சில்லென்று பெய்யும் மழையில் சுட சுட "வரகு சேமியா சீஸ் பால்ஸ்" செய்து சாப்பிடுங்க!

By Dinesh TG  |  First Published Oct 31, 2022, 4:55 PM IST

சுட சுட வரகு சேமியா சீஸ் பால்ஸ் இப்படி செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் விதத்தில் இதன் சுவை சூப்பராக இருக்கும். இதனை எப்படி வீட்டில் செய்வது என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்


தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கி, அநேக இடங்களில் பரவலாக மழை பெய்யவும் ஆரம்பித்து விட்டது. இப்படி சில்லென்று பெய்யும் மழையில் சுட சுட வரகு சேமியா சீஸ் பால்ஸ் இப்படி செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் விதத்தில் இதன் சுவை சூப்பராக இருக்கும். இதனை எப்படி வீட்டில் செய்வது என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

தேவையான பொருள்கள்:- 

Tap to resize

Latest Videos

வரகு சேமியா - 100 கிராம் 
துருவிய சீஸ் - 1 கப்
கார்ன் பிளார் - 50 கிராம் 
மைதா மாவு - 4 ஸ்பூன் 
வெங்காயம் - 1 
உருளைக்கிழங்கு- 1
மல்லித் தூள் - 1 ஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன் 
சில்லி த்தூள் - 1 ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு

இன்று இரவு சப்பாத்திக்கு ஸ்பைஸியான பேபி கார்ன் மசாலா இப்படி செய்து பாருங்க ! 

செய்முறை:- 

முதலில் உருளைக் கிழங்கை நன்றாக வேக வைத்து கொண்டு, பின் அதனை நன்கு மசித்து கொள்ள வேண்டும். பின் வெங்காயத்தை பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கை போட்டு ,அதில் துருவிய சீஸ் சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ள வேண்டும்.பின் அதில் மஞ்சள் தூள்,சில்லித் தூள்,மல்லித்தூள் மற்றும் வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். 

பிறகு ஒரு பாத்திரம் எடுத்து அதில் சீஸ், மசித்த உருளைக்கிழங்கு, தனியாத்தூள், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், வெங்காயம் போன்றவற்றை சேர்த்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும். பின் கலவையினை சிறிய சிறிய உருண்டைகளாக செய்து கொள்ள வேண்டும்.இப்போது ஒரு கிண்ணத்தில் கார்ன் பிளார் மற்றும் மைதா சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி அதனை கரைத்துக் கொள்ள வேண்டும். 

பின் ஒரு தட்டில் வரகு சேமியாவை பொடித்துக் கொண்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.அடுப்பில் ஒரு பான் வைத்து கொஞ்சம் எண்ணெய் ஊற்றி கொள்ள வேண்டும். எண்ணெய் சூடான பின்பு, உருட்டி வைத்துள்ள சீஸ் பால்களை ஒவ்வொன்றாக எடுத்து, மாவில் டிப் செய்த பின்,வரகு சேமியாவில் பிரட்டி எடுத்து, அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து ,எண்ணெயில் போட்டு பொன்னிறமாக ஆகும் வரை பொறித்து எடுத்தால் வரகு சேமியா சீஸ் பால்ஸ் ரெடி!!!

இதனை டொமேட்டோ கெட்சப் வைத்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். 

click me!