லாமல், ஐயர் வீட்டு ஸ்டைலில் செய்யப் போகிறோம். உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு அய்யர் வீட்டு ரெசிபி பிடிக்கும் என்றால் ஒரு முறை செய்து கொடுங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு அதன் சுவை அருமையாக இருக்கும். சரி வாங்க.. இப்போது இந்த பதிவில் ஐயர் வீட்டு ஸ்டைலில் மாங்காய் சாதம் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க:  ஐயர் வீட்டு பருப்பு சாதம்.. ஒருமுறை இப்படி வீட்ல செஞ்சி பாருங்க.. டேஸ்டா இருக்கும்..!

ஐயர் வீட்டு மாங்காய் சாதம் செய்ய தேவையான பொருட்கள் :

வடித்த சாதம் - 2 கப்
மாங்காய் - 1 (துருவியது)
காய்ந்து மிளகாய் - 4
கடுகு - 1/2 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 2 ஸ்பூன்
கடலை பருப்பு - 1 ஸ்பூன்
வேர்க்கடலை - 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
சீரகம் - 1/2 ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
துருவிய தேங்காய் - 1/2 கப்
கருவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
உப்பு - சுவைக்கு ஏற்ப
நல்லெண்ணெய் - தேவையான அளவு

இதையும் படிங்க:  ஐயர் வீட்டு மோர் குழம்பு... இனி நீங்களும் சுலபமாக செய்யலாம்.. ரெசிபி இதோ!

செய்முறை :

முதலில் ஒரு கடையை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் கடுகு போட்டு நன்கு பொரிக்கவும். பிறகு அதில் காய்ந்த மிளகாய் கடலை பருப்பு, வேர்க்கடலை, உளுந்தம் பருப்பு ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். அவை ஓரளவு பொரிந்தவுடன் அதில் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சீரகம், பெருங்காயம் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்க்கவும். பின் அதில் துருவிய மாங்காயை சேர்த்து ஒரு முறை கிளறி விடுங்கள். அதனுடன் தேவையான அளவு உப்பையும் சேர்த்துக் கொள்ளுங்கள். 

அடுத்து அதில் தேங்காய் துருவல் சேர்த்து ஒரு முறை கிளறி விடுங்கள். பிறகு மீண்டும் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி ஒரு முறை கிளறி விட்டு, அடுப்பை அணைத்து விடுங்கள். இறுதியாக வடித்து வைத்துள்ள சாதத்தை இதனுடன் சேர்த்து நன்கு கலக்கவும். பின் அதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை சேர்க்க வேண்டும். அவ்வளவு தான் சுவையான ஐயர் வீட்டு மாங்காய் சாதம் ரெடி. இந்த சாதத்துடன் நீங்கள் உருளைக்கிழங்கு ப்ரை, காளான் பிரை ஆகியவற்றை சேர்த்து சாப்பிட்டால் சுவை அட்டகாசமாக இருக்கும். 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

PREV
click me!

Recommended Stories

Uric Acid : மூட்டு வலியை நீக்கும் சூப்பர் 'சட்னி' ஒருமுறை சாப்பிட்டு பாருங்க! அற்புத பலன்கள் இருக்கு
Kambu Paniyaram : கம்பு பணியாரத்திற்கு 'சர்க்கரை' நோயை கட்டுப்படுத்துற சக்தி இருக்கு.. ரொம்ப ஈஸியான ரெசிபி இதோ!