வாருங்கள்! ருசியான அவல் சர்க்கரை பொங்கலை வீட்டில் எப்படி எளிமையாக செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
அறுவடை திருநாளாம் பொங்கல் பண்டிகையின் போது நெய் மணம் கமழும் சர்க்கரை பொங்கல், தித்திப்பான கரும்பு, பல வகையான இனிப்பு மற்றும் பண்டங்கள் என்று குடும்பத்துடன் ஒன்று கூடி மகிழ்வோடு கொண்டாடுவோம்.
வழக்கமாக பொங்கல் பண்டிகையின் போது, சர்க்கரை பொங்கல், பால் பொங்கல் என்று சமைத்து தெய்வத்திற்கு படைத்து வழிபடுவோம்.
எப்போதும் செய்கின்ற சர்க்கரை பொங்கலை இந்த முறை கொஞ்சம் மாற்றாக அரிசியில் செய்யாமல் அவல் சேர்த்து செய்து இந்த பண்டிகையை சிறப்பாக கொண்டாடலாம்.
வாருங்கள்! ருசியான அவல் சர்க்கரை பொங்கலை வீட்டில் எப்படி எளிமையாக செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள் :
பொங்கல் பண்டிகையில் செய்ய கூடிய செம்ம ருசியான கொத்தமல்லிப் பொங்கல்!
செய்முறை :
முதலில் அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் பாசிபருப்பினை சேர்த்து நன்கு வாசனை வரும் வரை வறுத்துக் கொண்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதே வாணலில் அவலைப் போட்டு தீயினை சிம்மில் வைத்து அவல் சூடாகும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும்.குங்கும பூவை பாலில் சேர்த்து ஊற வைத்துக் கொண்டு எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். வெல்லத்தை துருவி அல்லது பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் பாசிபருப்பினை சேர்த்து தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ள வேண்டும். பாசிப்பருப்பு வெந்த பிறகு, அதில் பாலும், தண்ணீரும் கலந்து ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். பின்பு பாசிப்பருப்பு கொதிக்க ஆரம்பிக்கும் போது அதில் அவலை சேர்த்து கை விடாமல் கிளறி கட்டிகள் ஏறப்டாதவாறுபார்த்துக் கொள்ள வேண்டும். பின் அதனை ஒரு தட்டு போட்டு மூடி வேக விட வேண்டும். வெந்த பிறகு இதில் குங்குமப்பூ சேர்த்து கலந்து விட வேண்டும்.
அடுப்பில் ஒரு கனமான பாத்திரம் வைத்து அதில் பொடித்த வெல்லத்தைப் சேர்த்து அதில் தண்ணீர் ஊற்றி பாகு செய்து கொண்டு வடிகட்டி கொள்ள வேண்டும். இப்போது வெல்ல பாகினை பொங்கல் கலவையில் ஊற்றி நன்றாக கிளறி விட வேண்டும். அதில் ஏலக்காய் தட்டி சேர்த்து கொண்டு நன்றாக கிளறி விட வேண்டும்.
அடுப்பில் ஒரு சின்ன பான் வைத்து அதில் நெய் ஊற்றி திராட்சை மற்றும் முந்திரி சேர்த்து வறுத்துக் கொண்டு அதனை நெய்யுடன் சேர்த்து பொங்கலில் சேர்த்து கிளறி விட்டு பரிமாறினால் சூப்பரான சுவையில் அவல் சர்க்கரை பொங்கல் ரெடி