ஆயுர்வேதம் படி கீரையை இப்படி சமையுங்க..இனி வாத பிரச்சனை இருக்காது...!!

By Kalai Selvi  |  First Published Aug 30, 2023, 11:19 AM IST

உங்கள் வீட்டில் நீங்கள் கீரை சமைக்கும் முன் சில எளிய குறிப்புகளை பின்பற்ற வேண்டும்.


பொதுவாகவே கீரையில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் ஆயுர்வேதம் உணவில் கீரையை அதிகம் சேர்ப்பதில்லை தெரியுமா? அதற்கான காரணம் என்ன மற்றும் கீரை பற்றி ஆயுர்வேதம் என்ன சொல்கிறது என்பதை குறித்து இங்கு தெளிவாக பார்க்கலாம் வாங்க..

கீரையை குறித்து ஆயுர்வேதம் சொல்லும் காரணம்:
ஆயுர்வேதம் படி, கீரையை சரியான பருவத்தில் சாப்பிட்டால் அதனுடைய பலன் முழுமையாக கிடைக்கும் என்பது நம்பிக்கை.

Tap to resize

Latest Videos

மேலும் கீரையை அதிகமாக சாப்பிட்டால் வாயு, அமிலத்தன்மை மற்றும் வீக்கம் ஏற்படும் என்று நம்பப்படுகிறது. இதனால் உடலில் நச்சுக்கள் உருவாகுவதால், அடிக்கடி மூட்டு வலி, செரிமானம், கல்லீரல், தோல், சுவாச அமைப்பு போன்ற பிரச்சினைகளை உண்டாக்குகிறது. 

இதையும் படிங்க:  ஆண்மை அதிகரிக்க மிக சிறந்த கீரை இதுதான்...! முயற்சித்து பாருங்களேன்...!

குறிப்பாக கீரைகள் வாத பண்புகளைக் கொண்டுள்ளதால், அவற்றை மிதமாக உட்கொள்வது மிகவும் நல்லது. மேலும் இவற்றை சரியான முறையில் சுத்தம் செய்ய மற்றும் கழுவ வேண்டும். எனவே, கீரை சாப்பிடும் போது வாதம் ஏற்படுவதை தவிர்க்க கீரை சமைக்கும் முன் சில எளிய குறிப்புகளைப் பின்பற்ற வேண்டும்.

ஆயுர்வேதம் படி கீரையை எப்படி சமைக்கு வேண்டும்:

  • கீரையை சமைக்கும் முன் 3-4 நிமிடங்கள் தண்ணீரில் நன்கு  கழுவ வேண்டும். பின் தண்ணீரை வடிகட்டி, சாதாரண வெப்பநிலையில் கீரையை பரப்பி உலர வைக்க வேண்டும்.
  • இதனை அடுத்து கீரையின் தண்டை அகற்றி, அவற்றை  சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும். 
  • பின் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் பூச்சி அதனை சூடு படுத்த வேண்டும். தண்ணீர் நன்கு சூடானதும் அதில் நறுக்கிய கீரையை போட வேண்டும். 5-10 நிமிடங்கள் அப்படியே விட்டு விடவும்.
  • மேலும் ஆயுர்வேதத்தின்படி கீரையில் நச்சு மற்றும் வாத தாக்கத்தை குறைக்க மஞ்சள், திப்பிலி, சீரகம், கொத்தமல்லி இலை, வெந்தய இலை போன்ற மசாலாப் பொருட்கள் சேர்க்கலாம். இவை நச்சு தாக்கத்தைக் குறைக்க உதவும். குறிப்பாக திப்பலி, வாதம், பித்தம் மற்றும் கபாவின் தோஷங்களை சமநிலைப்படுத்த மிகவும் உதவுகிறது.
  • எனவே, கீரை சாப்பிடுவதற்கு முன் அவற்றை நன்றாக சமைப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க:  கீரை ஸ்மூத்தி உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்குமா? ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுவது என்ன?

 

click me!