வாழைப்பூ வடை சாப்பிட்டிருப்பிருப்பீங்க...வாழைப்பூ சட்னி இப்படி ஒருமுறை சாப்பிட்டு பாருங்க

Published : Mar 14, 2025, 09:38 PM IST
வாழைப்பூ வடை சாப்பிட்டிருப்பிருப்பீங்க...வாழைப்பூ சட்னி இப்படி ஒருமுறை சாப்பிட்டு பாருங்க

சுருக்கம்

வழக்கமான சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்களை கொஞ்சம் வித்தியாசமாக பயன்படுத்தினால் அற்புதமான சுவையுடன் ஆரோக்கியமும் கிடைக்கும். வாழைப்பூவை வைத்து பொரியல், கூட்டு, வடை செய்து போர் அடித்து விட்டால், இப்படி வாழைப்பூவை பயன்படுத்தி ஒரு சட்னி செய்து பாருங்கள்.

வாழைப்பூ, உணவுக்கு மட்டுமல்ல, உடலுக்கு மருந்தாகவும் பார்க்கப்படுகிறது. பொதுவாக வாழைப்பூவில் இருக்கும் உயிர்ச்சத்து, நார்ச்சத்து, இரும்புச் சத்து நம் உடலுக்கு உற்சாகம் கொடுக்கும். கிராமங்களில் இதை பொரியல், கூட்டு, அடை, வடை போன்ற பலவகைகளில் தயாரிக்கின்றனர். ஆனால், வாழைப்பூவில் வித்தியாசமாக  சட்னி செய்து ஒருமுறை சாப்பிட்டு பார்த்தால் அதன் சுவை மறக்கவே மறக்காது.

தேவையான பொருட்கள் :

வாழைப்பூ - 1 (சுத்தம் செய்து நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2-3 (காரம் அடிப்படையில்)
உளுத்தம் பருப்பு -    1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்  
சீரகம் - 1/2  டீஸ்பூன்
பூண்டு - 4 பல்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
தேங்காய் துருவல் - 1/4 கப்
புளி - ஒரு சிறிய எலுமிச்சை அளவு
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
கருவேப்பிலை - சிறிதளவு

வாழைப்பழம் அழுகும் நிலைக்கு வந்து விட்டதா? அதில் பனானா மஃபின் செய்து விடலாமே

கிராமத்து பாரம்பரிய முறையில் செய்முறை :

- வாழைப்பூவின் மெலிந்த வெளிப்புற இலைகளை நீக்கி, உள்ளே உள்ள மென்மையான பூக்களை மட்டும் எடுக்கவும். பூக்களில் உள்ள கிடார் மற்றும் நரம்பு பகுதியை எடுத்து விடவும். 
- இவற்றை பொடியாக நறுக்கி, மஞ்சள்நீர் அல்லது புளி நீரில் 10 நிமிடங்கள் ஊற விடவும். இது பசை மற்றும் கசப்பு தன்மையை குறைக்கும்.
- ஒரு வாணலியில் 1 டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து மிதமான தீயில் நன்றாக வறுக்கவும். வறுத்த பிறகு, இதை தனியாக எடுத்து வைக்கவும்.
- அதே கடாயில் நறுக்கிய வாழைப்பூவை சேர்த்து 5-7 நிமிடங்கள் மிதமான தீயில் வதக்கவும்.
- வாழைப்பூ மென்மையாகி வந்தவுடன், அதனை ஆறவிடவும்.
- அரைக்கும் முன், வறுத்த மசாலா, புளி, தேங்காய் துருவல், உப்பு சேர்த்து மிக்சியில் ஒரு முறை ஓட்டவும்.
- பிறகு, வாழைப்பூ சேர்த்து மென்மையாக அல்லது கொரகொரப்பாக அரைக்கலாம்.
- ஒரு சிறிய வாணலியில் 1 டீஸ்பூன் நல்லெண்ணெய், கடுகு, பெருங்காயத்தூள், கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- இப்படி அரைத்த சட்னியில் சேர்த்தால் அசல் கிராமத்து மணம் வரும்!

பரிமாறும் முறைகள் :

- சூடான சாதத்தில் ஒரு சொட்டு நெய் சேர்த்து சட்னியுடன் சாப்பிட்டால், அது உண்மையான தென்னிந்திய சுவை.
- இட்லி, தோசை  உடன் கெட்டியான சட்னியாக வைத்தால், தோசை, இட்லிக்கு மிகவும் பொருத்தமான ஒரு உணவு.
- சப்பாத்தி, பரோட்டா உடன் இதை சிறிது தண்ணீர் சேர்த்து குழம்பு மாதிரியே செய்யலாம்.
- கீரை சாதம் அல்லது வெந்தயக் குழம்புடன் சூப்பரான சாப்பாடு.

மொறு மொறு ரவா மசாலா தோசை சட்டென தயார் செய்ய இதோ 6 சூப்பர் டிப்ஸ்

வாழைப்பூ சட்னியின் ஆரோக்கிய நன்மைகள் :

- இரும்புச்சத்து அதிகம் உள்ளதால் ரத்தசோகை பிரச்சினைக்கு சிறந்த உணவு.
- நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவு என்பதால் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.
- செரிமான சக்தியை அதிகரிக்கும் என்பதால் பசை தன்மை மற்றும் நார் அதிகம் இருப்பதால் வயிற்றிற்கு நல்லது.
- இயற்கை சுவை உள்ளதால் வேகமாகவும் எளிமையாகவும் செய்யலாம்.

இந்த வாழைப்பூ சட்னி, உங்கள் சமையலறையில் ஒரு புதிய உணவாக சுவைத்துப் பாருங்கள்! பாரம்பரிய மணமும், கிராமத்து நலமும் தரும் உணவு

PREV
click me!

Recommended Stories

பானிபூரி சாப்பிட முயன்ற பெண் திறந்த வாயை மூட முடியாமல் தவிப்பு.. ஷாக்கிங் வீடியோ!
சாம்பாரை கண்டுபிடித்த ஊர் தஞ்சாவூர்..! சசி தரூர் சொன்ன சாப்பாட்டு மேட்டர்!