
சென்னை : வாழைப்பழம் பலருக்கும் விருப்பமான ஒரு பழமாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிட ஏற்றது. ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்தது என்பதால் உடற்பயிற்சி செய்பவர்களின் முதல் சாய்சாக இருப்பது வாழைப்பழம் தான். இதில் பொட்டாசியம், வைட்டமின்கள், தாதுக்கள் இயற்கையாகவே நிறைந்திருக்கிறது. இதனால் ஆரோக்கியத்திற்கும் நல்லது. ஆற்றலையும் வழங்குகிறது. உடல் எடையை பாதுகாப்பதில் மிகவும் உதவுகிறது. வாழைப்பழத்தில் நன்மைகள் அதிகம் இருந்தாலும் இதோடு சில உணவுகளை சேர்த்து சாப்பிடும் போது மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடும்.
சில தவறான உணவுகளுடன் வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிட்டால் ஒவ்வாமை, செரிமான பிரச்சனை போன்ற பல ஆபத்தான பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும். அதனால் வாழைப்பழம் சாப்பிடுகிறோம் என்பதை விட, வாழைப்பழத்துடன் எந்தெந்த உணவுகளை சேர்த்து சாப்பிடுகிறோம் என்பத மிக மிக முக்கியமானதாகும். தவறுதலாக மறந்தும் கூட வாழைப்பழத்துடன் சாப்பிடக் கூடாத முக்கியமான 5 விஷயங்களை வாங்க தெரிந்து கொள்ளலாம்.
வாழைப்பழத்துடன் சாப்பிட கூடாத உணவுகள் :
பால் பொருட்கள் :
பால் அல்லது பால் பொருட்களுடன் வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிடவே கூடாது. இது ஆரோக்கியத்திற்கு தீமையான விளைவுகளை ஏற்படுத்தும். பாலில் உள்ள புரதங்கள், வாழைப்பழத்தில் உள்ள இயற்கை நொதிகளுடன் வினைபுரிந்து, வாயு, வீக்கம், செரிமான பிரச்சனை, அசெளகரியம் பிரச்சனைகளையும், சில சமயங்களில் ஆஸ்துமா போன்ற ஆபத்தான பிரச்சனைகளையும் கூட ஏற்படுத்தி விடும்.
புரதம் அதிகம் நிறைந்த பொருட்கள் :
இறைச்சி போன்ற உயர் புரதம் கொண்ட உணவுகளுடன் வாழைப்பழங்களை கண்டிப்பாக சேர்த்து சாப்பிடவே கூடாது. இத செரிமானத்தை தடுத்து விடும். அதிக புரதம் கொண்ட பொருட்கள் செரிமான வேகத்தை குறைத்து விடும். இதனால் வாயு பிரச்சனை, வயிறு வீக்கம், செரிமான உறுப்புக்களில் அழுத்தம் போன்றவை ஏற்படும். இதனால் வயிற்று வலி, குமட்டல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும்.
பேக்கரி ஐயிட்டங்கள் :
வாழைப்பழத்தை பேக்கிங் செய்யப்பட்ட உணவுப் பொருட்களுடன் சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். பேக்கிங் பொருட்களில் சர்க்கரை அதிகம் இருக்கும். இது வாழைப்பழத்தில் உள்ள இயற்கையான சர்க்கரை அளவுடன் சேர்ந்து, ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகப்படுத்தி விடும். இதனால் விரைவில் ஆற்றல் இழப்பு ஏற்படம். மனநிலை மாற்றங்கள், செரிமான பிரச்சனைகள் ஏற்படும். வாழைப்பழங்களை சாப்பிட்டு சிறிது நேர இடைவெளிக்கு பிறகு தனியாக மற்ற பொருட்களை சாப்பிடுவது புத்திசாலித்தனமானது.
சிட்ரஸ் பழங்கள் :
எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை போன்ற சிட்ரஸ் பழங்களுடன் வாழைப்பழங்களை சாப்பிடுவதால் ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படும். சிட்ரஸ் பழங்கள், அதிக அமிலத்தன்மை கொண்டவை. இவை வாழைப்பழத்தில் உள்ள இயற்கை என்சைம்களுடன் வினைபுரிந்து செரிமான பிரச்சனைகள், வயிறு வீக்கம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும்.
அவகேடோ :
வாழைப்பழத்தை அவகேடோவுடன் சேர்த்து சாப்பிடுவது சரியான முறை கிடையாது. இந்த இரண்டு உணவுகளுமே அதிக நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் கொண்டவை. இவற்றை ஒன்றாக சேர்த்து சாப்பிடும் போது செரிமான உறுப்புக்களின் அதிகப்படியான அழுத்தம் ஏற்பட்டு, வயிற்று உப்பிசம், வலி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும்.