ஆரோக்கியமன வாழ்விற்கு சத்தான "கேழ்வரகு பக்கோடா" செய்து சாப்பிடுங்க!

By Dinesh TGFirst Published Nov 18, 2022, 7:53 PM IST
Highlights

சத்தான கேழ்வரகு பக்கோடாவை எப்படி செய்வது என்று பரர்களாம் வாங்க! 

சிறுதானிய வகைகளுள் ஒன்றான கேழ்வரகு என்றவுடன் நாம் அனைவரும் புட்டு, கூழ்,களி,அடை ஆகியவை தான் அதிகமாக செய்து சாப்பிட்டு இருப்போம். கேழ்வரகு பக்கோடா செய்து சாப்பிட்டு உள்ளீர்களா? இல்லையா ! அப்படியென்றால் கேழ்வரகு பக்கோடாவை வீட்டில் எப்படி சுவையாக செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். 

சிறுதானியங்கள் வைத்து செய்யப்படும் அனைத்து உணவுகளும் நம் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றதாக இருக்கும். அந்த வகையில் கேழ்வரகு பக்கோடாவானது சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற ஒரு உணவாகும். இதனை பள்ளி முடித்து வரும் குழந்தைகளுக்கும், அலுவலகம் முடித்து வரும் பெரியவர்களுக்கும் ஒரு சத்தான ரெசிபி செய்ய வேண்டும் என்றால் இதனை தாராளமாக செய்து கொடுக்கலாம்.

இந்த மழைக்காலத்தில் மாலை நேரத்தில் சுட சுட காபியும், ஒரு சூடான ஒரு தின்பண்டம் மொறுமொறுவாகும் அதுவும் ஆரோக்கியம் நிறைந்த ஒரு ஸ்னாக்ஸாகவும் மேலும் இது வரை அதிகமாக செய்யாத ஒரு ஸ்னாக்ஸான இதனை ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க!

சத்தான கேழ்வரகு பக்கோடாவை எப்படி செய்வது என்று பரர்களாம் வாங்க! 

கேழ்வரகு செய்ய தேவையான பொருட்கள்:

கேழ்வரகு மாவு – 100 கிராம்
கார்ன் பிளார்-1 ஸ்பூன் 
அரிசி மாவு – 1 ஸ்பூன் 
கெட்டி தயிர் – 1 ஸ்பூனக்
வெங்காயம் – 2 
பச்சை மிளகாய் – 1
இஞ்சி – 1 இன்ச் 
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி- கையளவு 
கறிவேப்பிலை – கையளவு 

செட்டிநாடு ஸ்பெஷல் கற்கண்டு வடை! இப்படி செய்து பாருங்க

செய்முறை:

முதலில்வெங்காயத்தை மெல்லிதாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். இஞ்சி,பச்சை மிளகாயயை மிக பொடியாக அரிந்துக் கொள்ள வேண்டும். மல்லித்தழை மற்றும் கறிவேப்பிலையையும் மிக சிறிதாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.  இப்போது ஒரு கிண்ணத்தில், கேழ்வரகு மாவு, கார்ன் பிளார், அரிசி மாவு மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட்டு, பின் அதில் கெட்டி தயிர் ஊற்றி, கிளறி விட்டுக் கொள்ள வேண்டும். 

இப்போது கலவையில் மெல்லிதாக அரிந்த வெங்காயம்,இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை,மல்லித்தழையை சேர்த்து பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து, அதில் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் சூடான பின்பு, அடுப்பின் தீயினை சிம்மில் வைத்துக் கொண்டு, பிசைந்த மாவினை கையில் எடுத்துக் கொண்டு, பக்கோடா போன்று உதிர்த்து போட்டு பொறித்தெடுத்தால் சத்தான கேழ்வரகு பக்கோடா ரெடி!

click me!