தமிழகத்தில் பல வகையான உணவு முறைகள் பின்பற்றபப்டுகின்றன. அந்த வகையில் இன்று நாம் நாஞ்சில் நாடு ஸ்டைலில் ஒரு உணவு வகையை பார்க்க உள்ளோம்.
அசைவ உணவு என்றவுடன் பலருக்கும் பிடித்தது என்றால் கடல் உணவாகிய மீனை அநேகமானோருக்கு பிடிக்கும். மீனை வைத்து மீன் குழம்பு, பிரை , தொக்கு என்று பல வகையான ரெசிபிஸ் செய்து நாம் சுவைத்து இருப்போம். அந்த வகையில் இன்று நாம் நாஞ்சில் நாட்டு முறையில் சுவையான மீன் குழம்பு எப்படி வீட்டிலேயே செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
மீன் - 250 கிராம் (திருக்கை, வாளைமீன் தவிர)
சின்ன வெங்காயம் - 4
தேங்காய் துருவல் - 3/4 கப்
மிளகு - 3/4 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன்
தனியா தூள் - 2 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
புளி -நெல்லிக்காய் அளவு
கறிவேப்பிலை - 2 கொத்து
உப்பு - தேவையான அளவ
எண்ணெய் தேவையான அளவு
மதுரையின் பிரசித்தி பெற்ற முனியாண்டி விலாஸ் சிக்கன் குழம்பு செய்யலாம் வாங்க!
செய்முறை:
மீனை தோல் எடுத்து சுத்தம் செய்துகொண்டு நன்றாக அலசியபின் தனியாகஒரு பாத்திரத்தில் வைத்துக் கொளல் வேண்டும். பச்சை மிளகாயை நடுவில் கீறி வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது மிக்ஸி ஜாரில் சின்ன வெங்காயம், துருவிய தேங்காய்,மிளகு , மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் தனியாதூள் ஆகியவற்றை சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் இந்த பேஸ்ட்டை போட்டு அதனுடன் உப்பு மற்றும் புளிக்கரைசல் சேர்த்து உப்பு, காரம் சரி பார்த்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு கடாய் வைத்து அதில் சுத்தம் செய்து வைத்துள்ள மீனை அதில் புளி மற்றும் மசாலா கரைசலை ஊற்ற வேண்டும். பின் கீறி வைத்துள்ள பச்சை மிளகாயை சேர்த்து கிட்டதட்ட 10 நிமிடங்கள் தனியே வைக்கவும்.
அடுப்பில் மிதமான தீயில் இந்த கடாயை வைத்து இந்த மீன் கலவையை கொதிக்க விட வேண்டும். நாடு நடுவே பாத்திரத்தை சுழற்றி விட வேண்டும். கிளறி விட்டால் னால் மீன் உடைய நேரிடும்.
இறுதியாக ஒரு pan வைத்து அதில் சிறிது எண்ணெய் சேர்த்து வெந்தயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளித்து குழம்பில் ஊற்றி விட .அவ்ளோதான் சுவையான நாஞ்சில் நாட்டு மீன் குழம்பு ரெடி!