சுவையான மொறுமொறுப்பான க்ரில்ட் பொட்டேட்டோ எப்படி செய்வது என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
பள்ளி முடித்து வரும் குழந்தைகளுக்கு அவர்களுக்கு பிடிக்கும் வகையில் ஒரு ஸ்னாக்ஸ் செய்ய வேண்டும்.அதே நேரத்தில் வழக்கமாக செய்யும் ஸ்னாக்ஸ்களான புட்டு, வடை, போண்டா என்றில்லாமல்,கொஞ்சம் ஈஸியா, வித்தியாசமா, மொறுமொறுவென ஒரு ஸ்னாக்ஸ் செய்ய வேண்டும் என்று விருப்பினால், இந்த க்ரில்ட் பொட்டேட்டோ செய்து கொடுங்க. வைத்துக் கொடுத்தான் அடுத்த நிமிடமே தட்டு காலி ஆகிவிடும்.
இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இதன் சுவை சூப்பராக இருக்கும். குறிப்பாக மழைககாலம் தொடங்கியுள்ள நிலையில், இது போன்ற ஒரு ஈவினிங் ஸ்னாக்ஸ் செய்து கொடுத்தால், கொட்டும் மழையில், சுட சுட இதனை சாப்பிட வைத்து தாருங்கள். அனைவரும் இதனை மீண்டும் எப்போது செய்வீர்கள் என்று ஆசையாக கேட்பார்கள். அப்படி ஒரு சுவையான மொறுமொறுப்பான க்ரில்ட் பொட்டேட்டோ எப்படி செய்வது என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
உருளை கிழங்கு - 8 (சிறியது)
பூண்டு பொடி - 1 ஸ்பூன்
மிளகு தூள் - 1 ஸ்பூன்
ஆலிவ் ஆயில் - தேவையான அளவு
உப்பு - சிட்டிகை
நன்மையையும் சுவையையும் அள்ளித்தரும் ப்ரக்கோலி கிரேவியை ஈஸியாக செய்யலாமா!
செய்முறை:
முதலில் உருளைக்கிழங்கினை நன்கு அலசி விட்டு, தோல் சீவி வைத்துக் கொள்ள வேண்டும்.அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து தண்ணீர் ஊற்றி, 2 சிட்டிகை உப்பு தூவி அதனுள் தோல் சீவிய உருளைக் கிழங்கினை போட்டு 5 நிமிடங்கள் வரை வேக வைத்துக் கொள்ள வேண்டும். (அரை வேக்காட்டில் வேகவைத்துக் கொள்ள வேண்டும்)
நன்கு வெந்த பிறகு, தண்ணீர் இல்லாமல் வடிகட்டிக் கொண்டு கொஞ்ச நேரம் ஆற வைத்துக் கொள்ள வேண்டும்.பின் ஸ்போர்க் வைத்து வெந்த கிழங்கினை கொஞ்சம் குத்தி விட வேண்டும். அவனில் வைக்க போகும் பாத்திரத்தில் கிழங்கினை மாற்றிக் கொண்டு, கிழங்கின் மேல் பூண்டு பொடி,மிளகுத்தூள்,ஆலிவ் ஆயில் ஆகியவற்றை அதன் மேல் தூவி நன்றாக பிரட்டி எடுத்து கொள்ள வேண்டும்.அவனில் அதனை சுமார் 20 நிமிடங்கள் வரை வேக வைக்க வேண்டும். அவ்ளோதாங்க சூப்பரான சுவையில் க்ரில்ட் பொட்டேட்டோ ரெடி! இதனை சுட சுட சாஸ் வைத்து சப்பிவிட்டால் , செய்து கொடுத்த அடுத்த நிமிடம் தட்டு காலி ஆகி விடும்.