காரைக்குடி கற்கண்டு வடையை வீட்டில் சுலபமாக செய்வது எப்படி என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க!
இனிப்பு வகைகளில் பல வகை இருந்தாலும், கற்கண்டு வடைக்கு ஒரு கூட்டம் அடிமை என்றே கூறலாம். இந்த கற்கண்டு வடையானது காரைக்குடியின் ஸ்பெஷல் இனிப்பு வகை ஆகும்.
காரைக்குடி மக்கள் இந்த ஸ்வீட் வடையை திருமண நாள், பிறந்தநாள் போன்ற விஷேச நாட்களிலும், தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களிலும் செய்து சாப்பிடுவர். இதன் சுவை அலாதியாக இருக்கும். இதனை தான் இன்றைய பதிவில் பார்க்க இருக்கிறோம்.
கற்கண்டும்,உளுந்தும் சேர்த்து செய்யப்படும் இதனை கற்கண்டு வடை அல்லது ஸ்வீட் மெது வடை என்று அழைப்பர். இந்த காரைக்குடி கற்கண்டு வடையை வீட்டில் சுலபமாக செய்வது எப்படி என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க!
தேவையான பொருட்கள் :
உளுத்தம் பருப்பு – 1 கப்
கற்கண்டு -1 கப்
பச்சரிசி – 1 கையளவு
இனி ஐஸ்க்ரீமை ஈஸியா வீட்டிலிலேயே செய்யலாம் வாங்க!
செய்முறை:
முதலில் உளுத்தம் பருப்பை மற்றும் பச்சரிசி ஆகியவற்றை தண்ணீரில் அலசி விட்டு அதனை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி,3 மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் தண்ணீர் இல்லாமல் வடிகட்டி விட்டு, உளுந்து மற்றும் பச்சரிசியை கிரைண்டரில் போட்டு ஆட்டி கொள்ள வேண்டும். உளுந்தானது 50 சதவீதம் அரைபட்டவுடன்,பொடித்து வைத்துள்ள கற்கண்டை சிறுக சிறுக உளுந்தோடு சேர்த்து ஆட்ட வேண்டும்.
கற்கண்டில் இருக்கும் தண்ணீரே போதும். இப்படி அரைத்தால் தான் வடையில் எண்ணெய் பிடிக்காமல் இருக்கும்.(தண்ணீர் சேர்க்காமல் அரைக்க வேண்டும்) இப்போது மாவனது நன்கு அரைபட்டு பொங்கி வரும் போது, மாவினை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு அகன்ற வாணலி வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, சூடாக்க வேண்டும். எண்ணெய் சூடான பின் தீயினை சிம்மில் வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி கொண்டு, அதனை ஒரு பக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும்.இப்போது கையை தண்ணீரில் டிப் செய்து விட்டு, மாவினை கையில் எடுத்துக் கொண்டு, ஒரு சின்ன ஹோல் போட்டு எண்ணெயில் போடா வேண்டும். வடையானது ஒரு புறம் சிவந்த பின் ,மறுபுறம் திருப்பி போட்டு சிவக்க செய்ய வேண்டும் . இப்படி அனைத்து மாவினையும் வடை போன்று தட்டி பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்ளோதான் சூப்பரான கற்கண்டு வடை ரெடி!!!
(இதனை 2 நாட்கள் வரை வைத்தும் சாப்பிடலாம். கெட்டு போகாமல் இருக்கும்)