இந்த தீபாவளிக்கு சுவையான ரசகுல்லா மற்றும் காஜுகட்லி எப்படி சுவையாகச் செய்வது என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..
இன்னும் சில நேரத்தில் தீபாவளி வரப்போகுது. இந்நாளில் புதிய ஆடை அணிந்து பட்டாசு வெடித்து மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள். பொதுவாகவே தீபாவளி என்றாலே பட்டாசுக்கு அடுத்தபடியாக நம் எல்லாருடைய மனதிலும் தோன்றுவது இனிப்புதான். ஒவ்வொரு தீபாவளி அன்றும் பலரது வீடுகளில் முருக்கு, சீவல், குலாப்ஜாம், காரசேவு, பஜ்ஜி, வடை தயாரிப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு தீபாவளிக்கு உங்கள் வீட்டில் இனிப்பு வகைகளைச் செய்து உண்டு மகிழுங்கள்.
ரசகுல்லா:
ரசகுல்லா செய்வதற்கு பாலாடைக்கட்டி தேவை என்பதால், அவற்றை தயாரிக்க அதிகம் நிறைந்த பால் எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு பாலை சூடு படுத்தவும். பால் நன்கு கொதித்த பிறகு அதில் எலுமிச்சை சாறு அல்லது வினிகர் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் பால் தயிராக மாறும். பின் அவற்றை ஒரு துணிக்குள், போட்டு நன்கு பிழிய வேண்டும். இப்படி செய்தால் தண்ணீர் வெளியேறி விடும். பின் துணிக்குள் இருக்கும் பாலாடைக்கட்டியை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டிக் கொள்ளுங்கள். இதனையடுத்து, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் உங்கள் தேவைக்கேற்ற சர்க்கரையைச் சேர்த்து கொதிக்க வையுங்கள். நல்ல பக்குவ நிலைக்கு வந்த பின் உருட்டி வைத்த உருண்டைகளை அதனுள் போடுங்கள். ஒரு மணி நேரம் கழித்து
உங்கள் மனதை கொள்ளையடித்த ரசகுல்லா ரெடி!!
காஜு கட்லி:
இதநைய் செய்ய முதலில், தேவையான அளவு முந்திரி பருப்புகளை எடுத்துக் கொள்ளுங்கள். பின் அவற்றை இரண்டு மூன்று முறை தண்ணீரில் நன்கு கழுவி கொள்ளுங்கள். பின்னர் ஒரு பாத்திரத்தில் முந்திரியை போட்டு இரண்டு முதல் மூன்று மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் நீங்கள் ஒரு கப் பாலையும் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் முந்திரி மென்மையாக மாறும். பிறகு ஊறிய முந்திரிகளை மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்க வேண்டும். அரைக்கும் போது தண்ணீர் ஊற்றக்கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். முந்திரி பேஸ்ட் நிலையில் அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
அதன்பின்னர், ஒரு பேனில் அரைத்த முந்திரி பேஸ்டை போட்டு, அவற்றுடன் தேவையான அளவு சர்க்கரையையும் சேர்த்து நன்கு கிண்ட வேண்டும். இதனுடன் எக்காரணம் கொண்டும்
நெய் அல்லது எண்ணெய் சேர்க்க வேண்டும். சிறிது நேரம் கழித்து கொஞ்டம் முந்திரி பேஸ்ட் எடுத்து உருண்டையாக்க பிடிக்க முடிகறதா என்று பாருங்கள். உருண்டையாக்க முடிகிறது என்றால் அடுப்பை அனைத்து விடவும்.
பிறகு ஒரு ஸ்டீல் தட்டு அல்லது பாத்திரத்தில் வெண்ணெய் தடவி அதன் மீது இந்த முந்திரி பேஸ்ட்டை பரப்புங்கள். சிறிது நேரம் கழித்து அதன் மீது சில்வர் லைனின் சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு டைமண்ட், சிலிண்டர் போன்ற வடிவங்களில் வெட்டிக்கொள்ளுங்கள். இப்போது தித்திப்பான காஜு கட்லி ரெடி!!
இந்த சுவையான இரண்டு இனிப்புகளை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு கொடுத்து இந்த தீபாவளியை கொண்டாடி மகிழுங்கள்...